புதிய பரிணாமத்தில் VLC மீடியா பிளேயர்...


VLC மீடியா பிளேயர் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஓபன் சோர்ஸ் மென்பொருளாகும். இந்த மென்பொருளில் எக்கசக்கமான வசதிகள் நிறைந்து உள்ளது.
சில வசதிகள் இதில் மறைந்து உள்ளது. எந்த ஒரு தோற்றத்தையும் தொடர்ந்து பார்த்து கொண்டே இருந்தால் நாளடைவில் அது நமக்கு பிடிக்காமல் போய்விடும், அது தான் மனித இயல்பு.
அப்படி வருடக்கணக்கில் உபயோகித்து கொண்டிருக்கும் VLC மீடியா பிளேயரை ஒரே தோற்றத்தில் பார்த்து சலித்து விட்டதா? கவலையை விடுங்கள். VLC மீடியா பிளேயரை வெவ்வேறு அழகழகான உங்களுக்கு பிடித்த தோற்றத்திற்கு ஒரே நிமிடத்தில் மாற்றி விடலாம்.
முதலில் இந்த தளத்திற்கு http://www.videolan.org/vlc/skins.php செல்லுங்கள். இங்கு சுமார் 150க்கும் அதிகமான VLC தோற்றங்கள் இருக்கிறது. இதில் உங்களுக்கு பிடித்த தோற்றத்தை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு பிடித்த தோற்றத்தின் மீது கிளிக் செய்தால் அந்த தோற்றம் பெரியதாக காட்டும், அதில் உள்ள download லிங்கை அழுத்தி அந்த டிசைனை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் அல்லது அனைத்து தோற்றங்களும் வேண்டுமென்றாலும் அதனையும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இப்பொழுது நீங்கள் தரவிறக்கம் செய்த .vlt கோப்பை(ZIP கோப்பாக இருந்தால் Extract செய்து கொள்ளுங்கள்) CUT செய்து C:Program filesVideoLanVLCSkins என்ற இடத்தில் பேஸ்ட் செய்யவும். நீங்கள் VLC பிளேயரை வேறு டிரைவில் நிறுவி இருந்தால் C க்கு பதில் அதை தெரிவு செய்து கொள்ளவும்.
சரியான இடத்தில் பேஸ்ட் செய்ததும் அதை அந்த விண்டோவை மூடி விடுங்கள். இப்பொழுது VLC மீடியா பிளேயரை ஓபன் செய்யுங்கள். அதில் Tools ==> Preferences என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும், அதில் SKIN பகுதியில் CUSTOM SKIN என்பதை தெரிவு செய்து நீங்கள் முன்பு பேஸ்ட் செய்த உங்களுக்கு விருப்பமான .vlt  கோப்பை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
vlt கோப்பை தெரிவு செய்யும் பொழுது already exit என்ற எச்சரிக்கை செய்தி வந்தால் அதில் Yes என்பதை அழுத்தி உங்களுக்கு விருப்பமான தோற்றத்தை தெரிவு செய்தவுடன் கீழே உள்ள Save என்பதை அழுத்துங்கள்.
இப்பொழுது உங்கள் VLCமீடியா பிளேயரை க்ளோஸ் செய்து விட்டு மறுபடியும் ஓபன் செய்யுங்கள். நீங்கள் விரும்பிய தோற்றத்திற்கு VLC மீடியா பிளேயர் மாறி இருக்கும்.

0 comments:

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011