Gmail லை Schedule & Track செய்ய உதவும் Right Inbox


ஜிமெயிலில் ஈமெயில்களை Schedule செய்து அனுப்பவது எப்படி என பார்க்க போகிறோம். சில சமயங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு ஈமெயில் அனுப்ப வேண்டி இருக்கும்.  உதாரணமாக இரவு 12 மணிக்கு என வைத்து கொள்வோம். இதனால் நீங்கள் இரவு 12 மணிவரை கண்விழித்து ஈமெயில் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய ஈமெயிலுக்கு இரவு 12 மணிக்கு Schedule செய்து விட்டால் போதும் உங்களுடைய ஈமெயில் சரியாக நீங்கள் தேர்வு செய்த நேரத்திற்கு மற்றவர்களுக்கு சென்று விடும். ஞாபக மறதி அதிகமாக இருப்பவர்களுக்கு இது பெரிதும் பயன்படும். ஞாபகம் வரும் பொழுது ஈமெயிலை டைப் செய்து Schedule செய்து விடலாம். குறிப்பாக வாழ்த்து செய்திகள் அனுப்ப பெரிதும் பயன்படும்.


ஜிமெயிலில் Schedule வசதியை கொண்டு வர:
  • முதலில் இந்த Right Inbox தளத்திற்கு செல்லுங்கள் உங்களுடைய இணைய பிரவுசர் (Firefox3.6+ Chrome 5.0+) லேட்டஸ்ட் வேர்சனாக இருப்பது நல்லது. 
  • Right Inbox தளத்தில் உள்ள Install Now என்ற பட்டனை அழுத்தி இந்த நீட்சியை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் கொள்ளுங்கள். 
  • இப்பொழுது ஜிமெயிலை ஓபன் செய்யுங்கள். ஏற்க்கனவே ஓபன் செய்து இருந்தால் Refresh செய்யவும்.
  • அடுத்து கீழே உள்ள படங்களில் உள்ளது போல் தொடருங்கள்.
  • அவ்வளவு தான் உங்களுடைய ஜிமெயிலில் இந்த Schedule வசதி ஆக்டிவேட் ஆகி விடும்.
Schedule வசதியை உபயோகிப்பது எப்படி:
  • எப்பொழுதும் மெயில் அனுப்பவது போல Compose பட்டனை அழுத்தி உங்கள் செய்தி, மற்றும் அனுப்புனர் விவரங்களை கொடுத்த பின்னர் Send பட்டனுக்கு பக்கத்தில் Send Later என்ற புதிய பட்டன இருப்பதை காண்பீர்கள் அதனை கிளிக் செய்யவும்.
  • அதில் உங்கள் ஈமெயில் அனுப்ப குறிப்பிட்ட சில நேரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்து கொள்ளுங்கள். 

  • அல்லது உங்களுக்கு தேவையான நேரம் அந்த பட்டியலில் இல்லை என்றால் கடைசியில் உள்ள at a Specific Time என்பதை கிளிக் செய்து உங்கள் ஈமெயில் செல்ல வேண்டிய நேரம் மற்றும் தேதியை தேர்வு செய்து கொள்ளவும்.
  • சரியாக நேரம் set செய்தவுடன் கீழே உள்ள Schedule பட்டனை கிளிக் செய்து விட்டால் போதும் குறிப்பிட்ட நேரத்திற்கு உங்களுடையை ஈமெயில் அவர்களுக்கு சென்று விடும். 
  • எப்படி உபயோகிப்பது என மேலும் விவரமாக அறிய கீழே உள்ள வீடியோவை பாருங்கள். 


இனி உங்கள் ஈமெயில்களை மேலே உள்ள வழிமுறையில் Schedule செய்து அனுப்பி பயனடையுங்கள்

Gmail மூலம் அனுப்பும் Email களை Track செய்ய...

track_your_email

இந்த நீட்சி மூலம் ஜிமெயிலில் அனுப்பப்படும் ஈமெயில்களை Track செய்யலாம். நீங்கள் அனுப்பிய ஈமெயிலை மற்றொருவர் ஓபன் செய்த உடன் அதற்கான அறிவிப்பு உங்கள் ஈமெயிலுக்கு வந்து விடும். இனி  " மச்சி நான் உன் மெயிலை பார்க்கவே இல்லடா" யாரும் உங்க கிட்ட சொல்ல முடியாது. நீங்கள் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும்.


உபயோகப்படுத்துவது எப்படி?

