இவ்வார கவிதை தொகுப்பு: "பிரிவின் வலி"

கனவுகள் பிரதிபலிக்க வேண்டிய 
காலத்தில் - வாழ்க்கையெனும் பயணமே 
கனவாகியது எனக்கு....  
யார் அறிவார் என் வலியை?????????
 
மாற்றான் ரகசியத்தை
மறைக்கத்தெரியாத
உளறுவாய் 
"கண்ணாடி"
 
கவலை உன்னை கவலைப்படுத்தும் போது
கவலையை மாய்த்துவிடு.... 
கவலை உன்னை மாய்க்கும் முன்பே..
 
துக்கத்திற்கும்
மகிழ்ச்சிக்கும்
பிறந்த குழந்தை 
"கண்ணீர்"
 
 பேசும் வார்த்தையை
விட பேசாத
மௌனத்திற்கு அதிகம் 
அர்த்தம் உண்டு!


பிரிவே இல்லை எனினும் 
பிரியும் தருணம் 
கட்டியணைத்து 
கஷ்டத்துடன்   
விடை கொடுக்கும்
உன்னத பாத்திரம் 
"நட்பு"

 வாழ்க்கையில்
சிலரை மறக்க முடியாது 
சிலரை பிரிய முடியாது 
மறக்காமல் நீயிரு
பிரியாமல் நானிருக்கிறேன்  
என்றும் நட்புடன்...
 
 படித்ததில் பிடித்தது ... 
 

2 comments:

sajitha சொன்னது…

niz collection nithal .....i wsh u al da bst 4 ur site

Nithal சொன்னது…

Thanks.. Sajitha..

எனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011