BIOS இன் Password மறந்துவிட்டதா..?? இனி கவலை இல்லை..!!

BIOS தான் ஒவ்வொரு கணினியினுடைய அடிப்படை கட்டமைவாகும் இதனை மாறுதல் செய்து மிகச்சரியாக Settings செய்வதற்காக இதில் உள்நுழைவதற்கான Password மிகவும் அவசியமாகும்  நம்மை தவிர வேறுயாறும் இந்த Bios உள்நுழைவுசெய்வதை இந்த Password தவிர்க்கின்றன


பொதுவாக பயாஸின் திரையானது  ஏறத்தாழ மேலே படத்திலுள்ளவாறு தான் இருக்கும் ஆனாலும் இதில் கணினிஉற்பத்தியாளர்களுக்கு தக்கவாறு ஒருசில  மாறுதல்களுடனும் இருக்கும். கணினியை இயக்கதொடங்கும் நிலையில் F2 என்ற Keyஐ திரும்ப திரும்ப அழுத்தும் அல்லது Delete Keyஐ போது திரும்ப திரும்ப அழுத்தும் முதலில் Loading BIOS Options என்ற செய்தியும் பின்னர் படத்திலுள்ளவாறு பயாஸினுடைய திரையின் தோற்றமும் அமையும்  
மற்றவர்கள் யாரும் நம்முடைய கணினியினுடைய பயாஸிற்குள் நமக்கு தெரியாமல் நுழைந்து மாறுதல் எதுவும் செய்ய மாட்டார்கள்  என உறுதியுடன் நம்பினால் பயாஸிற்குள் நுழைவதற்கான கடவுச்சொற்களை அமைத்திடவேண்டாம்..

அவ்வாறு  பயாஸிற்கான கடவுச்சொல் அமைத்திட்டால் கணினியை இயக்கத்தொடங்கும்போது பயாஸின் கடவுச்சொல்லை உள்ளீடுசெய்தால் மட்டுமே அடுத்த படிநிலையான வழக்கமான பயனாளரின் பெயரையும் கடவுச்சொல்லையும் கோரும்திரைதோன்றும்  இந்த பயாஸின் கடவுச்சொற்களை தனியாக எழுதி மிகபதுகாப்பாக வைத்துகொள்க.

இந்த பயாஸின் கடவுச்சொற்கள் மறந்து போனால் வன்பொருள் வழியாக உள்நுழைய முடியும். 

முதலில் வன்பொருள் வழியில் Computerஐ Shutdown செய்தபின்  Motherboard  ஐ அனுகி Bios Batteryஐ  கழற்றி புதிய மின் கலனை பொருத்தி பயாஸ் அமைப்பை புதியதாக அமைக்கலாம்.. இல்லாவிடின் 20 - 30 நிமிடத்தின்பின் மீண்டும் அதே  Battery ஐ பொருத்தி Reset செய்யலாம்..

0 comments:

எனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011