Facebook எச்சரிக்கை....!!!!! நீங்களும் ஏமாற்றப்படலாம்...!!

இணையத்தில் காணப்படும் அனைத்தும் உண்மை என்று நம்பினால் நீங்கள் இணையத்தை புதிதாக பயன்படுத்துபவராக இருக்க வேண்டும் அல்லது இணைய ஏமாற்றுதல்களை பற்றி அறியாமல் இருந்திருக்க வேண்டும். இணையத்தில் மோசடிக்காகவும், நண்பர்களுக்குள் விளையாடி கொள்ளவும் இது போன்ற புறம்பான தகவல்கள் தெரிவிக்கப்படும். அந்த வகையில் நாம் நண்பர்களுடன் விளையாடி கொள்ளும்படி இணையத்தில் நண்பர்கள் குமிழும் ஒரு இடமாக பேஸ்புக் தளத்தில் போலியான பேஸ்புக் Wall Mssage உறுவாக்குவது எப்படி என பார்ப்போம்.


 • இதற்க்கு ஒரு இணையதளம் உள்ளது முதலில் இந்த the wall machine லிங்கில் சென்று அந்த தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள். 
 • அதிலுள்ள f Connect என்ற பட்டனை அழுத்தி வரும் விண்டோவில் Allow பட்டனை அழுத்துங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 

 • மேலே இருப்பதை போல விண்டோ வந்தவுடன் உங்களுக்கு தேவையான படி அதை எடிட் செய்து கொள்ளலாம். 
 • போட்டோவும் உங்களுக்கு தேவையான போட்டோவை தேர்வு செய்து கொள்ளலாம். 
 • போட்டோ தேர்வு செய்யும் பொழுது கூகுள் மூலம் தேடி பெரும் வசதியும், உங்களின் பேஸ்புக் நண்பர்களை தேர்வு செய்து கொள்ளும் வசதியும் கொடுத்து இருக்கிறார்கள்.

இப்படி விருப்பம் போல உருவாக்கி நண்பர்களோடு விளையாடி மகிழலாம். 
பதிவை படித்து கொண்டு இருக்கும் நண்பர்களே உங்கள் நண்பர்களும் இதுபோல ஏதேனும் போலியாக உருவாக்கி உங்களை ஏமாற்ற நினைக்கலாம் ஆதலால் நம்ப வேண்டாம்....

உங்கள் கணினி நீங்கள் Type செய்வதை வாசிக்க.. நீங்களே Software உருவாக்கலாம்...,


மிக சுலபம்.
நீங்கள் எதையும் தரவிறக்க தேவையில்லை.
இந்த programயை முழுவதும் நீங்கள் தான் எழுதப்போகிறீர்கள்.

1. முதலில் notepad திறந்து கொள்ளுங்கள்.

2. கீழ் உள்ள code ஐ அப்படியே  Notepad ல் Type செய்யவும்.

Dim message, sapi
message=InputBox("What do you want me to say?","Speak to Me")
Set sapi=CreateObject("sapi.spvoice")
sapi.Speak message


3. அதனை எதாவது ஒருபெயர் கொடுத்து .vbs என்ற extension உடன் சேமிக்கவும்.

4. சேமித்த அதனை open செய்யவும்..

5. இப்போது வரும் dialog box இல் ஆங்கிலத்தில் Type செய்யுங்கள். பிறகு enter ஐ தட்டுங்கள்.

6. அவ்வளவுதான்.

5GB Data இலவசம்... இன்று மட்டும்.... (25-Oct-2011)

 Ex-express நண்பர்களுக்கு இனிப்பான செய்தி....
"5GB data free for all Etisalat fans"
 5GB இலவச data Etisalat ஆதரவாளர்களுக்கு....
 நீங்களும் ஆதரவாளர் ஆக இந்த Link க்கு சென்று Etisalat பக்கத்தை Like பன்னவும்.. https://www.facebook.com/EtisalatSL
பின்னர் செய்ய வேண்டிய முக்கிய செய்முறை...
Send a message to 1020 as “ FB < FB profile name >”
அனுப்பவேண்டிய முறை
“ FB < FB profile name >”இலக்கம் "1020"
நாளை  Activate ஆகும் 
இச் சலுகைக்கான இன்று  இரவு 12.00 மணிக்கு முன்..
இச் சலுகைக்கான காலாவதி திகதி இம்மாதம் 31
 

Mobilephone தொலைந்து விட்டதா? இனி கவலை இல்லை...!! F-Secure இருக்க பயம் ஏன்..??

