அறிமுகமானது Intel 4th Generation Processors..!!!



இன்டெல் நிறுவனம் கணினியின் ப்ராசசர்களுக்கு பெயர் பெற்ற ஒன்று. பல கணினி நிறுவனங்களுக்கும் இன்டெல் ப்ராசசர்களை உள்ளடக்கி கணினிகளை வெளியிட்டு வருகின்றன. இன்டெல் நிறுவனம் சில தினங்களுக்கு முன் டெல்லியில் தனது புதிய 4-ஆம் தலைமுறை ப்ராசசர்களை அறிமுகம் செய்தது. இன்டெல் நிறுவனம் இதற்கு Haswell என்று Code Name கொடுத்துள்ளது. முந்தைய தலைமுறை ப்ராசசர்களை விட அதிக வசதிகளுடன் இது வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பசம்சங்கள்: 

  • கணினி மற்றும் Tablet என இரண்டாகவும் இயங்கும் வசதி
  • பழைய மடிக்கணினிகளை* விட 50% அதிக Battery Life (படங்கள் – Upto 11.2 hrs, வேலைகள் – upto 10.3 hrs)
  • ஆன் செய்த 3 நொடிகளில் கணினி இயங்க ஆரம்பித்துவிடும்.
  • Gaming Experience பழைய கணினிகளை* 20 மடங்கு சிறப்பானதாக இருக்கும்.
  • பழைய கணினிகளை* விட நான்கு மடங்கு அதிக வேகம்.
  • 20 நிமிட HD Video – களை 1 நிமிடத்தில் Convert செய்யும் வசதி.
  • Voice Recognition, Immersive Touch, Face Login and Wireless Display To TVபோன்ற வசதிகளும் உள்ளன.
Dell, Acer, Lenovo, HP உள்ளிட்ட பிரபலமான கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த 4ம் தலைமுறை இன்டெல் ப்ராசசர்களுடன் கணினி, மடிக்கணினிகளை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.

* தற்போதய‌ கணினி – நான்கு வருடம் பழையது

Install செய்த Software களின் சீரியல் நம்பரை கண்டுபிடிப்பது எப்படி?

மென்பொருட்களை நிறுவும் போது நாம் கொடுக்கும் Serial Number களை இன்ஸ்டால் செய்யும் நேரத்தோடு மறந்து விடுவோம். ஆனால் மீண்டும் அவை தேவைப்படும் போது இணையத்திலோ அல்லது நண்பர்களிடமோ தேடிக் கொண்டிருப்போம். இந்த பிரச்சினையை தவிர்க்க அந்த தகவல்களை ஒரு மென்பொருள் மூலம் தெரிந்து கொண்டால் தேவைப்படும் போது பயன்படும் அல்லவா. அதற்கு பயன்படும் மென்பொருட்களை காண்போம். 
belarc_logo

சீரியல் நம்பரை கண்டுபிடிக்க மிகச் சிறந்த மென்பொருள் என்றால் அது Belarc Advisor தான். Free Software என்பதோடு எந்த வித விளம்பரங்களும், டூல் பார்களும் இல்லாமல் வருவது இதன் ஸ்பெஷல். உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்தும்  எல்லா மென்பொருட்களின் சீரியல் நம்பர்களையும் இது கண்டுபிடித்து தரும். அத்தோடு அந்த மென்பொருட்களின் தற்போதைய Version, Security Update இன்ஸ்டால் செய்ய வேண்டி இருப்பின் அந்த தகவல்கள் என பலவற்றை தரும்.
Magical Jelly Bean Keyfinder

இந்த மென்பொருளும் உங்கள் மென்பொருட்களின் Serial Number – களை கண்டுபிடித்து தரும். மிக எளிதாக கண்டுபிடித்து Text File ஆக நீங்கள் சேமித்துக் கொள்ளலாம்.
மற்ற சில மென்பொருட்களை கீழே காணலாம்.

10. RockXP

எச்ச‌ரிக்கை..!! Facebookல் Spammers..!!


நூறு கோடிக்கும் மேலான பயனாளர்களைக் கொண்டு மிகப்பெரிய சமூக தளமாக விளங்குகிறது பேஸ்புக் தளம். வெறும் சமூக தளமாக மட்டுமல்லாமல் எந்தவொரு செய்தியையும், அது உண்மையாக இருந்தாலும், வதந்தியாக இருந்தாலும்,  குறைவான நேரத்தில் அதிக மக்களிடம் கொண்டு செல்லும் மிகப்பெரிய  மீடியாவாகவும் செயல்படுகிறது.


கோடிக்கணக்கான மக்கள் இருக்கும் இப்படியொரு தளத்தை மோசடி பேர்வழிகள் சும்மா விடுவார்களா? நம்மை ஏமாற்ற இங்கும் வலை வீசுகிறார்கள் ஏமாற்று பேர்வழிகள் (Spammers). அவர்கள் வீசும் பல வழிகளில் ஒன்றை இங்கே பார்ப்போம்.



இது எங்கிருந்து தொடங்கும் என்று நமக்கு தெரியாது. நம்முடைய பேஸ்புக் நண்பர் அவரின் பேஸ்புக் பகிர்வில் நம்மை டேக் செய்திருப்பதாக நமக்கு அறிவிப்பு காட்டும். 


பார்த்ததும் குழப்பமடைய செய்யும் விதமாக ஒரு சுட்டியை பகிர்ந்திருப்பார். உதாரணத்திற்கு xn--47aaeaba.com என்ற முகவரி.


அதனை க்ளிக் செய்தால் வேறொரு தளத்திற்கு செல்லும். உதாரணத்திற்குworldmedya.net


அந்த தளம் உங்கள் உலவிக்கு ஏற்றார் போல நீட்சி (Extension) ஒன்றை நிறுவச் சொல்லும்.


பயர்பாக்ஸ் உலவியாக இருந்தால் பின்வருமாறு இருக்கும்.


கூகுள் க்ரோம் உலவியாக இருந்தால் பின்வருமாறு காட்டும்.




வீடியோவை பார்க்க Flash Player-ஐ நிறுவச் சொல்லும். அதை க்ளிக் செய்தால் க்ரோம் நீட்சி (Extension) ஒன்றை நிறுவச்சொல்லும்.