  • இதனை உபயோகிப்பது மிகவும் சுலபம். முதலில் கீழே உள்ள லிங்கில் சென்று இந்த நீட்சியை டவுன்லோட் செய்து இந்த நீட்சியை உலவியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். (ஏற்க்கனவே இன்ஸ்டால் செய்து இருந்தால் மறுபடியும் இணைக்க தேவையில்லை.)
  • இந்த நீட்சி தற்பொழுது குரோம் மற்றும் பயர்பாக்ஸ் உலாவிகளுக்கு மட்டுமே கிடைக்கும். மற்ற உலவியை உபயோகித்தால் இந்த வசதியை பெற முடியாது. 
  • இந்த நீட்சியை இன்ஸ்டால் செய்த உடன் ஜிமெயிலை ஓபன் செய்து Compose பட்டனை க்ளிக் செய்யுங்கள். 
  • அங்கு Send Later என்ற பட்டனுடன் Track என்ற ஒரு புதிய பட்டனும் வந்திருக்கும். 
  • ஈமெயில் அனுப்புவதற்கு முன் அந்த Track பட்டனை டிக் செய்து அனுப்பி விட்டால் அந்த ஈமெயிலை ஓபன் செய்தவுடன் அந்த விவரங்கள் உங்கள் மெயிலுக்கு வந்து விடும்.
மேலும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.


டவுன்லோட் செய்ய 

Right Inbox for Chrome5.0+ டவுன்லோட் 
Right Inbox for Chrome3.6+ டவுன்லோட்

இனி உங்கள் Computer இலும் Google docs

Google-ன் பயன்மிக்க சேவைகளில் முக்கியமான ஒன்று கூகிள் டாக்ஸ் (Google docs). இந்த கூகிள் டாக்ஸின் மூலம் Online-லேயே பல்வேறு விதமான கோப்புகளை(Kind of files) உருவாக்க முடியும். எளிமையாக சொல்வதென்றால், Google docs இணையத்தில் Microsoft Office போன்று செயல்பட்டுவருகிறது. கூகிள் டாக்ஸின் மூலம் கோப்புகளை இணையத்திலேயே உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் அங்கேயே சேமிக்கவும்(save) முடிகிறது. தேவைப்படும்போது அக்கோப்புகளை Download செய்துகொள்ள முடியும். நண்பர்களுடன் பகிர்ந்து (Share) கொள்ளவும் முடிகிறது.



இதில் இருக்கும் பிரச்னை என்னவென்றால், நமக்கு வேண்டிய நேரத்தில் எல்லாம் Internet சென்றே google docs-ல் உள்ள கோப்புகளை கையாள முடியும். Download செய்வதற்கும் இப்படி Internet இருந்தால் செய்ய முடியும். இவ்வாறு இணையத்தை உபயோகிக்காமல் நம்முடைய கம்ப்யூட்டரிலேயே இந்த கூகிள் Docs ஐ கொண்டுவர முடியும். இதற்கு உதவுவது இந்த InSync என்ற மென்பொருள் ஆகும்.

இந்த சிறிய மென்பொருளை (Small software)தரவிறக்கம் செய்து கொண்டு, நமது கணினியில் நிறுவ வேண்டும்(Install). அதன் பின் insynchq உடன் நம் computer-ல் நிறுவவேண்டிய கூகிள் டாக்ஸ் கணக்கை கொடுக்கவேண்டும். குறிப்பிட்ட கணக்கை insynchq யில் இணைக்க கூகிளின் அனுமதி வேண்டும்.


இதன் மூலம் insynchq ல் உங்கள் Google கணக்கின் பெயரிலேயே ஒரு கணக்கு துவங்கப்பட்டுவிடும். மேலும் உங்கள் கணினியின் My Documents-ல் Insync என்ற கோப்பு காணப்படும். அதில் குறிப்பிட்ட கூகிள் டாக்ஸில் உள்ள அனைத்து கோப்புகளும் சேமிக்கப்பட்டிருக்கும்..

இதிலுள்ள மற்றொரு முக்கியமான பயன் என்னவெனில், கணினியில் உள்ள டாக்ஸ் கோப்புகளில்(Docs files) மாற்றம் செய்யும் பொழுது தானாகவே கூகிள் டாக்ஸிலும் அல்லது கூகிள் டாக்ஸில் உள்ள கோப்புகளில் திருத்தம் செய்யும் பொழுது computer லும் தானாக மாற்றம் செய்யப்பட்டுவிடும். இந்த InSync கொண்டு ஒன்றுக்கும் மேற்பட்ட கூகிள் டாக்ஸ் கணக்கிலுள்ள கோப்புகளை இதே போல் கையாளமுடியும்.