இந்தக் காலப்பகுதியில் அதிகளவில் Mobile Phone திருட்டுக்கள் இடம் பெறுகின்றன. இவற்றைத் தடுக்க பல முறைகள் இருக்கின்ற போதிலும், அவற்றில் சில நடைமுறைச் சாத்தியமற்றவையாகக் காணப்படுகின்றன. நாம் இங்கே பார்க்கப் போவது நாமாகவே நமது மொபைலில் நிறுவிப் பாவிக்கக்கூடிய  ஒரு முன் பாதுகாப்பு மென்பொருள் பற்றியாகும். (இது பெரும்பாலும் Smart Phone வகைகளுக்கெ பொருந்தும்)
அதாவது உங்கள் மொபைல் போன் திருடப்பட்டுவிட்டால், அதனை Lock செய்ய, இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க, இருக்கும் தரவுகளை அழைக்க என பல வேளைகளைச் செய்யக்கூடிய ஒரு மென்பொருள் பற்றியே நாம் இப்போது பார்க்கிறோம். F-Secure Anti-Theft மென்பொருள் உங்கள் Mobileஇல் நிறுவப்பட்டிருந்தால் மேலே சொன்ன விடயங்கள் சாத்தியமாகும். www.f-secure.com/antiTheft_PC இந்த Link மூலம் மென்பொருளை உங்கள் கணனிக்கு தரவிரக்கிக்கொள்ள முடியும். அல்லது உங்கள் Mobile Phone இல் (http://f-secure.mobi) எனும் முகவரியில் சென்று நேரடியாகவே Mobile Phone இற்கு தரவிரக்கிக்கொள்ள முடியும்.


Anti-Theft மென்பொருளை Mobile இல் நிறுவும் பொழுது ஒரு இரகசிய இலக்கத்தை வேண்டி நிற்கும், இது ஒருவகையில் Password போன்றது, ஏனெனில் உங்கள் மொபைல் தொழைந்துவிட்டால் இந்த இரகசியக் இலக்கதின் மூலமே அதனை உறுதிப்படுத்த முடியும். பின்னர் இன்னொருMobile Phone இலக்கம் (Trust Number) கேற்கப்படும், இது Phone தொழைந்ததும் அதனை SMS மூலம் அறிவிப்பதற்கான இலக்கமாகும்.
இந்த Anti-Theft மூலம் உங்கள் Mobile பின்வருமாறு பாதுகாக்கப் படுகிறது.


 1. Theft Control - Anti-Theft மென்பொருள் உள்ள மொபைலில் புதிய ஒரு SIM இனைக்கப்படும் ஒவ்வொரு முறையும் அந்த இலக்கத்திலிருந்து முன்னர் வழங்கப்பட்ட Trust Number இற்கு அது SMS மூலம் அறிவிக்கப்படும். இதன் மூலம் திருடியவர் நமது SIM இனை அகற்றி வேறு ஒன்றை இனைக்கும் ஔவொரு முறையும் நமக்கி அந்த புதிய இலக்கம் தெரியப்படுத்தப்படும். இத்ச்ன் மூலம் நமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் நகர்த்தப்படும்.
 2. Remote Lock – தொழைந்த நமது Mobile ஐ Lock செய்யும் முறையே இதுவாகும். அதாவது, இன்னொரு Mobile Phone இலிருந்து நமது இரகசிய இலக்கத்துடனான ஒரு SMS இன் மூலம் மொபைலை லொக் செய்யலாம். #LOCKM#<இரகசிய இலக்கம்> எனும் விததில் ஒரு SMS ஐ அனுப்பியதும் உங்கள் Mobile தானாக Lock ஆகி விடும். இனி அதனை Un Lock செய்வதாயின் உங்கள் இரகசிய இலக்கம் வழங்கப்பட வேண்டும்.
 3. Locate Phone – மொபைல் தொழைந்ததும் முன்னர் செய்தது போல#LOCATE# <இரகசிய இலக்கம்> எனும் விததில் ஒரு SMS ஐ அனுப்பியதும் அதற்குப் பதிலாக Google Map இன் Link ஒன்று உங்களுக்கு வரும். அந்த லிங்கை Google Map இல் சென்று வழங்கினால் கிடைக்கப்படும் Map ஆனது நமது Mobile இப்போது பாவிக்கப்படும் இடமாகும்.
 4. Remote Wipe – மேலே கூறப்பட்ட மூன்று முறைகளிலும் நமது Mobile ஐ கண்டுபிடிக்க முடியா விட்டால், நமது தனிப்பட்ட தகவல்கள், தரவுகள் இன்னொருவருக்குக் கிடைக்காமல் இருப்பதற்காக அதனை அழித்துவிட முடியும். அதற்காக மேலே நாம் SMS அனுப்பிய விததில் #WIPE#<இரகசிய இலக்கம்>எனும் விததில் ஒரு SMS ஐ அனுப்பியதும் உங்கள் Mobile Phone இல் உள்ள சகல தகவல்களும் அழிந்துவிடும்.
இனி என்ன ஒருமுறை Try பன்னலாமே…

