Android Mobile இல் Battery life time ஐ நீடிக்க..!!


  
ஆன்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தும் அதிகமானவர்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சனை மொபைலின் பேட்டரி சார்ஜ் விரைவில் தீர்ந்துவிடுவது. பொதுவாக அதிக வசதிகள் கொண்ட (ஸ்மார்ட்) மொபைல்கள் அனைத்தும் எதிர்கொள்ளும் பிரச்சனை இது. நம்மால் இயன்றவரை பேட்டரி பயன்பாட்டை குறைத்து அதிக நேரம் நீட்டிக்க செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

பேட்டரி சார்ஜை அதிகம் எடுப்பது எது?


மொபைலில் Settings => Battery ( சில மொபைல்களில் Settings > About Phone > Battery Useபகுதிக்கு சென்றால் பேட்டரி சார்ஜின் பயன்பாட்டை காட்டும். அங்கு எந்த அப்ளிகேசன் அதிகம் பேட்டரியை எடுத்துக் கொள்கிறது என்பதை தெரிந்துக் கொண்டு அதனை கட்டுப்படுத்தலாம்.

பேட்டரி சார்ஜை அதிகப்படுத்த பொதுவான ஐந்து வழிகள்:

1. திரை ஒளிர்வு (Brightness)


மொபைலின் Brightness-ஐ முடிந்தவரை குறைவாக வைத்திருங்கள். அதிகமாக வைத்திருந்தால் அதிகம் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும்.


Settings => Display => Brightness பகுதிக்கு சென்று Brightness-ஐ மாற்றிக் கொள்ளலாம்.

2. GPS, Wi-Fi & Bluetooth

Status Switch

தேவைப்படாத நேரங்களில் GPS, Wi-Fi, Bluetooth ஆகியவற்றை நிறுத்திவிடுங்கள். இவைகள் எப்போதும் On செய்திருந்தால் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும்.



Android மொபைலில் Power control அல்லது Status Switch என்ற Widget (மேலே உள்ள படத்தில் உள்ளது போன்று) இருக்கும். அதை Home Screen-ல் வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் GPS, Wi-Fi, Bluetooth ஆகியவற்றை எளிதாக ஆன்/ஆஃப் செய்துக் கொள்ளலாம்.

3. Live Wallpaper

Live Wallpaper

ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள வசதிகளில் ஒன்று Live Wallpaper எனப்படும் தொடுவுணர்வு கொண்ட அனிமேசன் புகைப்படங்கள். இந்த வசதியும் பேட்டரியை எடுத்துக் கொள்ளும். விருப்பமிருந்தால் சில நாட்கள் வைத்துக் கொண்டு பிறகு நீக்கிவிடுங்கள்.

4. Home Screen Widgets


ஆண்ட்ராய்ட் Home Screen-ல் நாம் வைக்கும் Widget-களை நாம் பயன்படுத்தவில்லை என்றாலும், அதுவும் கொஞ்சம் பேட்டரி அளவை எடுத்துக் கொள்ளும். அதனால் நாம் அடிக்கடி பயன்படுத்துபவற்றை மட்டும் வைத்துவிட்டு மற்றவற்றை நீக்கிவிடுவது நன்று.

5. Background Applications

சில அப்ளிகேசன்களை பயன்படுத்தவில்லை என்றாலும் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும். அதுவும் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும். இது பற்றி ஆன்ட்ராய்ட் மொபைல் பாதுகாப்பானதா? என்ற பதிவில் விரிவாக பார்க்கலாம்.


ஸ்மார்ட்போன்கள் என்றாலே புது புது வசதிகள் கொண்டிருக்கும். எல்லா வசதிகளையும் பயன்படுத்த வேண்டுமானால் பேட்டரி அதிக தடவை சார்ஜ் செய்து தான் ஆக வேண்டும். புதிய வசதிகள் வேண்டுமா? பேட்டரி சார்ஜ் நீடிக்க வேண்டுமா? என்பதனை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

தொழில்நுட்ப துணுக்குகள்..!!



தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய பகுதியில் பார்ப்போம்.

பேஸ்புக் மெஸ்ஸஞ்சர் (Facebook Messenger):



பேஸ்புக் தளம் சாட் செய்வதற்காக Messenger என்ற வசதியை முன்பு அறிமுகப்படுத்தியது. தற்போது ஆண்ட்ராய்டுக்கான பேஸ்புக் மெஸ்ஸஞ்சரில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி பேஸ்புக் கணக்கு இல்லாமலேயே வெறும் பெயர் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் கொடுத்து நண்பர்களுடன் சாட் செய்யலாம். இந்த வசதி தற்போது India, Indonesia, Australia, Venezuela, South Africa ஆகிய நாடுகளில் மட்டுமே அறிமுகமாகியுள்ளது. மற்ற நாடுகளுக்கும், ஆப்பிள் சாதனங்களுக்கும் விரைவில் அறிமுகமாகும்.


இந்த வசதி WhatsApp Messenger போன்று தான். மேலும் தற்போது WhatsApp-ஐ பேஸ்புக் வாங்கப்போவதாக இணையத்தில் செய்தி பரவியது. ஆனால்WhatsApp இதனை மறுத்துள்ளது.

Google Play vs App Store:



Google Play மூலம் விற்கப்படும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன் மற்றும் கேம்களின் வருமானம் வருடாவருடம் அதிகரித்து வருகிறது. கடந்த வருடத்தைவிட இந்த வருடம் 311 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும் அந்த வருமானத்தை விட நான்கு மடங்கு அதிக வருமானத்தை ஆப்பிளின் App Store-ல் விற்கப்படும் அப்ளிகேசன் மற்றும் கேம்கள் பெறுகின்றது.
நண்பர்கள் பயன்படுத்தும் அப்ளிகேசன்:


ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் அதிக விமர்சனத்துக்கு உள்ளானது ஆப்பிள் மேப் தான். இதற்காக ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக் பயனாளர்களிடம் மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த மேப் அப்ளிகேசனில் ட்விட்டர், பேஸ்புக் நண்பர்கள் மற்றும் நம்மை சுற்றியுள்ளவர்கள் பயன்படுத்தும் அப்ளிகேசன்களை பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

கூகுளின் ஆப்பிள் அப்டேட்:

கூகுள் நிறுவனம் ஆப்பிளின் ஐபோன் மற்றும் ஐபேட்களுக்கான யூட்யூப் அப்ளிகேசனையும், ஜிமெயில் அப்ளிகேசனையும் புதிய வசதிகளுடன் அப்டேட் செய்துள்ளது.

மொபைல் உலகில் யாஹூ:


இணையத்தில் ஜாம்பவனாக ஒரு காலத்தில் (?) திகழ்ந்த யாஹூ நிறுவனம் பிறகு பல்வேறு சோதனைகளை சந்தித்தது. சமீபத்தில் யாஹூ நிறுவனத்தின் புது சிஇஓ-வாக மரிஸ்ஸா மேயர் என்பவர் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவருகிறார். தற்போது On The Air என்னும் மொபைல் வீடியோ சாட் நிறுவனத்தை கையைகப்படுத்தியுள்ளார். இந்த முறை கையகப்படுத்தியது On The Air தயாரிப்புக்காக இல்லை, மாறாக அதன் மென்பொருள் உருவாக்குனர்களுக்காக இதனை செய்துள்ளது. அதனை உருவாக்கிய ஐந்து பேர் இனி யாஹூவின் மொபைல் பிரிவில் பணிபுரிவார்கள்.

Keyboard இல் Function Key என்றால்..??


நாம் கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று F5. மற்ற பதினோரும் கூட மிக அதிகமான பயன்களை தருகின்றனர். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.






F1

இது பெரும்பாலும் எல்லா ப்ரோக்ராம்களிலும் Help Screen ஓபன் செய்யப் பயன்படுகிறது. CMOS Setup இலும் பயன்படுகிறது.
Windows Key+ F1 Help Screen ஓபன் செய்ய.