இவற்றை நம்பி பயர்பாக்ஸிலோ, க்ரோமிலோ இந்த நீட்சியை (Extension)நிறுவினால் உங்கள் உலவி உங்களிடம் இல்லை.

இந்த நீட்சி (Extension) என்னென்ன செய்யும்?

1. உங்கள் உலவியில் நடப்பவற்றை தொடர்ந்து கண்காணிக்கும்.

2. நீங்கள் பேஸ்புக் தளத்தை திறக்கும் போது நீங்கள் உள்நுழைந்திருக்கிறீர்களா? என்று பார்க்கும்.

3. அப்படி உள்நுழைந்திருந்தால் ஜாவா நிரல் ஒன்றை நீட்சியில் நிறுவும்.

இந்த நிரல் மூலம் மோசடி பேர்வழிகள் உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் கணக்கு மூலம் குறிப்பிட்ட பேஸ்புக் பக்கங்களுக்கு லைக் கொடுக்க முடியும், உங்கள் நண்பர்களுக்கு செய்தி அனுப்ப முடியும், நீங்கள் இணைந்திருக்கும் பேஸ்புக் பக்கங்களில் கருத்துரை இட முடியும், இது போன்ற ஸ்பாம் இணைப்பை பகிர்ந்து உங்கள் நண்பர்களை டேக் செய்ய முடியும், இப்படி என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்.

தற்போது இந்த மோசடி பேர்வழிகள் செய்வது, புதிய பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய வைப்பார்கள். அதிகமான லைக் கிடைத்த பிறகு அந்த பேஸ்புக் பக்கத்தை விற்றுவிடுவார்கள்.இப்படி தொடர்ந்து நடைபெறும். மேலும் மேலே சொன்ன தளங்களில் கூகுள் ஆட்சென்ஸ் விளம்பரம் உள்ளது. அதன் மூலமும் இவர்களுக்கு பணம் கிடைக்கும்.

இது ஓரிரு நாளில் முடிந்துவிடும் மோசடி இல்லை. ஒவ்வொரு நாளும் புதுப்புது பெயர்களில்முளைத்துக் கொண்டே இருக்கும்.

இது போல உங்கள் நண்பர்கள் மூலம் வந்தால் புறக்கணித்துவிடுங்கள். நண்பர்களுக்கு இது பற்றி தெரிவித்துவிடுங்கள்.

ஒருவேளை மேலே சொன்ன நீட்சியை நிறுவியிருந்தால்,

1. முதலில் நீட்சியை நீக்கிவிடுங்கள்.

2. பிறகு பேஸ்புக்கில் கடவுச்சொல்லை மாற்றிவிடுங்கள்.

3. தேவைப்பட்டால் உலவியையும் நீக்கிவிட்டு புதிதாக நிறுவுங்கள்.

4. உங்கள் டைம்லைனில் நீங்கள் பகிராத ஒன்று இருக்கிறதா? என்று பார்த்து நீக்கிவிடுங்கள்.

5. நீங்கள் லைக் செய்யாத பக்கங்கள் லைக் செய்யப்பட்டிருக்கிறதா? என்று பார்த்து Unlike செய்துவிடுங்கள்.

இதே மோசடி வேறு சில வழிகளிலும் வரும். அவைகள்,

1. "John Cena of WWE died in a head injury while training!என்று பேஸ்புக் கம்மென்ட்களில் பார்க்கலாம். இது பற்றிய வீடியோ:



2. 100 டாலர் மதிப்புள்ள ஸ்டார்பக்ஸ் காபி அன்பளிப்பு அட்டை. இது பற்றிய வீடியோ:




3. உங்கள் பேஸ்புக் தளத்தின் கலரை மாற்றுங்கள் என்று வரும்.


4. உங்கள் ப்ரொபைலை யாரெல்லாம் பார்த்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்
 என்று வரும்.


இது போன்று மோசடி பேர்வழிகள் எண்ணற்ற முறையில் நமக்கு வலை வீசுகிறார்கள். இவற்றில் சிக்காமல் பாதுகாப்புடன் இருங்கள்!

Thanks : Abdul Basith


விண்டோஸ் 8 இன் புதிய அவதாரம் விண்டோஸ் 8.1...!!

விண்டோஸ் 8 பதிப்பு புதிய இடைமுகத்துடன், தொடுதிரை செயலாக்கத்துடன், முற்றிலும் பல புதிய வசதி களைத் தாங்கி வந்தாலும், மாற்றத்திற்குத் தயாராகாத கம்ப்யூட்டர் பயனாளர்கள், முற்றிலுமாக விண்டோஸ் 8 சிஸ்டத்தினை ஏற்கவில்லை. இதனை உணர்ந்த மைக்ரோசாப்ட், மக்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க, விண்டோஸ் 8.1 பதிப்பினை மக்களுக்கான சோதனை பதிப்பாக வெளியிட்டுள்ளது. இது ஒரு சர்வீஸ் பேக் மட்டுமல்ல. பல சிறிய, பெரிய, முக்கிய மேம்பாட்டு வசதிகளையும் பயன்பாட்டினையும் தரும் சிஸ்டமாகத் தரப்பட்டுள்ளது. சிஸ்டத்தில் இணைக்கப்பட்டுத் தரும் பல அப்ளிகேஷன்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது மட்டுமின்றி, கூடுதலாகவும் தரப்பட்டுள்ளன. சுருக்கமாகச் சொல்வதென்றால், இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வெற்றி எனலாம். ஆனால், பயனாளர்களுக்கு இவை நிறைவைத் தருமா எனத் தெரியவில்லை. மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிய வசதிகளை இங்கு காணலாம்.


1. ஸ்டார்ட் ஸ்கிரீன்: முதல் முறை இதனைக் காண்கையில், முற்றிலும் புதியதாகத் தெரியவில்லை. ஆனால், நுணுக்கமாகப் பார்க்கையில், பல மாற்றங்கள் தென்படுகின்றன. இரண்டு புதிய அளவுகளில் அப்ளிகேஷன்களுக்கான டைல்ஸ்கள் உள்ளன. இவற்றுடன் சேர்த்து, புரோகிராம்கள் மற்றும் பிற ஆப்ஜெக்ட்களைக் காட்ட மொத்தம் நான்கு வகை ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. அத்துடன், டெஸ்க்டாப்பின் டாஸ்க்பாரில் கிளிக் செய்து, Properties தேர்ந்தெடுத்து, அதன் டேப்களில் கிளிக் செய்தால், நமக்கு பலவகை boot to desktop, default to Apps view in the Start screen, and list desktop apps first in the Apps view என ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. இதன் மூலம், பயனாளரின் விருப்பத்திற்கேற்ற கம்ப்யூட்டராக மாற்றப்பட்டுகிறது. விண்டோஸ் 8ல், மைக்ரோசாப்ட் வடிவமைத்த கட்டமைப்பிற்குள் நாம் வளைய வேண்டி இருந்தது.


