Operating System Live CD என்றால் என்ன ...?? Free Live CDs...!!!



சாதாரணமாக நீங்கள் உங்கள் கணினியை தொடங்கியவுடன், உங்கள் கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்கில் பதியப்பட்ட ஆபரேட்டிங் என்ன செய்யும்? 


கணிப்பொறி இயக்கப்பட்டவுடன் முதன் முதலில் Operating System என்ற சொல்லக்கூடிய இயங்குதள புரோகிராம்களை Hard Disc அடுக்குகளில் ஏற்றும். அதன் பிறகே அதில் குறிப்பிட்ட செயல்முறையில் சில கோப்புகளை இயக்க தொடங்கும். இக்கோப்புகள் கணினியில் உள்ள Hardware களை சரிபார்க்கும். Driver Files களை Memory-க்கு ஏற்றிக்கொள்ளும். நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம்களுக்கு ஏற்ற, அதற்கு தேவையான Library Files (கோப்புகளை) தயார்படுத்தி வைக்கும். இதுதான் கணினி உயிர்ப்பு பெற்றவுடன் செய்யும் வேலைகள். 




சரி.. Hard Disk -ல் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் செய்யும் வேலைகளை, ஹார்ட் டிஸ்க்கில் பதியபட்டாமல், சாதாரணமாக நாம் பயன்படுத்தும் CD யில் பதியப்பட்டு, கணினியை இயக்கினால் என்ன? 


இந்த சிந்தனையில் விளைவாக உருவானவே லைவ் சி.டி. 



லைவ் சி.டி. என்றால் என்ன? இந்த லைவ் சி.டி என்ன செய்யும்? 



ஹார்ட் டிஸ்க்கில் நாம் பதித்து இயக்கும் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள அனைத்து கோப்புகளையும்,  இந்த சிடி உள்ளடக்கியிருப்பதால், ஆபரேட்டிங் சிஸ்டம் (operating system) செய்யும் அதே வேலையை இந்த லைவ் சி.டி. யும் செய்யும்.  



அதாவது, பொதுவாக கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில்(Hard Disk) ஆப்பரேட்டிங் சிஸ்டம் கோப்புகள் (OS files) பதியப்பட்டிருக்கும்.  அதே ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குகான கோப்புகள்  இங்கு குறுவட்டு என்று சொல்லக்கூடிய சி.டியில் உள்ளது அவ்வளவே.



இதில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் கோப்புகள் மிக நுணுக்கமாக, செறிவுடன் கூடிய கம்ப்ரஸ் செய்யப்பட்டுள்ளது. சிடியை கணினியில் செலுத்தி இயக்கம் பெறும்பொழுது இதிலுள்ள கோப்புகள் கணினியில் உள்ள Ram Memory -ல் uncompress ஆகும்.  அதன் பிறகு அந்த RAM யை ஒரு Disk Driver ஆக கணினி டிரைவர் கோப்புகளுக்கு அறித்துவிடும். அதன் பிறகு எப்பொழுதும் போல புரோக்கிராம் கோப்புகளை அங்கிருந்து செயல்படுத்த தொடங்கும். 



அதாவது சிடியில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் கோப்புகளை அன்கம்ப்ரஸ் ரேமை (RAM) உபயோகித்துக்கொள்ளும். பிறகு அந்த ரேமையே டிஸ்க் டிரைவாக (Disk Drive) பாவித்து கணினியிலுள்ள அனைத்து டிரைவர் கோப்புகளுக்கும் 'இது தான் டிஸ்க் டிரைவ்' என்பதை உணர வைத்துவிட்டு, வழக்கம்போல ஆபரேட்டிங் சிஸ்டத்திலுள்ள புரோகிராம் கோப்புகளை செயல்படுத்த தொடங்கும்.



 பெரும்பாலான Booting disk கள் அனைத்தும் இதே செயல்பாட்டை தொடர்ந்து செய்துகொண்டுள்ளன. OS இன்ஸ்டால் செய்யும்பொழுது இதே நடைமுறையே பின்பற்றப்படுகிறது.



இவற்றையே பணம் கொடுத்து உபயோகிக்காமல் இலவசமாக உபயோகிக்க என்ன வழி என்று சிந்தித்ததின் விளைவே ஓப்பன் சோர்ஸ்(Open Source) என்று சொல்லக்கூடிய திற மூல அங்கத்தின் உறுப்பினர்கள் இந்த செயல்முறைகளை ஆராய்ந்து மேம்படுத்தி, பல்வேறு இயக்க முறைமைகளைக் கொண்டு லைவ் சிடிக்களை கண்டுபிடித்து இலவசமாக வெளியிட்டுள்ளனர். 