F2
இது Highlight செய்யபட்ட file or folder or Icon க்கு Rename செய்யப் பயன்படுகிறது. CMOS Setup இலும் பயன்படுகிறது. Boot மெனுவுக்கு செல்ல



Microsoft Word இல் இதன் பயன்கள்:

Alt + Ctrl + F2 --> open a new document in Microsoft Word.
Ctrl + F2--> display the print preview window in Microsoft Word.


F3
இது நிறைய ப்ரோக்ராம்களில் Search option ஓபன் செய்ய பயன்படுகிறது. MS-DOS இல் கடைசி வரியை Repeat செய்ய பயன்படுகிறது. MS WORD இல் upper case இல் இருந்து lower case க்கு வார்த்தை முழுவதையும் மாற்ற பயன்படுகிறது.



F4
Find window ஓபன் செய்ய(check in the My Computer ) கடைசியாக நடந்த Action Repeat செய்ய பயன்படுகிறது.(உதாரணம் MS WORD இல் ஒரு line தொடர்ந்து Paste செய்ய இது எளிதான வழி.)

Alt+F4 will Close all Programs.
Ctrl+ F4 will close current Program.


F5
Reload or Refresh
Open the find, replace, and go to window in Microsoft Word
PowerPoint இல் Slide Show ஸ்டார்ட் செய்ய.



F6
cursor address bar க்கு மாற்றும். (IE, Mozilla)
Ctrl + Shift + F6 இது புதிய MS WORD Document ஓபன் செய்யும்.



F7
MS இல் Spell Check & Grammar Check செய்ய பயன்படும். (Word, Outlook,etc ) Mozilla வில் Caret Browsing ON செய்ய பயன்படும்.



F8
விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும் போது நாம் Safe Mode Access செய்ய இது பயன்படும்




F9
Quark 5.0 வில் Measurement toolbar ஓபன் செய்ய பயன்படுவதாக உள்ளது



F10
இது MS இல் MenuBar ஓபன் செய்ய பயன்படுகிறது. (MS WORD இல் முயற்சி செய்யவும்.)
Shift+F10 - Right Click ஆக செயல்படும்.



F11
இன்டெர்நெட் பிரவுசர்களில் Full Screen கொண்டுவர பயன்படும். nகணினி திரையை முழு ஸ்க்ரீன்க்கு கொண்டு வரவும் பயன்படும்



F12
MS Word இல் save as menu வை ஓபன் செய்ய பயன்படும்.
Shift+F12 will Save MS Word
Ctrl+Shift+F12--MS Word print செய்ய பயன்படும்.

Photoshop plugins இலவசமாக...


அனைவரும் போட்டோசோப் பயன்படுத்தி இருப்பீர்கள். அதில் அநேகமானோருக்கு தெரிந்தது அடிப்படை விடயங்கள் தான். அதில் ஆழமாக செல்வதென்றால் நிச்சயம் அதை படித்து இருக்க வேண்டும். ஆனாலும் படிக்காத மக்களுக்காக- புகைப்பட பிரியர்களுக்காக பல plugins கட்டணத்துக்கும் சில இலவசமாகவும் கிடைக்கின்றன. இப்பதிவின் ஊடாக உங்களுக்கு அவசியமான பல இலவச plugin பற்றியும் சில முக்கியமான கட்டண plugins பற்றிய தகவல்களுடன் இலவசமாக தரவிறக்கும் இணைப்பையும் இணைத்து உள்ளேன். நீங்களும் விரும்பியதை தரவிறக்கி மகிழுங்கள்.


இதற்கு உங்களின் அடிப்படை தேவையாக நிச்சயம் cs தொகுப்பு போட்டோஷாப் நிச்சயம் கணனியில் இருக்க வேண்டும். அது இல்லாத கணணிகள் அரிது என்பதால் நான் அதை தரவிறக்குவது தொடர்பாக இங்கு எதுவும் சொல்லவில்லை.