இம்மென்பொருளைத் தரவிறக்க:InSync 

Facebook இல் மீண்டும் Spam கவனம்...!!



சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் இருக்கும் பேஸ்புக் தளத்தை நாம் முறையாக பயன்படுத்தவில்லை என்றால் அதுவே நமக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும். பேஸ்புக் தளத்தில் தற்போது பிரச்சனை ஏற்படுத்துவது Third-Party Applications. இவைகளில் சில நம்முடைய மானத்தை பேஸ்புக்கில் கப்பலேற்றுகிறது.



தற்போது பிரச்சனை தருவது Dailymotion மற்றும் Yahoo பேஸ்புக் அப்ளிகேசன்களாகும்.

Dailymotion

Yahoo

மேலே உள்ளது நண்பர்கள்  பார்த்த வீடியோ எனவும், படித்த கட்டுரை எனவும் பேஸ்புக்கில் வந்த செய்தி. இது போன்று ஆபாச படங்கள் பார்த்ததாகவும் செய்தி வரும். இதை நம்பி நாம் க்ளிக் செய்தால் பின்வருமாறு காட்டும்,




எந்தவொரு பேஸ்புக் அப்ளிகேஷனை பயன்படுத்தினாலும் இது போல காட்டும். அதாவது உங்கள் பேஸ்புக் கணக்கை அந்த அப்ளிகேசன் அணுகுவதற்கு அனுமதி கேட்கும். மேலுள்ள படத்தை நன்றாக பாருங்கள். 

This app may post on your behalf, including videos you watched, films you watched and more.

அதாவது  நீங்கள் அந்த அப்ளிகேஷனை பயன்படுத்தினால் உங்கள் கணக்கில் இருந்து செய்திகளை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பும். இதன் மூலம் Spamசெய்திகளை அனுப்புவதற்கு நீங்களே அனுமதி அளிக்கிறீர்கள்.


அவ்வாறு  க்ளிக் செய்த பின் அது அந்த தளத்திற்கு சென்றுவிடும். அங்கு நீங்கள் எதை க்ளிக் செய்கிறீர்களோ அவையும், சில சமயம் க்ளிக் செய்யாதவைகளும் நீங்கள் பார்த்ததாக உங்கள் பேஸ்புக் நண்பர்களுக்கு செய்தி அனுப்பிவிடும்.


இதனை  தவிர்ப்பது எப்படி?



இவற்றிலிருந்து தவிர்க்க வேண்டுமெனில் இது போன்ற சுட்டிகளை க்ளிக் செய்யாமல் இருக்க வேண்டும். தவறுதலாக க்ளிக் செய்தாலும் Dailymotion, Yahoo போன்ற Third-Party Applications-களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.



ஏற்கனவே நீங்கள் க்ளிக் செய்து அனுமதி கொடுத்துவிட்டீர்கள் என்றால் அந்த அப்ளிகேசன்களை உங்கள் கணக்கிலிருந்து நீக்கிவிடுங்கள்.



அப்ளிகேசன்களை நீக்குவது எப்படி?



உங்கள் பேஸ்புக் கணக்கில் Account settings என்பதை க்ளிக் செய்து, இடது புறம் உள்ள Apps என்பதை க்ளிக் செய்தால், நீங்கள் பயன்படுத்திவரும் அனைத்து அப்ளிகேசன்களையும் காட்டும். 



மேலே உள்ள DailymotionYahoo என்பதற்கு பக்கத்தில் உள்ள X குறியீடை க்ளிக் செய்து அதனை நீக்கிவிடுங்கள். இது போன்ற அனைத்து அப்ளிகேசன்களையும் நீக்கிவிடுவது சிறந்தது.

என் பரிந்துரை: 
எக்காரணம் கொண்டும் Third Party Application-களை பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

சிறு வேண்டுகோள்: 
இது பேஸ்புக்கில் தற்போது பரவிவரும் முக்கிய பிரச்சனை என்பதால் தாங்கள்  இந்த தகவலை பேஸ்புக்கில் பகிர்ந்தால் பலர் இதன் மூலம் தங்களை பாதுகாத்துக் கொள்வார்கள்.

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011