இன்று லினக்ஸ்சின் உபுண்டு(Ubuntu), குபுண்டு(gubuntu) ஆகிய லைவ் சிடிக்கள் கிடைப்பதோடு, விண்டோஸ் லைவ் சிடிக்களும் இணையத்தில்  இலவசமாக கிடைக்கின்றன. 



இலவச லைவ்  சி.டி.க்களை பெற்றுக்கொள்ள கீழ்க்கண்ட இணைப்புகள் உங்களுக்கு உதவும். 
1. shipit.ubuntu.com
2. www.frozentech.com/content/livecd.php
மேலும் google Search-ல் free live operating system cd என்று தேடினால் உங்களுக்கு நிறைய இலவச ஆப்பரேட்டிங் லைவ் சிடிக்களுக்கான தங்கள் கிடைக்கும்.

PenDriveல் write protected பிழையை நீக்குவது எப்படி?

write protect pendrive
இன்று நாம் பயன்படுத்தும் கணினிச் சார்ந்த டிவைஸ்களில் முக்கிய பங்கு வகிப்பது பென்டிரைவ் என்றால் அது மிகையாது. காரணம் இதன்மூலம் நமக்கு வேண்டிய தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் எளிதாக எடுத்துச்செல்ல முடியும் என்பதே. 


மேலும் தற்போதுள்ள நவீன பென்டிரைவ்களில் (New Type of Pendrive) கோப்புகளின் அளவை மேலும் நீடித்து வைத்துக்கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு.. அதாவது பென்டிரைவில் 1GB, 2GB, 4GB, 6GB, 8 GB, என ஆரம்பித்து, தற்பொழுது 64 GB கொள்ளவு கொண்ட பென்டிரைவ்களும் இருப்பதாக கேள்விப்படுகிறோம்.


இத்தகையப் பயன்மிக்க பென்டிரைவ்(pendrive) அல்லது மெமரிகார்ட்(memory card) போன்ற ரீமூவபிள் டிவைஸ்களை நாம் பயன்படுத்தும்பொழுது சில சமயம் cannot copy files and folder, drive is write protected. remove write protection or use another disk என்பன போன்ற பிழைச் செய்திகளைக் காட்டும்.


உடனே என்னவோ ஏதோவென்று, பதறாதீர்கள். இவ்வாறான பிழைச் செய்திகளை(Error) வருவதற்கு வைரஸ் போன்ற தீங்கிழைக்கும் புரோகிராம்களே(Virus Program) காரணமாக இருக்கும்.


இதுபோன்ற பிழைச்செய்திகள் வருவதற்கு ஒரு முக்கிய காரணம் உங்கள் கணினியில் உள்ள Registry கோப்பில் வைரஸ்கள் 'கை' வைப்பதுதான். அதனாலேயே பெரும்பாலான பிழைச்செய்திகள் இவ்வாறு தோன்றும்.


சரி.. write protected பிழைச் செய்தி காட்டினால் என்ன செய்வது? அதற்கான தீர்வுதான் என்ன? என்கிறீர்களா?


இதோ தீர்வு..

  1. உங்களுடைய கணினியில் Start பட்டன் அழுத்துங்கள்.
  2. Run விண்டோவை திறவுங்கள்.
  3. அதில்

reg add "HKLM\System\CurrentcontrolSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /vWriteProtect /f/d 0


என கொடுத்து ok பட்டனை அழுத்துங்கள்.


அவ்வளவுதான். இப்பொழுது உங்களுடைய கணினியில் உள்ள பென் டிரைவை எடுத்துவிட்டு மீண்டும் கணினியில் இணைத்து புணிபுரியத் தொடங்கலாம். இப்பொழுது Write Protected பிழைச்செய்தி தோன்றாது.

உங்கள் Android Device ல் உள்ள Camera வை Webcam ஆக மாற்ற....!!!

se android camera to computer as webcam for video chating
வழக்கமாக நாம் பயன்படுத்தும் ஆண்ட்ராய்ட் போனில் கேமரா இருக்கும். அதில் வீடியோ அல்லது படங்கள் எடுத்து ஆண்ட்ராய்ட் போனில் சேமிப்பது வழக்கம். அல்லது எடுத்த வீடியோக்களை படங்களை நண்பர்களுக்கு Share செய்வது, இணையத்தில் சமூக தளங்களில் பகிர்வது போன்ற வேலைகளைச் செய்வீர்கள். 