2. அப்ளிகேஷன்கள்: அப்ளிகேஷன்கள், திரையை ஒருமுறை ஸ்வைப் செய்தால் கிடைக்கின்றன. தொடுதிரை இல்லாத சாதனங்களில், ஒரு அம்புக்குறியினைக் கிளிக் செய்தால் போதுமானது. நான்கு வகையாக அப்ளிகேஷன்களைப் பிரித்து அடுக்கி வைத்து, எளிதாகப் பயன்படுத்தலாம். அப்ளிகேஷன்களைக் கண்டறிய அதிகத் தேடல் நேரம் தேவைப்படுவதில்லை.


3. டைல்ஸ்களை குரூப்பாக அமைத்தல்: விண்டோஸ் 8ல், ஸ்டார்ட் ஸ்கிரீனை நம் தேவைகளுக்கேற்ப அமைப்பது சற்று சிரமமானதாக இருந்தது. சிறிய வேலைகளுக்குக் கூட, பல செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியதிருந்தது. விண்டோஸ் 8.1ல், இந்த செயல்பாடு ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக் காட்டாக, ஒரு கிளிக்கில், ஆறு அப்ளிகேஷன்களை ஒரு குழுவாக அமைக்கலாம். குழுவாக அமைக்கப்பட்ட டைல் ஒன்றின் தன்மையை, மாற்றி அமைக்கலாம்; டைலின் அளவை மாற்றலாம்; நகர்த்தலாம்; டாஸ்க்பாரில் ஒட்டலாம் அல்லது நீக்கலாம். ஒரே கிளிக்கில் அன் இன்ஸ்டால் செய்திடலாம். இன்னொரு நிலைக்கு மாற்றித்தான், குரூப்பின் பெயர்களை மாற்ற வேண்டும் என்பதில்லை. அப்படியே வைத்துக் கொண்டும் மாற்றலாம்.


4. கண்ட்ரோல் பேனல் மாற்றம்: விண்டோஸ் 8 கண்ட்ரோல் பேனல் முழுமையடையாத தோற்றத்தினையும் செயல்பாட்டினையும் கொண்டிருந்தது. சிறிய, எளிய வேலைகளுக்குக் கூட, டெஸ்க்டாப் செல்ல வேண்டியதிருந்தது. விண்டோஸ் 8.1 ல், கம்ப்யூட்டர் செட்டிங்ஸ் மிக எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. நூற்றுக் கணக்கான செயல்பாடுகள், புதிய ஆப்ஷன்கள் அனைத்தும் ஒன்பது வகைகளிலும், இவற்றின் 42 துணைப் பிரிவுகளிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. டெஸ்க்டாப் கண்ட்ரோல் பேனலின் டிஸ்பிளே டயலாக் பாக்ஸ் தோற்றம், 1990லிருந்து மாற்றப்படாமலேயே இருந்து வந்தது. இந்த புதிய அப்டேட்டில், இது முற்றிலும் புதிய தோற்றத்தையும் உணர்வினையும் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


5. ஸ்கை ட்ரைவ் இணைந்தே உள்ளது: ஒரு புதிய யூசர் அக்கவுண்ட் செட் செய்திடுகையில், SkyDrive உடன் இணைக்க பயனாளருக்கு ஓர் ஆப்ஷன் தரப்படுகிறது. இதற்கு விருப்பம் தெரிவித்தால், புதிய கம்ப்யூட்டர் அமைப்பில், இந்த வசதி தரப்படுகிறது. வெளியே இருந்து எந்த வசதியும் தேவைப்படுவதில்லை. SkyDrive இதிலேயே ஒருங்கிணைக்கப்படுவதால், இது விண்டோஸ் ஆர்.டி. சாதனத்திலும் செயல்படும்.


6. திரும்பக் கிடைத்த ஸ்டார்ட் பட்டன்: பெரும்பாலான வாடிக்கையாளர்கள் குறையாகக் கூறிய ஸ்டார்ட் பட்டன் இல்லாமை, இதில் நிவர்த்தி செய்யப்பட்டு, ஸ்டார்ட் பட்டன் தரப்பட்டுள்ளது. புதிய ஸ்டார்ட் பட்டனை, எந்த செயல்பாடும் மறைக்க முடியாது. ஒரு சின்ன கிளிக், நம்மை ஸ்டார்ட் ஸ்கிரீனுக்கு அழைத்துச் செல்கிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மாற்றமாக, ரைட் கிளிக்கில் கிடைக்கும் பவர் யூசர் மெனுவில் தரப்படும் Shutdown ஆப்ஷன்களைக் குறிப்பிடலாம்.


7. பைல் எக்ஸ்புளோரர்: விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இல்லாமல் போய்விட்டதே என்று கவலைப் பட்டவர்களுக்குச் சற்று ஆறுதல் தரும் மாற்றம் கிடைத்துள்ளது. ஒரு ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் ஷார்ட்கட் மெனுவில், Libraries மீண்டும் அமைக்கலாம். இந்த மாற்றம் மூலம் This PC என்பது Computer ஆக மாறுகிறது.


8. டெஸ்க்டாப் ஆப்ஷன்ஸ்: விண்டோஸ் 8.1 பெர்சனல் கம்ப்யூட்டரை, விண்டோஸ் 7 கம்ப்யூட்டராக மாற்றி அமைக்க வேண்டும் என விருப்பப்பட்டால், தொடக்கத்தில் கிடைக்கும் ஸ்கிரீனைத் தாண்டி, டெஸ்க்டாப் அப்ளிகேஷன்களை நேரடியாகக் காட்டும் படி அமைக்கலாம். தேவையற்ற, நம் கவனத்தைச் சிதற அடிக்கும் விண்டோஸ் 8 அப்ளிகேஷன்களைத் தவிர்க்கலாம்.


