பாடசாலை வாழ்க்கையை நினைத்தேன்..! என் கண்ணிலிருந்து வழிகிறது கண்ணீர் அல்ல..! இரத்தம்.......!


பாடசாலை வாழ்க்கையை நினைத்தேன்........!

என் கண்ணிலிருந்து வழிகிறது கண்ணீர் அல்ல.....!

இரத்தம்.......!

மீண்டும் கிடைக்காதா ஏங்குகிறது

கல்லூரி வாழ்க்கை முடிந்து

ஆனது ஒரு வருடம்....

மீண்டும் கல்லூரிக்கு...

ஒருநாள் சென்றுவந்தேன்...


கல்லூரியில் பல மாறுதல்கள் முதல் மாறுதல்

மாணவனாய் சென்ற நான்

அன்று பழைய மாணவனாய்

அறிமுகம் செய்துகொண்டு உள்ளே சென்றேன்....

கல்லூரியின் படிக்கட்டுகளில் முன்னோக்கி ஏறினேன்

என் கல்லூரி நாட்கள் பின்னோக்கி அழைத்தது....


படிக்கட்டின் படிகளில் அமர்ந்து

அரட்டை அடித்து

மாணவிகளை வம்பிகிளுத்ததாய்

பல ஞாபகங்கள் என்னுள்....


தனிமை உணர்ந்ததில்லை நான் அன்று உணர்ந்தேன்

என் நண்பர்கள் இல்லாத கல்லூரியில்

நான் மட்டும் நடந்தபோது....

என் கண்கள் தேடிசென்று நின்றது

எங்களது வகுப்பறையில்

என்னை வரவேற்று

கண்ணீர் சிந்துவது போல் உணர்தேன்

என் இருப்பிடத்தை பார்த்தபோது....


மௌன மொழி பேசி

எனது இருப்பிடம் என்னிடம் கேட்டது

நீ மட்டும்தான் வந்தாயா என்று....

இதயம் கனத்தது

என்னை அறியாமல் ஓர்

வலி என்னில் தோன்ற

என் சந்தோசத்தை மட்டுமே

பார்த்த என் இருப்பிடம்

என் சோகத்தையும் பார்த்தது....


என் இருக்கையில்

கிறுக்கி வைத்த

என் நண்பர்களின் பெயர்களை

தொட்டு பார்த்து

கலங்கியது கண்கள்....

கண்ணீரை தொடைத்து கொண்டு

மெல்ல நடந்தேன்


நாங்கள் களித்த இடங்களில்

நான் மட்டும் நின்று

சற்று நேரம் கல்லூரி நாட்களில்

மீண்டும் வாழ்ந்து பார்த்தேன்....
நான் கிளம்பும் நேரம்

கல்லூரியை ஏற இறங்க

பார்த்துவிட்டு பெருமூச்சு விட்டு

திரும்பி நடந்தேன்....

என் உடல் மட்டுமே

திரும்பி நடந்தது

என் நினைவுகள் அனைத்துமே

சுற்று சுவர் இல்லாத

எங்கள் கல்லூரியை சுற்றி திரிந்தபடி....

மீண்டும் கிடைக்காத நிமிடங்கள்

மீண்டும் கிடைக்காத என

ஏங்கும் நிமிடங்கள்

கல்லூரி வாழ்கையில் மட்டுமே....


தோழர்களே நேரம் கிடைத்தால்

நீங்களும் சென்று வாருங்கள்

உங்கள் கல்லூரிக்கு

நீங்கள் சந்தோசமாக

இருந்த நாட்களை

நினைவு படுத்தி வாருங்கள்.... படித்ததில் பிடித்தது ...


4 comments:

Mohamed Faaique சொன்னது…

படித்ததில் எனக்கும் ரொம்பப் பிடித்து விட்டது..
அருமையான ஒரு கவிதை... பகிர்விற்கு நன்றி...

Nithal சொன்னது…

உங்களை போன்றோரை திருப்திப்படுத்தவே எனது தேடல் தொடர்கிறது....

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா...

suganthiny சொன்னது…

எனக்கும் ரொம்ப இல்ல ரொம்ப ரொம்ப விருப்பமாக இருக்கு.

Nithal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... இல்ல ரொம்ப ரொம்ப நன்றி...

எனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011