அடுத்து இதை எப்படி பயன்படுத்துவது? அனைத்துக்கும் பொதுவாக தரவிறக்கும் போது சிறப்பு அறிவுரைகள், வழிக்காட்டல்கள் கிடைக்கும்.



பொதுவான முறை இது தான். நீங்கள் நிறுவிய பின்னர் நிறுவிய இடத்திற்கு செல்லுங்கள். அங்கு plug-in என்ற folder உருவாக்கி இருக்கும். உதாரணமாக C:\Program Files\ Portraiture( Plugin name)\Plugin . இந்த போல்டரை பிரதி  எடுத்து C:\Program Files\Adobe\Adobe Photoshop CS?\Plug-ins\ க்கு சென்று பிரதி இடுங்கள். அதன் பின்னர் நீங்கள் போட்டோஷாப்பை திறந்து அங்கு சென்று பில்டர் (Filter) மெனுவில் நீங்கள் நிறுவிய plugin னை பயன்படுத்த தொடங்கலாம்.



இப்பதிவு plugin நிறுவுவதோ அல்லது அதை பயன்படுத்தும் முறை பற்றியோ விளக்கம் தருவதல்ல. இது உங்களுக்கு Pluginகளை அறிமுகப்படுத்தி தரவிறக்க வழி செய்யும் பதிவாகும்.

01. Exposure 4


  • Publisher Home: Alien Skin
  • Price: $249 (உங்களுக்கு இலவசம்)
  • Best for: Photographers
  • Free Download: Media Fire - 3MB Click here
  • இதன் மூலம் உயர்தர சினிமா படங்களின் தனிமையை ஏற்படுத்த முடிகிறது. கலர் எபக்ட் சிறப்பாக உள்ளது.


02. Portraiture


  • Publisher: Imagenomic
  • Price: $199.95
  • Best for: Photographers
  • Free Download: Click Here (10MB)

படத்தை பார்க்கவே விளங்கி இருக்கும். முகத்தில் உள்ள வடுக்களை தடயமே இல்லாமல் மறைக்க இதை விட சிறந்த வழி இருக்காது.


03. Perfect Effects 3 FREE


மேலே உள்ள படங்ககளை பாருங்கள். HDR எனும் High Dynamic Range முறைக்காக சிறப்பாக உருவாக்கம் பெற்ற Plugin இது.



  • Publisher: onOne Software
  • Price: Free
  • Best for: Photographers & Designers
  • Download & Home Page: Click


  • 04. Wire Worm




    • Publisher: MV’s Plugins
    • Price: Free
    • Best for: Photographers
    • Download & Home Page: Click

    இது படங்களில் உள்ள கோடுகளை நீக்க அதிகம் பயன்படும். அதாவது மின்கம்பங்கள், கடத்திகள் என பலவாறு. ஆனாலும் இதை விட மனிதர்களை கூட மிக மிக இலகுவாக இதன் உதவியுடன் நீக்க முடியும்.

    05.Noiseware


    • Publisher: Imagenomic
    • Price: $79.95 (உங்களுக்கு இலவசம்)
    • Best for: Photographer
    • Download: Click here - MediaFire- 3MB

    இதையும் நீங்கள் பார்த்தவுடன் புரிந்து இருப்பீர்கள். பொதுவாக கையடக்க தொலைபேசி கேமராகளில் எடுத்த படங்களே இவ்வாறு Noise உடன் தோன்றும். அவ்வாறான படங்களுக்கு இது அட்டகாசமான தீர்வு.




    இவற்றை நிறுவுதலில் அல்லது பயன்படுத்துவதில் சிக்கல் தோன்றினால் தயங்காமல் கருத்துபகுதியில் எழுதுங்கள்.
    இதை விட இன்னும் இருக்கிறது நண்பர்களே. இன்னுமொரு பதிவில் பார்ப்போம். நீங்களும் உங்களுக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    adobe Photoshop Shortcuts ஒரே பார்வை இல் ..!!