9. எங்கும் எதையும் தேடலாம்: விண்டோஸ் கீ + S அழுத்தினால், தேடல் கட்டம் உடனே கிடைக்கிறது. இதில் நம் தேடலை உடனே செயல்படுத்தலாம். விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இருந்தது போல, இதனைத்தான் தேடப் போகிறேன் என, வரையறை தர வேண்டியதில்லை. நீங்கள் தரும் தேடலுக்கான சொற்கள், அப்ளிகேஷன்கள், செட்டிங்ஸ் அல்லது இணையம் சார்ந்தவை என எதுவாகவும் இருக்கலாம்.


10. ஒன்றுக்கு மேற்பட்ட காட்சிகள்: புதியதாக, அப்ளிகேஷன்களைச் சுருக்கி, ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோக்களில் பார்க்கும் வசதி தரப்பட்டுள்ளது. இரண்டு அப்ளிகேஷன்களை ஒன்றின் அருகே மற்றொன்றை வைத்துப் பார்க்கும் வசதி இது. உங்களிடம் பெரிய டிஸ்பிளே காட்டக் கூடிய மானிட்டர் இருந்தால், நான்கு அப்ளிகேஷன்களைக் கூட ஒன்றாக வைத்துக் காணலாம். இவற்றை ஒரே அளவில் வைத்து இயக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வெவ்வேறு அகலத்தில் இவற்றின் காட்சியை செட் செய்து கொள்ளலாம். இந்த வசதி இருப்பதனால், மெயில் அல்லது வேறு பைலில் உள்ள படம் ஒன்றைக் கிளிக் செய்கையில், அது இன்னொரு அப்ளிகேஷனாக, அதே திரையில், அடுத்த விண்டோவாகக் காட்சியில் கிடைக்கிறது.

11. புதிய விண்டோஸ் ஸ்டோர் 8.1: விண்டோஸ் ஸ்டோர் முற்றிலும் புதிய தோற்றம் கொண்டதாக உள்ளது. பக்க வாட்டில், அப்ளிகேஷன் வகைகளைப் பார்ப்பதைக் காட்டிலும், அவற்றைத் தேர்ந்தெடுக்க எளிதான வழி கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டோரில் ஓர் அப்ளிகேஷனைத் தேர்ந்தெடுத்தவுடன், அது குறித்த காட்சி நமக்குத் தெளிவைத் தருகிறது. விண்டோஸ் 8ல் இது டேப்கள் வழியாகச் சற்று குழப்பத்தினைத் தந்தது. மேலும், ஒவ்வொரு அப்ளிகேஷன் புரோகிராமிற்கும், அதன் செயல்திறன் மதிப்பீடு (ratings) மிகப் பெரிய அளவில் காட்டப்படுகிறது. 1 முதல் 5 வரையிலான நட்சத்திர மதிப்பீடு அட்டவணை, குறிப்பிட்ட அப்ளிகேஷன் குறித்து அறிய சந்தர்ப்பம் அளிக்கிறது. அது மட்டுமின்றி, டாப் டென் லிஸ்ட் என, கட்டணம் செலுத்திப் பெறும் அப்ளிகேஷன்கள் மற்றும் இலவச அப்ளிகேஷன்கள் பட்டியல் தரப்படுகிறது.

12. பின் நாளில் படிக்க: விண்டோஸ் 8.1 பதிப்பில், Reading List என்று ஒரு புதிய அப்ளிகேஷன் தரப்பட்டுள்ளது. Share charmபயன்படுத்தி, இணையப் பக்கம் அல்லது அப்ளிகேஷன் ஒன்றைக் குறித்து வைக்க, அதனை லிங்க்காக Reading Listல் போட்டு வைக்கலாம். பின்னாளில், இந்த லிஸ்ட் பெற்று, தொடர்பில் கிளிக் செய்து பயன்படுத்தலாம்.



13. போட்டோ எடிட்டிங்: விண்டோஸ் 8ல் தரப்பட்ட போட்டோ அப்ளிகேஷன் ஏமாற்றத்தினையே தந்தது. விண்டோஸ் 8.1ல், இது மிகப் பயனுள்ளதாகவும், அதிக செயல் திறன் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. போட்டோக்களை எடிட் செய்வதற்கு பல வகை டூல்ஸ் கொடுக்கப் பட்டுள்ளன. நீங்கள் டேப்ளட் பிசியில் போட்டோ எடுக்கும் பழக்கம் உள்ளவராயின், விண்டோஸ் 8.1 பல புதிய வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளதைப் பார்க்கலாம். கேமரா ரோல் பட்டன், எக்ஸ்போஷர் டூல், டைமர், வீடியோ செட் செய்தல் ஆகிய டூல்கள் அனைத்தும், சார்ம் பாரில் உள்ள செட்டிங்ஸ் செக்ஷனுக்கு மாற்றப்பட்டுள்ளது. (மவுஸின் வீல் போட்டோ அப்ளிகேஷனில் பல புதிய பயன்பாடுகளைத் தருகிறது. இந்த அப்ளிகேஷனில் மட்டுமின்றி, பல்வேறு அப்ளிகேஷன்களிலும், மவுஸின் வீல் பயன்பாடு குறிப்பிடத்தக்கது.)

14. அலாரம்: புதிதாகத் தரப்பட்டுள்ள அலாரம் அப்ளிகேஷன் நமக்குப் பலவழிகளில் பயன் தரக்கூடிய, புதிய அலாரம் கடிகாரத்தினை வழங்குகிறது. இதனை ஸ்டாப் வாட்ச் மற்றும் கவுண்ட் டவுண் சாதனமாகவும் பயன்படுத்தலாம். வீல் சுழற்றி நேரத்தை அமைப்பது எளிதான ஒன்றாக இங்கு தரப்பட்டுள்ளது. இதே போல கால்குலேட்டர் மேம்படுத்தப்பட்டு, அடிப்படை கணக்கீட்டு வசதிகளுடன், கன்வர்டர், மேதமடிக்ஸ் செயல்பாடுகள், சயின்டிபிக் கால்குலேட்டர் எனப் பல பயன் தரும் கால்குலேட்டராகத் தரப்பட்டுள்ளது.



