இவ்வார கவிதை: கவிஞனின் மனஎழுச்சி....


இனிமை தரும் கவிதை ஒன்றை
மணி மொழியாய் வடித்திட
நினைத்தேன்....

எண்ணங்கள் கடல் அலையாய்
முட்டி மோதுகின்றன......
வளம் கொழிக்கும் வையகத்தினில்
வார்த்தைக்கு தான் பஞ்சம் உண்டோ..
அன்றேல்........
பழம் போற்றும் தமிழ் மொழிக்கு தான்
பற்றாக்குறையோ.......

இனிமையூட்டும் இயற்கையின்
இன்ப சுவை பற்றி வடிப்பேனோ...
அன்றேல்........
அருட் கொடைதனை அளித்த
அகிலத்தின் அரசனான இறைவனின்
அருட் சிறப்பை பாடுவேனோ.....

வியப்பில் ஆழ்த்தும் விஞ்ஞானத்தின்
வியூகங்களை வரைந்திடுவேனோ....
அன்றேல்.........
அறியாமை என்னும் இருளில்
அடிமைகளாய் வாழ்ந்திடும்
அற்ப மானிடரை கூறிடுவேனோ.......

மனித மனங்களின் இயல்புகளை
மணிகளாய் கோர்த்திட்டு
வார்த்தைகளாய் வார்த்திடுவேனோ...
அன்றேல்......
இதயங்கள் வீணை மீட்ட
இணைந்த கான ஓசையினில்
முத்தாய் துளிர்த்த நட்புறவின்
சிறப்பினை சிற்பமாய் செதுக்கிடுவேனோ.....

கவிதை ஒன்றை வடித்திட
முனைந்தேன்
அடடா என்ன புதுமை......
கரம் கொண்ட என் பேனா
மை துளிர்த்திட....
வெள்ளை கடதாசியும்
வண்ண ஓவியம்
படைத்திட்டதுவே......
                              

1 comments:

Areeb சொன்னது…

Superb

எனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011