ஆனால் அதே ஆண்ட்ரோய்ட் மொபைலில் உள்ள கேமிராவை (Android Mobile Camera) உங்கள் கணினிக்கான வெப்கேமிராவாகவும் பயன்படுத்த முடியும். இது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருப்பதில்லை.



 சரி.. ஆண்ட்ராய்ட் போனில் உள்ள கேமிராவை கணினியின் வெப் கேம் (Webcam) ஆக பயன்படுத்துவது எப்படி என்பதைப் பார்ப்போம். 

Android Phone Camera - வை வெப்கேமிராவாக மாற்ற ஒரு மென்பொருள் உள்ளது. அதன் பெயர் IP WEBCAM  என்பதாகும். 

இந்த மென்பொருளைத் தரவிறக்கி பயன்படுத்துவதன் மூலம், பேஸ்புக், ட்விட்டர், கூகிள் ப்ளஸ் போன்ற சமூக தளங்களில் நண்பர்களுடன் வீடியோ அரட்டை அடிக்கலாம். நேரடியாக வீடியோவை ஒளிபரப்புச் செய்யலாம். 

ரிமோட் முறையில் செயல்படுவதால் மொபைல் கேமிராவை கண்காணிப்பு கேமிராவாகவும் பயன்படுத்த முடியும். 

மென்பொருளை பயன்படுத்தும் முறை: 

  • மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். (Download and Install)
  • நிறுவல் முடிந்ததும், கீழே உள்ள ஸ்டார்ட் சர்வர் (Start Server) என்பதை கிளிக் செய்யவும். 
  • இப்பொழுது ஆண்ட்ராய்ட் கேமிரா திறந்துகொள்ளும். 
  • அதில் கீழாக ஐ.பி அட்ரஸ் ஒன்றை காட்டும். 
  • அந்த ஐ.பி. அட்ராஸை காப்பி செய்துகொண்டு, உங்களுடைய கணினியில் உள்ள வலை உலவியில் அட்ரஸ்பாரில் (Browser Adressbar) பேஸ்ட் செய்து என்டர் தட்டுங்கள். 

அவ்வளவுதான். உங்கள் கணினிக்கு வெப்காம் தயாராகிவிட்டது. 

இனி நீங்கள் வழக்கம்போல சமூக வலைத்தளங்கள் மூலம் வீடியோ சாட்டிங்கை ஆரம்பித்துவிடலாம். உங்களுடைய நண்பர்கள் உங்களை கேமாராவின் வழியாக கண்டு மகிழ்ச்சியாக அரட்டை அடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். 

இனி உங்கள் கணினியில் வெப்கேம் இல்லை என்ற கவலையே உங்களுக்குத் தேவையில்லை. இது ரிமோட் முறையில் செயல்படுவதால் கணினிக்கும், ஆண்ட்ராய்ட் மொபைலுக்கும் எந்த ஒரு இணைப்பு ஒயரையும் நீங்கள் இணைக்கத் தேவையில்லை. நன்றி நண்பர்களே..!

குறிப்பு: உங்களுடைய வீடியோ கணினி திரையில் தெரிய வேண்டுமென்றால் அதற்கும் ஆப்சன் உண்டு. இறுதியில் இருக்கும் Use Javascript to Update Frame in Browsers என்பதைச் சொடுக்கி கணினியில் வீடியோ திரையைக் கொண்டு வர முடியும்.

இப்பயன்மிக்க மென்பொருளை தரவிறக்கம் செய்ய : Download IP WEBCAM


Android Phone களுக்கான system Cleaner..!

android system cleaner apps


ஆண்ட்ராய்ட் மொபைல்களில் அப்ளிகேஷன்களை தொடர்ந்து பயன்படுத்தும்பொழுது, அதில் கேட்சிகள் உருவாகி, ஆண்ட்ராய்ட் மொபைலின் செயல்படும் வேகம் குறையும்.


ஒன்றுக்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்கள் நீங்கள் உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் பயன்படுத்தும்பொழுது, கண்டிப்பாக உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைல் போனில் வேகம் குறையும். சில நேரங்களில் அப்படியே ஸ்தம்பித்து (Hang) நின்றுவிடும்.  