15. உடல்நலத்திற்கான டிப்ஸ்: பிங் டூல் கிட் அமைப்பில், உடல் நலம் பேணுதல், உணவுக் கட்டுப்பாடு, தேகப் பயிற்சி செய்தல் மற்றும் டிப்ஸ் வழங்கப்படுகின்றன.

16. மொபைல் ஹார்ட் ஸ்பாட் ஆக மாறும் கம்ப்யூட்டர்: உங்கள் கம்ப்யூட்டருக்குக் கிடைக்கும் இணைய இணைப்பினை, மற்ற சாதனங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி, விண்டோஸ் 8.1ல் தரப்பட்டுள்ளது. இதற்கேற்றார் போல, விண்டோஸ் 8.1 இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது டேப்ளட் பி.சி.யை செட் செய்து கொள்ளலாம்.



17. பயோ மெட்ரிக் பாதுகாப்பு: விரல் ரேகை மூலம் கம்ப்யூட்டரைப் பாதுகாப்பது முன்பிருந்தே விண்டோஸ் சிஸ்டத்தில் தரப்பட்டு வருகிறது. விண்டோஸ் 8.1ல் இந்த திறன், இணைந்தே கிடைக்கிறது. புதிய இடைமுகமாகவும் தரப்பட்டுள்ளது.
இன்னும் பல புதிய வசதிகளைத் தந்து, புதிய விண்டோஸ் 8.1 பதிப்பினைச் சிறப்பித்ததுடன், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பையும் மைக்ரோசாப்ட் நிறைவு செய்துள்ளது.

இலவசமாக Android Game களை தரவிறக்க..!!!

இப்பொழுது Android மொபைல் களை பெரும்பாலும் வாங்கும் காரணங்களின் ஒன்று , அது ஒரு பெரிய gaming இயந்திரம் . அதில் எண்ணற்ற game களை install செய்து விளையாடலாம் . அதை தரவிறக்க நாம் google play வை பயன்படுத்துகிறோம் , ஆனால் அதில் சில game கள் மட்டும் தான் இலவசமாக தரவிறக்க முடியும் . அதனால் அனைத்து game களையும் இலவசமாக தரவிறக்க google play க்கு மாற்றாக சில சிறந்த பாதுகாப்பான இணையதள முகவரியை கீழே கொடுத்துள்ளேன் .
Tegrazone

This website is powered by the Official company of NVidia. It introduces a big list of Free games and Paid Games to download with simple clicks. It also provides Download via QR Code, which make it simpler.


AndroidShock

Great website that gathers a huge list of APK Games (Free & Paid). It provides low price games to Download (direct link), Send directly to Phone, or Send link to Email.



Android Games Room


One of the best Alternatives to Google Play, it provides Direct Download Link and Download via QR Code. This website is auto-Updated weekly with more New Games & Apps. It provides a big list of FREE Games.


Android.Mob.Org


A great-looking website it provides Android Games & Apps Download, Direct Download Link for APK, QR Code download or even WAP Download. This great website is one of the best android app store especially for tablets.

Operating System Live CD என்றால் என்ன ...?? Free Live CDs...!!!



சாதாரணமாக நீங்கள் உங்கள் கணினியை தொடங்கியவுடன், உங்கள் கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்கில் பதியப்பட்ட ஆபரேட்டிங் என்ன செய்யும்? 


கணிப்பொறி இயக்கப்பட்டவுடன் முதன் முதலில் Operating System என்ற சொல்லக்கூடிய இயங்குதள புரோகிராம்களை Hard Disc அடுக்குகளில் ஏற்றும். அதன் பிறகே அதில் குறிப்பிட்ட செயல்முறையில் சில கோப்புகளை இயக்க தொடங்கும். இக்கோப்புகள் கணினியில் உள்ள Hardware களை சரிபார்க்கும். Driver Files களை Memory-க்கு ஏற்றிக்கொள்ளும். நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம்களுக்கு ஏற்ற, அதற்கு தேவையான Library Files (கோப்புகளை) தயார்படுத்தி வைக்கும். இதுதான் கணினி உயிர்ப்பு பெற்றவுடன் செய்யும் வேலைகள். 




சரி.. Hard Disk -ல் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் செய்யும் வேலைகளை, ஹார்ட் டிஸ்க்கில் பதியபட்டாமல், சாதாரணமாக நாம் பயன்படுத்தும் CD யில் பதியப்பட்டு, கணினியை இயக்கினால் என்ன? 


இந்த சிந்தனையில் விளைவாக உருவானவே லைவ் சி.டி. 



லைவ் சி.டி. என்றால் என்ன? இந்த லைவ் சி.டி என்ன செய்யும்? 



ஹார்ட் டிஸ்க்கில் நாம் பதித்து இயக்கும் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள அனைத்து கோப்புகளையும்,  இந்த சிடி உள்ளடக்கியிருப்பதால், ஆபரேட்டிங் சிஸ்டம் (operating system) செய்யும் அதே வேலையை இந்த லைவ் சி.டி. யும் செய்யும்.  



அதாவது, பொதுவாக கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில்(Hard Disk) ஆப்பரேட்டிங் சிஸ்டம் கோப்புகள் (OS files) பதியப்பட்டிருக்கும்.  அதே ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குகான கோப்புகள்  இங்கு குறுவட்டு என்று சொல்லக்கூடிய சி.டியில் உள்ளது அவ்வளவே.



இதில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் கோப்புகள் மிக நுணுக்கமாக, செறிவுடன் கூடிய கம்ப்ரஸ் செய்யப்பட்டுள்ளது. சிடியை கணினியில் செலுத்தி இயக்கம் பெறும்பொழுது இதிலுள்ள கோப்புகள் கணினியில் உள்ள Ram Memory -ல் uncompress ஆகும்.  அதன் பிறகு அந்த RAM யை ஒரு Disk Driver ஆக கணினி டிரைவர் கோப்புகளுக்கு அறித்துவிடும். அதன் பிறகு எப்பொழுதும் போல புரோக்கிராம் கோப்புகளை அங்கிருந்து செயல்படுத்த தொடங்கும். 



