உங்களது பேஸ்புக் பக்கத்தை / வலைதளத்தை பார்க்கும் நபர்களின் விவரங்களை அறிவதற்கு..!!!


www.whoislive.com என்ற இணையதளம் நாம் பார்த்து கொண்டிருக்கும் இணையதளத்தை அதே நேரத்தில் வேறு யாரெல்லாம் பார்க்கின்றனர் என்பதை அறிய உதவுகிற‌து.
ஒரு சில வலைப்பதிவுகளில் எத்த‌னை பேர் ஓன்லைனில் இருக்கின்றனர் என்ற விவரம் தெரிவிக்கப்படுவதை பார்க்க முடியும்.

ஆனால் இது வெறும் எண்ணிக்கை கணக்கு தான். அந்த எண்ணிக்கை பின்னே உள்ளே தனிநபர்களை அறிவதற்கான் வாய்ப்பில்லை. அதாவது யாரெல்லாம் நாம் பார்க்கும் இணையபக்கத்தை பார்க்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள வழியில்லை.

ஹூ ஈஸ் லைவ் சேவை இதை தான் சாத்தியமாக்குகிறது. பிரவுசர்களுக்கான விரிவாக்கமாக உருவாக்க‌ப்பட்டுள்ள இந்த சேவை இணையவாசிகள் பார்த்து கொண்டிருக்கும் அதே இணையதளத்தை வேறு யாரெல்லாம் பார்க்கின்றனர் என்பதை காண்பிக்கிற‌து.

ஒத்த கருத்துள்ளவர்கள் பேசி மகிழ‌ பல விஷயங்கள் இருக்கும் அல்லவா? அதே போல் ஒரே தளத்தை பார்ப்பவர்களின் ஆர்வமும் ஒத்து போக‌லாம். என‌வே அந்த தளத்தில் உள்ள மற்ற இணையவாசிகளோடு கருத்துக்களை பரிமாறி கொண்டு இணைய அர‌ட்டையில் ஈடுபடலாம். இணைய‌தளத்தை பார்த்து கொண்டே அரட்டை அடிக்கலாம்.

இணையதளத்தின் உள்ளடக்கம் தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். பார்த்து கொண்டிருப்பது இகாமர்ஸ் தளம் என்றால் குறிப்பிட்ட பொருளை வாங்குவதற்கு முன் அபிப்ராயம் கேட்கலாம். இந்த பகிர்வு மூலமே புதிய இணைய நண்பர்கள் கிடைக்க‌லாம்.

பேஸ்புக் பயனாளிகள் தங்களின் பேஸ்புக் பகிர்வுகளை பார்த்து கொண்டிருப்பது யார் என்றும் தெரிந்து கொண்டு அவர்களோடு உரையாடலில் ஈடுபடலாம்.

இணைய‌ அனுபவத்தை இன்னும் கொஞ்சம் செழுமையானதாக சுவையானதாக ஆக்க இந்த சேவை உதவும். இந்த சேவையின் மூலம் ஒவ்வொரு இணையபக்கத்தையும் ஒரு அரட்டை அறையாக மாற்றி சக இணையவாசிகளோடு தொடர்பை ஏற்படுத்தி கொள்ளலாம்.

ஆனால் ஒன்று இந்த சேவையில் உறுப்பினராக இருக்கும் இணையவாசிளை மட்டுமே பார்க்க முடியும். பயர்பொக்ஸ், குரோம் மற்றும் ஐ ஆகிய பிரவுசர்களில் இந்த சேவை செல்லுபடியாகிற‌து...

வலைதள  முகவரி www.whoislive.com

0 comments:

எனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011