வந்துவிட்டது "USB ON-THE-GO"

பொதுவாக USB Port கள் உள்ள டிஜிட்டல் பிலெயர், டிஜிட்டல் கேமரா, மொபைல் போன் பொன்ற சாதனங்கள் (USB Devices)  மூலம் தரவுகளைப் பரிமாற்றிக்கொள்ள நமக்கு கணனிகள் தேவைப்படுகின்றன. அத்தோடு இரண்டு USB சாதனங்களுக்கிடையில் நேரடியாக தரவுகளைப் பரிமாற முடியாது. அதாவது, உதாரனத்திற்கு இரண்டு மொபைல் போனகளுக்கிடையில் USB ஊடாக நேரடியாக தரவுகளைப் பரிமாற்ற முடியாது.
4700321331_9c12470d78இந்த அனைத்து இயலாமைகளையும் இல்லாமலாக்கி, USB Port உள்ள எந்தவொரு இரண்டு சாதனங்களையும் ஒன்றுடனொன்று USB மூலம் இனைத்து தரவுகளைப் பரிமாரும் புதிய தொழிநுட்பம் இப்போது அறிமுகமாகியுள்ளது.  இது யூ.எஸ்.பி. ஒன் த கோ.. (USB ON-THE-GO) எனும் (OTG) முறையாகும்.
இப்போதைக்கு உள்ள புதிய யூ.எஸ்.பி. 3.0 (USB 3.0) தொழிநுட்பமும் வேகத்தில் கூடியதாக இருந்தாலும் அது ஓ.டீ.ஜீ. (OTG) வகையாகாது. ஏனெனில் சாதாரன USB தரவுப் பரிமாற்ற முறையில் பயன்படுத்தப்படும் தொழிநுட்பத்துல் உள்ள சில எல்லைகள் news_pics_9824_1இதற்குத் தடையாகின்றன. இப்போதுள்ள USB நுட்பமானது மாஸ்டர் மற்றும் ஸ்லேவ் முறையிலே  (Master / Slave Architecture) இயங்குகின்றன. அதவது USB Port உள்ள சாதனம் (USB Host) Master சாதனமாகவும், அதனோடு இனைக்கப்படும் Flash Drive, Mobile Phone, Dongle போன்றன Slave சாதனங்களாகவும் கணிக்கப்படுகின்றன. அத்தோடு இந்த  Master மற்றும் Slav இன் பக்கங்களை மாற்றக்கூடியதாக இருந்தாலே உருபக்க தரவுமாற்றம் சாத்தியமாகும். இது சாதாரன USB தொழிநுட்பத்தில் முடியாத காரியமாகும்.
இந்த யூ.எஸ்.பி. ஒன் த கோ.. (USB ON-THE-GO) முக்கியத்துவம் பெறுவது இவ்விடத்தில்லகும். அதாவது OTG முறையில் USB Port மூலம் இனைக்கப்படும் இரு சாதனங்களும் இயங்கும் தேவைக்கு ஏற்ப ஒன்று Master ஆக மாறும் போது மற்ரையது Slave ஆக மாறிவிடும்.  தேவையெனில் Slave ஆகிய சாதனம் Master Host ஆக மாறிவிடும். இத்ற்கு குறித்த சாதனங்களில் USB OTG Port இருத்தல் வேண்டும்.
cable-data-micro-usb-nokia-ca-157-pour-n8-c6-c01இவ்வாறு OTG Port உள்ள Printer களில் Flash Drive களை நேரடியாக இனைத்து தேவையான Print களை எடுத்திக்கொள்ளா முடியும். அத்தோடு Mouse , Key Board போன்ற சாதனங்களை Mobile Phone களோடு இனைப்பது இதனால் சாத்தியமாகிறது.
இவ்வாறு USB சாதனங்கள் இரண்டை ஒன்றாய் இனைப்பதற்கு Data Cable தேவைப்படுகிறது. எதிர்காலத்தில் தேவையான விதத்தில் சாதனங்களை இனைப்பதற்கா USB OTG Port கள் குறித்த சாதாங்களோடு இனைந்து வரவுள்ளன. அப்பொது சாதங்களை நேரடியாகவே ஒன்றுடனொன்று இனைக்க முடியும்.  அப்போ யூ.எஸ்.பி. ஒன் த கோ.. (USB ON-THE-GO) தான்…………..