அதாவது சிடியில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் கோப்புகளை அன்கம்ப்ரஸ் ரேமை (RAM) உபயோகித்துக்கொள்ளும். பிறகு அந்த ரேமையே டிஸ்க் டிரைவாக (Disk Drive) பாவித்து கணினியிலுள்ள அனைத்து டிரைவர் கோப்புகளுக்கும் 'இது தான் டிஸ்க் டிரைவ்' என்பதை உணர வைத்துவிட்டு, வழக்கம்போல ஆபரேட்டிங் சிஸ்டத்திலுள்ள புரோகிராம் கோப்புகளை செயல்படுத்த தொடங்கும்.



 பெரும்பாலான Booting disk கள் அனைத்தும் இதே செயல்பாட்டை தொடர்ந்து செய்துகொண்டுள்ளன. OS இன்ஸ்டால் செய்யும்பொழுது இதே நடைமுறையே பின்பற்றப்படுகிறது.



இவற்றையே பணம் கொடுத்து உபயோகிக்காமல் இலவசமாக உபயோகிக்க என்ன வழி என்று சிந்தித்ததின் விளைவே ஓப்பன் சோர்ஸ்(Open Source) என்று சொல்லக்கூடிய திற மூல அங்கத்தின் உறுப்பினர்கள் இந்த செயல்முறைகளை ஆராய்ந்து மேம்படுத்தி, பல்வேறு இயக்க முறைமைகளைக் கொண்டு லைவ் சிடிக்களை கண்டுபிடித்து இலவசமாக வெளியிட்டுள்ளனர். 



இன்று லினக்ஸ்சின் உபுண்டு(Ubuntu), குபுண்டு(gubuntu) ஆகிய லைவ் சிடிக்கள் கிடைப்பதோடு, விண்டோஸ் லைவ் சிடிக்களும் இணையத்தில்  இலவசமாக கிடைக்கின்றன. 



இலவச லைவ்  சி.டி.க்களை பெற்றுக்கொள்ள கீழ்க்கண்ட இணைப்புகள் உங்களுக்கு உதவும். 
1. shipit.ubuntu.com
2. www.frozentech.com/content/livecd.php
மேலும் google Search-ல் free live operating system cd என்று தேடினால் உங்களுக்கு நிறைய இலவச ஆப்பரேட்டிங் லைவ் சிடிக்களுக்கான தங்கள் கிடைக்கும்.

PenDriveல் write protected பிழையை நீக்குவது எப்படி?

write protect pendrive
இன்று நாம் பயன்படுத்தும் கணினிச் சார்ந்த டிவைஸ்களில் முக்கிய பங்கு வகிப்பது பென்டிரைவ் என்றால் அது மிகையாது. காரணம் இதன்மூலம் நமக்கு வேண்டிய தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் எளிதாக எடுத்துச்செல்ல முடியும் என்பதே. 


மேலும் தற்போதுள்ள நவீன பென்டிரைவ்களில் (New Type of Pendrive) கோப்புகளின் அளவை மேலும் நீடித்து வைத்துக்கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு.. அதாவது பென்டிரைவில் 1GB, 2GB, 4GB, 6GB, 8 GB, என ஆரம்பித்து, தற்பொழுது 64 GB கொள்ளவு கொண்ட பென்டிரைவ்களும் இருப்பதாக கேள்விப்படுகிறோம்.


இத்தகையப் பயன்மிக்க பென்டிரைவ்(pendrive) அல்லது மெமரிகார்ட்(memory card) போன்ற ரீமூவபிள் டிவைஸ்களை நாம் பயன்படுத்தும்பொழுது சில சமயம் cannot copy files and folder, drive is write protected. remove write protection or use another disk என்பன போன்ற பிழைச் செய்திகளைக் காட்டும்.


உடனே என்னவோ ஏதோவென்று, பதறாதீர்கள். இவ்வாறான பிழைச் செய்திகளை(Error) வருவதற்கு வைரஸ் போன்ற தீங்கிழைக்கும் புரோகிராம்களே(Virus Program) காரணமாக இருக்கும்.


இதுபோன்ற பிழைச்செய்திகள் வருவதற்கு ஒரு முக்கிய காரணம் உங்கள் கணினியில் உள்ள Registry கோப்பில் வைரஸ்கள் 'கை' வைப்பதுதான். அதனாலேயே பெரும்பாலான பிழைச்செய்திகள் இவ்வாறு தோன்றும்.


சரி.. write protected பிழைச் செய்தி காட்டினால் என்ன செய்வது? அதற்கான தீர்வுதான் என்ன? என்கிறீர்களா?


இதோ தீர்வு..

  1. உங்களுடைய கணினியில் Start பட்டன் அழுத்துங்கள்.
  2. Run விண்டோவை திறவுங்கள்.
  3. அதில்

reg add "HKLM\System\CurrentcontrolSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /vWriteProtect /f/d 0


என கொடுத்து ok பட்டனை அழுத்துங்கள்.


அவ்வளவுதான். இப்பொழுது உங்களுடைய கணினியில் உள்ள பென் டிரைவை எடுத்துவிட்டு மீண்டும் கணினியில் இணைத்து புணிபுரியத் தொடங்கலாம். இப்பொழுது Write Protected பிழைச்செய்தி தோன்றாது.

உங்கள் Android Device ல் உள்ள Camera வை Webcam ஆக மாற்ற....!!!

se android camera to computer as webcam for video chating
வழக்கமாக நாம் பயன்படுத்தும் ஆண்ட்ராய்ட் போனில் கேமரா இருக்கும். அதில் வீடியோ அல்லது படங்கள் எடுத்து ஆண்ட்ராய்ட் போனில் சேமிப்பது வழக்கம். அல்லது எடுத்த வீடியோக்களை படங்களை நண்பர்களுக்கு Share செய்வது, இணையத்தில் சமூக தளங்களில் பகிர்வது போன்ற வேலைகளைச் செய்வீர்கள். 

ஆனால் அதே ஆண்ட்ரோய்ட் மொபைலில் உள்ள கேமிராவை (Android Mobile Camera) உங்கள் கணினிக்கான வெப்கேமிராவாகவும் பயன்படுத்த முடியும். இது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருப்பதில்லை.



 சரி.. ஆண்ட்ராய்ட் போனில் உள்ள கேமிராவை கணினியின் வெப் கேம் (Webcam) ஆக பயன்படுத்துவது எப்படி என்பதைப் பார்ப்போம். 

