உங்கள் மூளையின் சுறுசுறுப்பை அறிய உதவும் App...!!!


உங்கள் மூளை எப்போது சுறுசுறுப்பாக செயல்படுகிறது என்பது உங்களுக்கே தெரியாத ரகசியமாக இருக்கலாம். ஆனால் அதை கண்டுபிடித்து சொல்ல ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது தெரியுமா?

பிரிட்டனை சேர்ந்த உளவியல் வல்லுனர்கள் உருவாக்கியுள்ள மூ-கியூ ( ஐகியூ போல இது மனநிலைக்கானது) எனும் இந்த செயலியை பயன்படுத்தினால், உங்கள் மூளை எப்போது சுறுசுறுப்பாக செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதற்காக, இந்த செயலியை டவுண்லோடு செய்து , அது கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து, அதன் பின்னர் வைக்கப்படும் சோதனையில் பங்கேற்க வேண்டும்.

கேள்விகள் உங்கள் மனநிலையை அறிந்து கொள்ளும் வகையில் அமைந்திருக்கும். அதாவது உற்சாக மனநிலையில் இருக்கிறீர்களா? அல்லது வாடிப்போன மலர்களாக இருக்கிறீர்களா என இந்த செயலி அனுமானித்துக்கொண்டு, அதன் பிறகு உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும் கேள்விகளை கேட்டு சோதனை வைக்கும்.

மொத்தம் ஐந்து முறை இந்த சோதனையில் பங்கேற்றால் போதும். அதனடிப்படையில் உங்கள் செயல்பாட்டை புரிந்து கொண்டு , அறிக்கையை அளிக்கும். அந்த அறிக்கை, உங்கள் மூளையின் செயல்பாடு எந்த நேரத்தில் சிறந்ததாக இருக்கிறது என்பதை உணர்த்தும். அழகாக வரைபட விவரங்களுடன், ஒரு நாளின் குறிப்பிட்ட நேரங்களில் உங்கள் செயல்பாடு எப்படி அமைந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

எந்த நேரத்தில் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது என இந்த செயலி சுட்டிக்காட்டுகிறதோ , அந்த நேரத்தில் உங்களது முக்கியமான பணிகளை வைத்துக்கொள்ளலாம்.

பொதுவாக மனநிலைக்கும், மூளையின் செயல்பாட்டுக்கும் தொடர்பு இருப்பதாக உளவியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். இது குறித்த ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த செயலியின் பின்னே உள்ள ஹங்க்ரி மைண்ட்ஸ் லேப் குழுவினர், இது தொடர்பான ஆய்வை நடத்தி மூ-கியூ செயலியை உருவாக்கி உள்ளனர். உங்கள் மூளையின் ஆற்றல் பற்றி இந்த செயலி தகவல் தருவதோடு, மூளைக்கான பயிற்சியையும் பரிந்துரைக்கிறது. ஆம் மூளைக்கும் பயிற்சி அவசியம் என்கின்றனர்.

இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலம், உங்கள் மூளை உற்சாகமாக இருக்கும் நேரத்தை தெரிந்து கொள்வதோடு, இந்த ஆய்விலும் பங்கேற்ற பெருமையை நீங்கள் பெறலாம்.

சுவாரஸ்யமான செயலிதான். ஆனால் இப்போதைக்கு ஐபோனுக்காகதான் அறிமுகமாகி இருக்கிறது. ஆண்ட்ராய்டு வடிவம் இன்னும் வரவில்லை.

செயலி பற்றிய விவரங்களுக்கு:

0 comments:

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011