இனி உங்கள் Computer இலும் Google docs

Google-ன் பயன்மிக்க சேவைகளில் முக்கியமான ஒன்று கூகிள் டாக்ஸ் (Google docs). இந்த கூகிள் டாக்ஸின் மூலம் Online-லேயே பல்வேறு விதமான கோப்புகளை(Kind of files) உருவாக்க முடியும். எளிமையாக சொல்வதென்றால், Google docs இணையத்தில் Microsoft Office போன்று செயல்பட்டுவருகிறது. கூகிள் டாக்ஸின் மூலம் கோப்புகளை இணையத்திலேயே உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் அங்கேயே சேமிக்கவும்(save) முடிகிறது. தேவைப்படும்போது அக்கோப்புகளை Download செய்துகொள்ள முடியும். நண்பர்களுடன் பகிர்ந்து (Share) கொள்ளவும் முடிகிறது.இதில் இருக்கும் பிரச்னை என்னவென்றால், நமக்கு வேண்டிய நேரத்தில் எல்லாம் Internet சென்றே google docs-ல் உள்ள கோப்புகளை கையாள முடியும். Download செய்வதற்கும் இப்படி Internet இருந்தால் செய்ய முடியும். இவ்வாறு இணையத்தை உபயோகிக்காமல் நம்முடைய கம்ப்யூட்டரிலேயே இந்த கூகிள் Docs ஐ கொண்டுவர முடியும். இதற்கு உதவுவது இந்த InSync என்ற மென்பொருள் ஆகும்.

இந்த சிறிய மென்பொருளை (Small software)தரவிறக்கம் செய்து கொண்டு, நமது கணினியில் நிறுவ வேண்டும்(Install). அதன் பின் insynchq உடன் நம் computer-ல் நிறுவவேண்டிய கூகிள் டாக்ஸ் கணக்கை கொடுக்கவேண்டும். குறிப்பிட்ட கணக்கை insynchq யில் இணைக்க கூகிளின் அனுமதி வேண்டும்.


இதன் மூலம் insynchq ல் உங்கள் Google கணக்கின் பெயரிலேயே ஒரு கணக்கு துவங்கப்பட்டுவிடும். மேலும் உங்கள் கணினியின் My Documents-ல் Insync என்ற கோப்பு காணப்படும். அதில் குறிப்பிட்ட கூகிள் டாக்ஸில் உள்ள அனைத்து கோப்புகளும் சேமிக்கப்பட்டிருக்கும்..

இதிலுள்ள மற்றொரு முக்கியமான பயன் என்னவெனில், கணினியில் உள்ள டாக்ஸ் கோப்புகளில்(Docs files) மாற்றம் செய்யும் பொழுது தானாகவே கூகிள் டாக்ஸிலும் அல்லது கூகிள் டாக்ஸில் உள்ள கோப்புகளில் திருத்தம் செய்யும் பொழுது computer லும் தானாக மாற்றம் செய்யப்பட்டுவிடும். இந்த InSync கொண்டு ஒன்றுக்கும் மேற்பட்ட கூகிள் டாக்ஸ் கணக்கிலுள்ள கோப்புகளை இதே போல் கையாளமுடியும்.

இம்மென்பொருளைத் தரவிறக்க:InSync 

0 comments:

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011