Android Phone Camera - வை வெப்கேமிராவாக மாற்ற ஒரு மென்பொருள் உள்ளது. அதன் பெயர் IP WEBCAM  என்பதாகும். 

இந்த மென்பொருளைத் தரவிறக்கி பயன்படுத்துவதன் மூலம், பேஸ்புக், ட்விட்டர், கூகிள் ப்ளஸ் போன்ற சமூக தளங்களில் நண்பர்களுடன் வீடியோ அரட்டை அடிக்கலாம். நேரடியாக வீடியோவை ஒளிபரப்புச் செய்யலாம். 

ரிமோட் முறையில் செயல்படுவதால் மொபைல் கேமிராவை கண்காணிப்பு கேமிராவாகவும் பயன்படுத்த முடியும். 

மென்பொருளை பயன்படுத்தும் முறை: 

  • மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். (Download and Install)
  • நிறுவல் முடிந்ததும், கீழே உள்ள ஸ்டார்ட் சர்வர் (Start Server) என்பதை கிளிக் செய்யவும். 
  • இப்பொழுது ஆண்ட்ராய்ட் கேமிரா திறந்துகொள்ளும். 
  • அதில் கீழாக ஐ.பி அட்ரஸ் ஒன்றை காட்டும். 
  • அந்த ஐ.பி. அட்ராஸை காப்பி செய்துகொண்டு, உங்களுடைய கணினியில் உள்ள வலை உலவியில் அட்ரஸ்பாரில் (Browser Adressbar) பேஸ்ட் செய்து என்டர் தட்டுங்கள். 

அவ்வளவுதான். உங்கள் கணினிக்கு வெப்காம் தயாராகிவிட்டது. 

இனி நீங்கள் வழக்கம்போல சமூக வலைத்தளங்கள் மூலம் வீடியோ சாட்டிங்கை ஆரம்பித்துவிடலாம். உங்களுடைய நண்பர்கள் உங்களை கேமாராவின் வழியாக கண்டு மகிழ்ச்சியாக அரட்டை அடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். 

இனி உங்கள் கணினியில் வெப்கேம் இல்லை என்ற கவலையே உங்களுக்குத் தேவையில்லை. இது ரிமோட் முறையில் செயல்படுவதால் கணினிக்கும், ஆண்ட்ராய்ட் மொபைலுக்கும் எந்த ஒரு இணைப்பு ஒயரையும் நீங்கள் இணைக்கத் தேவையில்லை. நன்றி நண்பர்களே..!

குறிப்பு: உங்களுடைய வீடியோ கணினி திரையில் தெரிய வேண்டுமென்றால் அதற்கும் ஆப்சன் உண்டு. இறுதியில் இருக்கும் Use Javascript to Update Frame in Browsers என்பதைச் சொடுக்கி கணினியில் வீடியோ திரையைக் கொண்டு வர முடியும்.

இப்பயன்மிக்க மென்பொருளை தரவிறக்கம் செய்ய : Download IP WEBCAM


Android Phone களுக்கான system Cleaner..!

android system cleaner apps


ஆண்ட்ராய்ட் மொபைல்களில் அப்ளிகேஷன்களை தொடர்ந்து பயன்படுத்தும்பொழுது, அதில் கேட்சிகள் உருவாகி, ஆண்ட்ராய்ட் மொபைலின் செயல்படும் வேகம் குறையும்.


ஒன்றுக்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்கள் நீங்கள் உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் பயன்படுத்தும்பொழுது, கண்டிப்பாக உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைல் போனில் வேகம் குறையும். சில நேரங்களில் அப்படியே ஸ்தம்பித்து (Hang) நின்றுவிடும்.  




இது சாதாரணமாக அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் நடப்பதுதான். அவ்வாறு உருவாகும் Cache  களை நீக்கவதற்கு இந்த Android system Cleaner  apps உங்களுக்குப் பயன்படும்.
android system cleaner application for free

இம்மென்பொருள் உங்களுடைய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில் கேட்சிகளை நீக்கி உங்களுடைய ஆண்ட்ராய்ட் போன் வழக்கமான வேகத்துடன் செயல்பட வைக்கிறது.


Android system Cleaner  apps -ஐ தரவிறக்கம் செய்ய சுட்டி: Download Android system Cleaner  apps


உண்மையிலேயே Android system Cleaner  apps உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்திப் பார்த்துவிட்டு உங்களுடைய அனுபவங்களை, கருத்துகளை எனக்கு எழுதுங்கள்.

Android ல் Application களை SD CARD க்கு மாற்ற வேண்டுமா...!!!



ஆண்ட்ராய்ட் குறித்த சந்தேகங்கள் அதிகம் பேர் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். காரணம் நம் வலைத்தளத்தில் இடம்பெற்ற ஆண்ட்ராய்ட் குறித்த பதிவுகள்தான். இன்றைய பதிவில் ஆண்ட்ராய்ட் மொபைலிலிருந்து அப்ளிகேஷன்களை ஏன் மாற்ற வேண்டும் அப்படி மாற்றுவதால் என்ன பயன்? ஆண்ட்ராய்ட் போனிலிருந்து SD Card க்கு மாற்றப் பயன்படும் அப்ளிகேஷன் (மென்பொருள்)என்ன? என்பதைப் பற்றிப் பார்ப்போம். 



Android Smartphone பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், ஆண்ட்ராய்ட் போனில் பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள், மென்பொருள்கள், Games Software போன்ற பல்வேறு வகையான மென்பொருள்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. 


அந்த வகையில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை அள்ளி (Android apps) வழங்கி வரும் தளங்களில் முதன்மை பெற்றது கூகிள் பிளே ஸ்டோர் தளம். மற்றும் ஏனைய தளங்களும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை வழங்குகிறது. இவற்றில் பெரும்பாலானவை இலவசம். ஒரு சிலவற்றை பணம் கொடுத்து வாங்க வேண்டியதிருக்கும்.  

இதுபோன்ற தளங்களிலிருந்து உங்களுக்கு வேண்டிய அப்ளிகேஷன்களை நீங்கள் டவுன்லோட் செய்யும்பொழுது உங்களுடைய ஆண்ட்ராய்ட் போன் மெமரி குறைவாக இருந்தால் போதிய இடமில்லை என்ற அறிவிப்பு வரும். 

