Android Mobile இல் Battery life time ஐ நீடிக்க..!!


  
ஆன்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தும் அதிகமானவர்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சனை மொபைலின் பேட்டரி சார்ஜ் விரைவில் தீர்ந்துவிடுவது. பொதுவாக அதிக வசதிகள் கொண்ட (ஸ்மார்ட்) மொபைல்கள் அனைத்தும் எதிர்கொள்ளும் பிரச்சனை இது. நம்மால் இயன்றவரை பேட்டரி பயன்பாட்டை குறைத்து அதிக நேரம் நீட்டிக்க செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

பேட்டரி சார்ஜை அதிகம் எடுப்பது எது?


மொபைலில் Settings => Battery ( சில மொபைல்களில் Settings > About Phone > Battery Useபகுதிக்கு சென்றால் பேட்டரி சார்ஜின் பயன்பாட்டை காட்டும். அங்கு எந்த அப்ளிகேசன் அதிகம் பேட்டரியை எடுத்துக் கொள்கிறது என்பதை தெரிந்துக் கொண்டு அதனை கட்டுப்படுத்தலாம்.

பேட்டரி சார்ஜை அதிகப்படுத்த பொதுவான ஐந்து வழிகள்:

1. திரை ஒளிர்வு (Brightness)


மொபைலின் Brightness-ஐ முடிந்தவரை குறைவாக வைத்திருங்கள். அதிகமாக வைத்திருந்தால் அதிகம் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும்.


Settings => Display => Brightness பகுதிக்கு சென்று Brightness-ஐ மாற்றிக் கொள்ளலாம்.

2. GPS, Wi-Fi & Bluetooth

Status Switch

தேவைப்படாத நேரங்களில் GPS, Wi-Fi, Bluetooth ஆகியவற்றை நிறுத்திவிடுங்கள். இவைகள் எப்போதும் On செய்திருந்தால் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும்.



Android மொபைலில் Power control அல்லது Status Switch என்ற Widget (மேலே உள்ள படத்தில் உள்ளது போன்று) இருக்கும். அதை Home Screen-ல் வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் GPS, Wi-Fi, Bluetooth ஆகியவற்றை எளிதாக ஆன்/ஆஃப் செய்துக் கொள்ளலாம்.

3. Live Wallpaper

Live Wallpaper

ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள வசதிகளில் ஒன்று Live Wallpaper எனப்படும் தொடுவுணர்வு கொண்ட அனிமேசன் புகைப்படங்கள். இந்த வசதியும் பேட்டரியை எடுத்துக் கொள்ளும். விருப்பமிருந்தால் சில நாட்கள் வைத்துக் கொண்டு பிறகு நீக்கிவிடுங்கள்.

4. Home Screen Widgets


ஆண்ட்ராய்ட் Home Screen-ல் நாம் வைக்கும் Widget-களை நாம் பயன்படுத்தவில்லை என்றாலும், அதுவும் கொஞ்சம் பேட்டரி அளவை எடுத்துக் கொள்ளும். அதனால் நாம் அடிக்கடி பயன்படுத்துபவற்றை மட்டும் வைத்துவிட்டு மற்றவற்றை நீக்கிவிடுவது நன்று.

5. Background Applications

சில அப்ளிகேசன்களை பயன்படுத்தவில்லை என்றாலும் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும். அதுவும் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும். இது பற்றி ஆன்ட்ராய்ட் மொபைல் பாதுகாப்பானதா? என்ற பதிவில் விரிவாக பார்க்கலாம்.


ஸ்மார்ட்போன்கள் என்றாலே புது புது வசதிகள் கொண்டிருக்கும். எல்லா வசதிகளையும் பயன்படுத்த வேண்டுமானால் பேட்டரி அதிக தடவை சார்ஜ் செய்து தான் ஆக வேண்டும். புதிய வசதிகள் வேண்டுமா? பேட்டரி சார்ஜ் நீடிக்க வேண்டுமா? என்பதனை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

தொழில்நுட்ப துணுக்குகள்..!!



தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய பகுதியில் பார்ப்போம்.

பேஸ்புக் மெஸ்ஸஞ்சர் (Facebook Messenger):



பேஸ்புக் தளம் சாட் செய்வதற்காக Messenger என்ற வசதியை முன்பு அறிமுகப்படுத்தியது. தற்போது ஆண்ட்ராய்டுக்கான பேஸ்புக் மெஸ்ஸஞ்சரில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி பேஸ்புக் கணக்கு இல்லாமலேயே வெறும் பெயர் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் கொடுத்து நண்பர்களுடன் சாட் செய்யலாம். இந்த வசதி தற்போது India, Indonesia, Australia, Venezuela, South Africa ஆகிய நாடுகளில் மட்டுமே அறிமுகமாகியுள்ளது. மற்ற நாடுகளுக்கும், ஆப்பிள் சாதனங்களுக்கும் விரைவில் அறிமுகமாகும்.


இந்த வசதி WhatsApp Messenger போன்று தான். மேலும் தற்போது WhatsApp-ஐ பேஸ்புக் வாங்கப்போவதாக இணையத்தில் செய்தி பரவியது. ஆனால்WhatsApp இதனை மறுத்துள்ளது.

Google Play vs App Store:



Google Play மூலம் விற்கப்படும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன் மற்றும் கேம்களின் வருமானம் வருடாவருடம் அதிகரித்து வருகிறது. கடந்த வருடத்தைவிட இந்த வருடம் 311 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும் அந்த வருமானத்தை விட நான்கு மடங்கு அதிக வருமானத்தை ஆப்பிளின் App Store-ல் விற்கப்படும் அப்ளிகேசன் மற்றும் கேம்கள் பெறுகின்றது.
நண்பர்கள் பயன்படுத்தும் அப்ளிகேசன்:


ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் அதிக விமர்சனத்துக்கு உள்ளானது ஆப்பிள் மேப் தான். இதற்காக ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக் பயனாளர்களிடம் மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த மேப் அப்ளிகேசனில் ட்விட்டர், பேஸ்புக் நண்பர்கள் மற்றும் நம்மை சுற்றியுள்ளவர்கள் பயன்படுத்தும் அப்ளிகேசன்களை பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

கூகுளின் ஆப்பிள் அப்டேட்:

கூகுள் நிறுவனம் ஆப்பிளின் ஐபோன் மற்றும் ஐபேட்களுக்கான யூட்யூப் அப்ளிகேசனையும், ஜிமெயில் அப்ளிகேசனையும் புதிய வசதிகளுடன் அப்டேட் செய்துள்ளது.

மொபைல் உலகில் யாஹூ:


இணையத்தில் ஜாம்பவனாக ஒரு காலத்தில் (?) திகழ்ந்த யாஹூ நிறுவனம் பிறகு பல்வேறு சோதனைகளை சந்தித்தது. சமீபத்தில் யாஹூ நிறுவனத்தின் புது சிஇஓ-வாக மரிஸ்ஸா மேயர் என்பவர் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவருகிறார். தற்போது On The Air என்னும் மொபைல் வீடியோ சாட் நிறுவனத்தை கையைகப்படுத்தியுள்ளார். இந்த முறை கையகப்படுத்தியது On The Air தயாரிப்புக்காக இல்லை, மாறாக அதன் மென்பொருள் உருவாக்குனர்களுக்காக இதனை செய்துள்ளது. அதனை உருவாக்கிய ஐந்து பேர் இனி யாஹூவின் மொபைல் பிரிவில் பணிபுரிவார்கள்.

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011