    போட்டோஷாப் பயன்படுத்தாதவர்கள் இருக்க முடியாது. பட்டி தொட்டி எங்கும் adobe நிறுவன பிளாஷ் பிளேயர், ரீடர், மற்றும் போட்டோஷாப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் Photoshop அதிகளவு திரை கட்டளைகளை கொண்டது. ஒவ்வொரு தேவைக்கும் கிளிக் செய்வது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். செய்யும் வேலையை இலகுபடுத்த shortcuts உதவுகின்றன. 
    உங்களில் தேவையை இலகுவாக இங்கே ஒரே பார்வையில் அனைத்து shortcutகளையும்  காட்சிப்படுத்தி உள்ளேன். நினைவில் வைக்க முடியாவிட்டால் right click செய்து save செய்து கொள்ளுங்கள். சிறிது நாட்கள் இதனுடன் பழகும் போது தானாகவே மனப்பாடம் ஆகி விடும்.

    iPhone இல் 3D Video எடுத்து மகிழ....!!!


    3DCone: முப்பரிமாண காட்சிகளைபிரபல கைப்பேசி வகைகளுள் ஒன்றான iPhone களில் காணப்படும் கமெரா மூலம் இதுவரை காலமும் இருபரிமாணமுடைய புகைப்படங்களையும், வீடியோக்களையுமே எடுக்கக்கூடிய காணப்பட்டது.

    எனினும் தற்போது அறிமுகமாக்கப்பட்டுள்ள iPhone களில் இணைத்துப் பயன்படுத்தக்கூடிய 3DCone எனும் பிரத்தியேக சாதனம் ஒன்றின் மூலும் முப்பரிமாணம் கொண்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்து மகிழ முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இக்கருவியில் காணப்படும் தளவாடி ஒன்றின் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு வகையான காட்சிகள் எடுக்கப்பட்டு பின்னர் இணைக்கப்படுவதன் மூலம் குறித்த காட்சியானது முப்பரிமாணமுள்ளதாக தோற்றமளிக்கின்றது.
    இக்கருவியினை iPhone 4, iPhone 4s ஆகியவற்றில் இணைத்து பயன்படுத்த முடியும்.

    google ல் புதிய Scientific Calculator மற்றும் Unit Converter வசதிகள்



    தேடியந்திரங்களில் யாரும் தொட முடியாத மிகப்பெரிய இடத்தில் உள்ளது கூகுள் இணையதளம் ஆகும். மொபைல்களில் இன்டர்நெட் வசதி வந்த பிறகு கிராமங்களில் கணினியை உபயோகிக்காதவர்கள் கூட மொபைல் மூலம் கூகுளின் வசதியை அறிந்துள்ளனர். இவ்வளவு பேரையும் கவர்ந்திழுக்க காரணம் அதிலுள்ள வசதிகள்.


    அதுமட்டுமில்லாமல் தேய்ந்து போன ரெக்கார்டை திரும்ப திரும்ப தேய்க்காமல் வாசகர்கள் பயன்பெறும் வகையில் நாளுக்கு நாள் ஏதாவது ஒரு புதிய வசதிகளை புகுத்தி வருவதே கூகுளின் சிறப்பு. அந்த வகையில் தற்பொழுது சில புதிய வசதிகளை கூகுள் தேடியந்திரந்தில் அறிமுக படுத்தி உள்ளனர். அவைகளை கீழே பார்ப்போம்.


    1)Scientific Calculator :
    கூகுள் தேடியந்திரத்தை வெறும் தேடு பொறியாக மட்டுமின்றி வேறு பல காரணங்களுக்கும் உபயோகிக்கலாம். அதில் முக்கியாமனது கால்குலேட்டர் வசதி. 1+1 என்னன்னு கேட்டால் உடனே சொல்லிடுவோம் 44646*545456 என்னெவென்று கேட்டால் உடனே நாம் தேடுவது கால்குலேட்டரை தான்.  மற்றும் ஏதேனும் மிகவும் கடினமான scientific கணிதங்களை போட Scientific Calculator இருந்தால் தான் போட முடியும்.  இனி இதற்க்காக எங்கும் அலைய வேண்டியதில்லை கூகுளில் Scientific Calculator வசதியை அறிமுக படுத்தி உள்ளனர்.