இது சாதாரணமாக அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் நடப்பதுதான். அவ்வாறு உருவாகும் Cache  களை நீக்கவதற்கு இந்த Android system Cleaner  apps உங்களுக்குப் பயன்படும்.
android system cleaner application for free

இம்மென்பொருள் உங்களுடைய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில் கேட்சிகளை நீக்கி உங்களுடைய ஆண்ட்ராய்ட் போன் வழக்கமான வேகத்துடன் செயல்பட வைக்கிறது.


Android system Cleaner  apps -ஐ தரவிறக்கம் செய்ய சுட்டி: Download Android system Cleaner  apps


உண்மையிலேயே Android system Cleaner  apps உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்திப் பார்த்துவிட்டு உங்களுடைய அனுபவங்களை, கருத்துகளை எனக்கு எழுதுங்கள்.

Android ல் Application களை SD CARD க்கு மாற்ற வேண்டுமா...!!!



ஆண்ட்ராய்ட் குறித்த சந்தேகங்கள் அதிகம் பேர் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். காரணம் நம் வலைத்தளத்தில் இடம்பெற்ற ஆண்ட்ராய்ட் குறித்த பதிவுகள்தான். இன்றைய பதிவில் ஆண்ட்ராய்ட் மொபைலிலிருந்து அப்ளிகேஷன்களை ஏன் மாற்ற வேண்டும் அப்படி மாற்றுவதால் என்ன பயன்? ஆண்ட்ராய்ட் போனிலிருந்து SD Card க்கு மாற்றப் பயன்படும் அப்ளிகேஷன் (மென்பொருள்)என்ன? என்பதைப் பற்றிப் பார்ப்போம். 



Android Smartphone பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், ஆண்ட்ராய்ட் போனில் பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள், மென்பொருள்கள், Games Software போன்ற பல்வேறு வகையான மென்பொருள்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. 


அந்த வகையில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை அள்ளி (Android apps) வழங்கி வரும் தளங்களில் முதன்மை பெற்றது கூகிள் பிளே ஸ்டோர் தளம். மற்றும் ஏனைய தளங்களும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை வழங்குகிறது. இவற்றில் பெரும்பாலானவை இலவசம். ஒரு சிலவற்றை பணம் கொடுத்து வாங்க வேண்டியதிருக்கும்.  

இதுபோன்ற தளங்களிலிருந்து உங்களுக்கு வேண்டிய அப்ளிகேஷன்களை நீங்கள் டவுன்லோட் செய்யும்பொழுது உங்களுடைய ஆண்ட்ராய்ட் போன் மெமரி குறைவாக இருந்தால் போதிய இடமில்லை என்ற அறிவிப்பு வரும். 

இதற்கு ஒரே வழி ஏற்கனவே உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள அப்ளிகேஷன்களை மெமரி கார்டுக்கு நகர்த்துவதுதான். 

இயல்பாகவே உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் உள்ள ஒரு சில அப்ளிகேஷன்களை மெமரிகார்ட்டுக்கு நகர்த்த முடியாது. என்றாலும் மற்ற அப்ளிகேஷன்களை ஆண்ட்ராய்ட் போனிலிருந்து மெமரிகார்ட்டுக்கு மாற்ற முடியும். அதற்குப் பயன்படும் மென்பொருள்  அப்ஸ்2எஸ்டி (AppMgr III App 2 SD).

உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருள் இது. காரணம் இம்மென்பொருள் முக்கியமாக இரண்டு வழிமுறைகளில் உங்களுக்கு பயன்படும். 

பயன் ஒன்று: 

ஆண்ட்ராய்ட் போனில் நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திக்கொண்டிருக்கும் மென்பொருள் அல்லது அப்ளிகேஷனை உங்களுடைய மெமரிகார்ட்டுக்கு (Memory Card)எளிதாக நகர்த்த முடியும். இதற்கு அந்த அப்ளிகேஷனில் உள்ள மூவபிள் ஆப்சன் பயன்படும். அந்த ஆப்சனைப் பயன்படுத்தும்பொழுது, ஆண்ராய்ட் போனில் உள்ள அப்ளிகேஷன்களில் எந்தெந்த அப்ளிகேஷன்களை மெமரி கார்ட்டுக்கு நகர்த்த முடியும் என்பதைக் காட்டும். 

apps-moving-software-for-android

நீங்கள் உங்கள் மெமரிகார்ட்டுக்கு நகர்த்த வேண்டிய மென்பொருளை தேர்வு செய்து Move செய்துவிடலாம். 