இதற்கு ஒரே வழி ஏற்கனவே உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள அப்ளிகேஷன்களை மெமரி கார்டுக்கு நகர்த்துவதுதான். 

இயல்பாகவே உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் உள்ள ஒரு சில அப்ளிகேஷன்களை மெமரிகார்ட்டுக்கு நகர்த்த முடியாது. என்றாலும் மற்ற அப்ளிகேஷன்களை ஆண்ட்ராய்ட் போனிலிருந்து மெமரிகார்ட்டுக்கு மாற்ற முடியும். அதற்குப் பயன்படும் மென்பொருள்  அப்ஸ்2எஸ்டி (AppMgr III App 2 SD).

உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருள் இது. காரணம் இம்மென்பொருள் முக்கியமாக இரண்டு வழிமுறைகளில் உங்களுக்கு பயன்படும். 

பயன் ஒன்று: 

ஆண்ட்ராய்ட் போனில் நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திக்கொண்டிருக்கும் மென்பொருள் அல்லது அப்ளிகேஷனை உங்களுடைய மெமரிகார்ட்டுக்கு (Memory Card)எளிதாக நகர்த்த முடியும். இதற்கு அந்த அப்ளிகேஷனில் உள்ள மூவபிள் ஆப்சன் பயன்படும். அந்த ஆப்சனைப் பயன்படுத்தும்பொழுது, ஆண்ராய்ட் போனில் உள்ள அப்ளிகேஷன்களில் எந்தெந்த அப்ளிகேஷன்களை மெமரி கார்ட்டுக்கு நகர்த்த முடியும் என்பதைக் காட்டும். 

apps-moving-software-for-android

நீங்கள் உங்கள் மெமரிகார்ட்டுக்கு நகர்த்த வேண்டிய மென்பொருளை தேர்வு செய்து Move செய்துவிடலாம். 

அதேபோல் மெமரிகார்ட்டில் என்னென்ன ஆப்ளிகேஷன்கள் உள்ளன என்பதை ஆன் எஸ் டி கார்ட் (On SD Card) என்ற பக்கத்தில் தெரிந்துகொள்ள முடியும். 

குறிப்பு: குறிப்பிட்ட அப்ளிகேஷன்களை (Phone Only apps) SD Card க்கு நகர்த்த முடியாது. காரணம் அது போன் ஒன்லி ஆப்சனில் (Phone Only) இருக்கும். இவ்வாறு இருக்கும் அப்ளிகேஷன்களை நகர்த்த முயற்சிக்க கூடாது. 

பயன் இரண்டு: 

இரண்டாவது முக்கியமான பயன், போன் மெமரியில் உள்ள கேச்சிகளை அகற்றுவது. 

உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் நீங்கள் விரும்பும் அப்ளிகேஷன்களை ஒவ்வொரு முறையும் பயன்படுத்துவீர்கள் அல்லவா? அவ்வாறு பயன்படுத்தும்பொழுது தானாகவே உங்களுடைய ஆண்ட்ராய் போனில் Cache உருவாகும். 

பல நூறு முறை நீங்கள் இவ்வாறு பல்வேறு பட்ட அப்ளிகேஷன்களை பயன்படுத்தும்பொழுது கேட்சியானது உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலின் மெமரியை நிறைத்துவிடும். அவ்வாறு நிறையும்பொழுது தானாகவே ஆண்ட்ராய்ட் மொபைலின் செயல்பாட்டில் வேகம் குறைந்துவிடும். சில சமயம் செயல்படாமல் அப்படியே பாதியில் நின்று விடும். 

மேலும் புதிய அப்ளிகேஷன்களை நிறுவும்பொழுது மெமரியில் போதிய இடமில்லை என்று செய்தியைக் காட்டும். 

இதற்கு காரணம் நீங்கள் பயன்படுத்திய மென்பொருள்கள், அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள் (பேஸ்புக், ட்விட்டர்) போன்றவையே. இது அப்ளிகேஷன் கேட்சிகளை, அப்ளிகேஷன் டேட்டாக்களை (application data) ஏற்படுத்தி மெமரியை நிறைத்துவிடும். 

இந்த பிரச்னையும் இம்மென்பொருள் எளிமையாக கையாளுகிறது. அதாவது குறிப்பிட்ட அளவில் உங்களுடைய போன் மெமரியில் கேட்சிகள்  (Phone Memory Cache)நிறையும்பொழுது தானாகவே அதை நீக்குகிறது. 

அதாவது ஒரு எம்பிக்கு மேல் கேட்சிகள் நிறையும்பொழுது தானாகவே "There are 1.051 Cache Size used by application. Do you want to clear them for getting more space" என  நீக்கவா என்று கேட்கும். 

ஓ.கே கொடுத்து அந்த கேட்சிகளை நீக்கிவிடுங்கள். இவ்வாறு நீக்கும்பொழுது தேவையில்லாதவைகள் மெமரியிலிருந்து நீக்கப்படுகிறது. இதனால் உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனின் வேகம் குறையாமல் இருக்கும்.

மற்ற பயன்கள்: அப்ளிகேஷன்களை மறைப்பது, நண்பர்களுடன் அப்ளிகேஷன்களை பகிரந்துகொள்வது, பேட்ச் அன்இன்ஸ்டால் (Batch Uninstall)செய்வது.

மிகச்சிறந்த பயன்களைக் கொடுக்கும் இந்த மென்பொருளை நீங்கள் கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து நிறுவிக்கொள்ளலாம். 

தரவிறக்கம் செய்யச் சுட்டி: Install directly App2 SD

நேரடியாக தரவிறக்கம் செய்ய கூகிள் சர்ச் என்ஜினில் Download Free Apps2SD எனத் தேடுங்கள். உங்களுக்கு வேண்டிய மென்பொருள் தரவிறக்கம் செய்ய நிறைய தளங்கள் கிடைக்கும். பயன்படுத்திக்கொள்ளுங்கள். 

இம்மென்பொருளைப் பற்றி தரவிறக்கப் பக்கத்தில் இவ்வாறு ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

Move apps: moves apps to either internal or external storage for getting more available app storage
Hide apps: hides system (built-in) apps from the app drawer
App manager: manages apps for batch uninstalling, moving apps or sharing apps with friends

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011