    கூகுளை திறந்து சர்ச் பாரில் சாதரணமாக  1+1 டைப் செய்தால் அதற்க்கான விடை கீழே இருப்பதை போன்று scientific Calculator-ல் வந்திருப்பதை காணலாம்.


    இதில் எவ்வளவு கடினமான கணிதங்களுக்கும் எளிதாக விடையை தெரிந்து கொள்ளலாம். மற்றும் இதில் வாய்ஸ் கண்ட்ரோல் வசதியும் இருப்பதால் 2+2 என சொன்னாலே அதற்க்கான விடையை அறிந்து கொள்ளலாம். 

    இந்த கால்குலேட்டரின் உதவியுடன் போட்ட சில சிக்கலான கணிதங்களை கீழே காணுங்கள்.



    2) Unit Converter:
    கால்குலேட்டர் வசதியோடு மற்றொரு பயனுள்ள வசதியையும் அளித்துள்ளது.   அலகுகளை ஒன்றிலிருந்து மற்றொன்டிற்கு மாற்ற உதவும் வசதியை கொடுத்ள்ளனர்.

    அதாவது 1 டிகிரி செல்சியஸ் என்பது எத்தனை பாரன்ஹீட் என தெரிந்து கொள்ள வேண்டுமா? அல்லது 10km என்பது எத்தனை மைல் என தெரிந்து கொள்ள வேண்டுமா? அல்லது 1452 டன் என்பது எத்தனை கிலோ என தெரிய வேண்டுமா? அனைத்தையும் சுலபமாக கூகுள் தேடியந்திரத்தில் தெரிந்து கொள்ளலாம்.




    இது போன்று அனைத்து அலகுகளையும் உங்களுக்கு தேவையானத்தில் மாற்றி கொள்ளலாம். 

    இந்த வசதி பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் குறிப்பாக மாணவர்களுக்கு மிகவும் பயன்படும். ஆகவே உங்களுக்கு மாணவர்களிடத்தில் இந்த வசதியை அறிமுக படுத்துங்கள். 

    இரகசிய தகவல்களை மறைத்து வைக்க இலகுவழி..!!!


    கணணியில் உங்களது இரகசிய தகவல்களை மறைத்து வைப்பதற்கு ஏதேனும் ஒரு மென்பொருளை பயன்படுத்துவீர்கள். அந்த மென்பொருளில் ஏதேனும் பிரச்னை வந்தால், உங்களது இரகசிய தகவல்களை மீளப்பெறுவது சிரமம்தான். இதற்கு தீர்வாக மென்பொருளின் உதவி இல்லாமல், தகவல்களை மறைக்கலாம்.
    இதற்கு முதலில் Start->Run->cmd கிளிக் செய்யவும். இப்போது (CMD) command Prompt ஓபன் ஆகும். இதில் C:Documents and Settingscontent இதற்கு அடுத்து D: என்று Type செய்யுங்கள். (எந்த Drive க்குள் நீங்கள் Folder வைத்து உள்ளீர்களோ அந்த லெட்டர் கொடுக்கவும். Ex: E:, F:, G:, etc) இப்போது அடுத்த வரியில் நீங்கள் தெரிவு செய்த டிரைவ் வந்து இருக்கும்.
    இப்போது D:/>attrib +h +s Folder Name (Folder Name ->மறைக்க வேண்டிய Folder Name). அவ்வளவு தான் உங்களது கோப்பறை இனிமேல் மறைத்து வைக்கப்படும். தற்போது உங்களது கோப்பறையை மீண்டும் தெரிய வைக்க, D:/>attrib -h -s Folder Name கொடுத்தால் போதும். இந்த முறையில் C டிரைவில் உள்ள கோப்புகளை மட்டும் மறைத்து வைக்க இயலாது.

    Gmail ஆல் அனுப்ப முடியாதவை..!