அதேபோல் மெமரிகார்ட்டில் என்னென்ன ஆப்ளிகேஷன்கள் உள்ளன என்பதை ஆன் எஸ் டி கார்ட் (On SD Card) என்ற பக்கத்தில் தெரிந்துகொள்ள முடியும். 

குறிப்பு: குறிப்பிட்ட அப்ளிகேஷன்களை (Phone Only apps) SD Card க்கு நகர்த்த முடியாது. காரணம் அது போன் ஒன்லி ஆப்சனில் (Phone Only) இருக்கும். இவ்வாறு இருக்கும் அப்ளிகேஷன்களை நகர்த்த முயற்சிக்க கூடாது. 

பயன் இரண்டு: 

இரண்டாவது முக்கியமான பயன், போன் மெமரியில் உள்ள கேச்சிகளை அகற்றுவது. 

உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் நீங்கள் விரும்பும் அப்ளிகேஷன்களை ஒவ்வொரு முறையும் பயன்படுத்துவீர்கள் அல்லவா? அவ்வாறு பயன்படுத்தும்பொழுது தானாகவே உங்களுடைய ஆண்ட்ராய் போனில் Cache உருவாகும். 

பல நூறு முறை நீங்கள் இவ்வாறு பல்வேறு பட்ட அப்ளிகேஷன்களை பயன்படுத்தும்பொழுது கேட்சியானது உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலின் மெமரியை நிறைத்துவிடும். அவ்வாறு நிறையும்பொழுது தானாகவே ஆண்ட்ராய்ட் மொபைலின் செயல்பாட்டில் வேகம் குறைந்துவிடும். சில சமயம் செயல்படாமல் அப்படியே பாதியில் நின்று விடும். 

மேலும் புதிய அப்ளிகேஷன்களை நிறுவும்பொழுது மெமரியில் போதிய இடமில்லை என்று செய்தியைக் காட்டும். 

இதற்கு காரணம் நீங்கள் பயன்படுத்திய மென்பொருள்கள், அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள் (பேஸ்புக், ட்விட்டர்) போன்றவையே. இது அப்ளிகேஷன் கேட்சிகளை, அப்ளிகேஷன் டேட்டாக்களை (application data) ஏற்படுத்தி மெமரியை நிறைத்துவிடும். 

இந்த பிரச்னையும் இம்மென்பொருள் எளிமையாக கையாளுகிறது. அதாவது குறிப்பிட்ட அளவில் உங்களுடைய போன் மெமரியில் கேட்சிகள்  (Phone Memory Cache)நிறையும்பொழுது தானாகவே அதை நீக்குகிறது. 

அதாவது ஒரு எம்பிக்கு மேல் கேட்சிகள் நிறையும்பொழுது தானாகவே "There are 1.051 Cache Size used by application. Do you want to clear them for getting more space" என  நீக்கவா என்று கேட்கும். 

ஓ.கே கொடுத்து அந்த கேட்சிகளை நீக்கிவிடுங்கள். இவ்வாறு நீக்கும்பொழுது தேவையில்லாதவைகள் மெமரியிலிருந்து நீக்கப்படுகிறது. இதனால் உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனின் வேகம் குறையாமல் இருக்கும்.

மற்ற பயன்கள்: அப்ளிகேஷன்களை மறைப்பது, நண்பர்களுடன் அப்ளிகேஷன்களை பகிரந்துகொள்வது, பேட்ச் அன்இன்ஸ்டால் (Batch Uninstall)செய்வது.

மிகச்சிறந்த பயன்களைக் கொடுக்கும் இந்த மென்பொருளை நீங்கள் கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து நிறுவிக்கொள்ளலாம். 

தரவிறக்கம் செய்யச் சுட்டி: Install directly App2 SD

நேரடியாக தரவிறக்கம் செய்ய கூகிள் சர்ச் என்ஜினில் Download Free Apps2SD எனத் தேடுங்கள். உங்களுக்கு வேண்டிய மென்பொருள் தரவிறக்கம் செய்ய நிறைய தளங்கள் கிடைக்கும். பயன்படுத்திக்கொள்ளுங்கள். 

இம்மென்பொருளைப் பற்றி தரவிறக்கப் பக்கத்தில் இவ்வாறு ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

Move apps: moves apps to either internal or external storage for getting more available app storage
Hide apps: hides system (built-in) apps from the app drawer
App manager: manages apps for batch uninstalling, moving apps or sharing apps with friends

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011