    பலராலும் விரும்பி உபயோகிக்கப்படுகின்ற மின்னஞ்சல் சேவையாக ஜி மெயில் உள்ளது. ஜிமெயிலில் 25MB வரை அளவுடைய கோப்புக்களை இணைத்து மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். ஆனால் ஒரு சில பாதுகாப்பு பிரச்சினைகளுக்காக ஜிமெயில் நிறுவனம் சில பைல் வகைகளைத் தன் மூலம் அனுப்புவதை அனுமதிப்பதில்லை.
    இந்த பைல் வகைகளை Zip செய்து அனுப்பினாலும் சரியாகக் கண்டறிந்து தடுத்து விடும். இவ்வாறு ஜி மெயிலில் அனுப்ப முடியாத பைல் வகைகள் பற்றி நாம் அறிந்து வைத்திருப்பது குறைவு. ஜி மெயிலில் அனுப்ப முடியாத பைல் வகைகள் எவை என்பதனை இங்கு காணலாம்.
    அவையாவன
    இந்தப் பட்டியலில் உள்ள ஒரு சில பைல்வகைகளை File type Rename செய்து அனுப்பினால் ஜிமெயில் மூலம் அனுப்ப முடியும். உதாரணமாக .exe என்பதை .jpg என்று மாற்றி மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். அதை பழைய படி .exe மாற்றி விட்டால் போதும் அந்த மென்பொருளை உபயோகித்துக் கொள்ளலாம். ஆனால் எல்லாவற்றுக்கும் அது பொருந்தாது.

    Android Phone களுக்கான Top 5 Web browsers...



    இன்றைய நாளை பொறுத்தவரை மிக பிரபலமான, அதிகமானவர்களால் விரும்பி உபயோகிக்கப்படும் தொலைபேசி இயங்குதளம் என்றால் அது Android தான். இதனால் பல நிறுவனங்களும் Android இற்கான Application களை அதிகமாக வெளியிட ஆரம்பித்துள்ளார்கள். அந்த வகையில் Android இற்கான Top 5 இணைய உலாவிகளை பார்ப்போம்.

    Opera Mini Browser

    Opera Mini பொதுவாக அனைத்து தொலைபேசிகளிலும் சிறப்பான சேவையை வழங்கும் இணைய உலாவியாகும். Android இலும் இந்த உலாவியை பெற்றுக்கொள்ளலாம்.


    தரவிறக்க :Opera Mini Browser

    Dolphin Browser HD

    இந்த உலாவி மிகவும் வேகமானதும் அதேநேரம் கையாளுவதற்கு இலகுவானதும் ஆகும். Dolphin Mini, Dolphin, Dolphin HD என மூன்று Version களாக வெளிவந்துள்ளது இந்த உலாவி

    தரவிறக்க :Dolphin Browser HD

    Skyfire Web Browser

    இந்த இணைய உலாவியின் சிறப்பம்சம் Flash Support ஆகும். கூடவே வேகமாகவும் செயற்படக்கூடியது. சிறந்த ஒரு இணைய அனுபவத்தை இந்த உலாவியில் பெற்றுக்கொள்ளலாம்.


    தரவிறக்க : Skyfire Web Browser

    Firefox Browser

    கணினிக்கான சிறந்த இணைய உலாவியை வழங்கிவந்த Mozilla நிறுவனத்தின் Android தொலைபேசிக்கான பதிப்பு இதுவாகும். இது வேகமானதும், இலகுவானதும், ஒழுங்குபடுத்தக்கூடியதுமாகும். இதன் Security மற்றும் Privacy Feature சிறந்த Online பாதுகாப்பை தருகிறது.


    தரவிறக்க : Firefox Browser

    UC Browser

    உலகளாவிய ரீதியில் அதிக பாவனையாளர்களால் உபயோகிக்கப்படும் ஒரு இணைய உலாவி. வேகமான செயற்பாட்டை கொண்டது.
    தரவிறக்க : UC Browser

    SriLankan Government Gazette

    Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

     
    Design by M.F.M. Nithal | Copyright © 2011