China Mobile இல் Games விளையாட வேண்டுமா..??

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் மொபைல் போன்களின் எண்ணிக்கையும் வளர்ந்து வருகிறது.அதிலும் குறிப்பாக சைனா மொபைல் போன்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.

இந்த சைனா போன்களில் Sound இருக்கும்.சில போன்கள் பார்ப்பதற்க்கு அழகாக இருக்கும்.சைனா போன்களில் நமது Voice-ஐ ஒரு பெண் Voice-ஆக மாற்றி எவரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம்

இந்த வசதிகளெல்லாம் படைத்த  சைனா மொபைல் போன்களில் பொழுது போக்குவதற்க்காக விளையாட முடியாது.பல  சைனா மொபைல் போன்களில் puzzle Game மட்டுமே இருக்கும்.அதை எப்படி விளையாடி முடிப்பது என்றே தெரியாது.இதனால் பலர்  சைனா மொபைல் போன்களில் விளையாட மாட்டார்கள்.இந்த சைனா மொபைல் போன்களை வைத்து பொழுது போக்கவும் முடியாது

இந்த கவலையை போக்குவதற்க்கு சைனா மொபைல் Game ஐ Download செய்து மொபைலில் விளையாடலாம்.

சைனா மொபைல் Game:
மூன்று விதமான Format -களில் China மொபைல் Gameகள் இருக்கின்றன.அவை

 • .nes
 • .jar
 • .mrp
இந்த விதமான Format -கள் உங்கள்  Mobile போனில் Support செய்தால் நீங்கள் விளையாடலாம்.
சைனா மொபைல் Gameகளை இலவசமாக தறவிறக்க பல வலைத்தளங்கள் உள்ளன.அவற்றில் சில தளங்கள்: • இந்த தளத்தில் சைனா மொபைல்களுக்கு 148 இருக்கின்றன.
 • இந்த தளத்திற்க்கு சென்று சைனா மொபைல் Gameகளை இலவசமாக தறவிறக்க சுட்டி 


 • இந்த தளத்திலும் பல China Mobile Gameகள் இருக்கின்றன
 • இந்த தளத்திற்க்கு சென்று சைனா மொபைல் Gameகளை இலவசமாக தறவிறக்க சுட்டி 


 • இந்த தளத்தில் கிட்டதட்ட 200 China Mobile Gameகள் இருக்கின்றன
 • இந்த தளத்திற்க்கு சென்று சைனா மொபைல் Gameகளை இலவசமாக தறவிறக்க சுட்டி 


 • இந்த தளத்திலும் பல China Mobile Gameகள் இருக்கின்றன.
 • இந்த தளத்தில் நமக்கு தேவையான Format-ல் Gameகளை தறவிறக்கலாம்
 • இந்த தளத்தில் Register பன்னி விட்டு Gameகளை தறவிறக்கம் செய்து கொள்ளலாம்
 • இந்த தளத்திற்க்கு சென்று சைனா மொபைல் Gameகளை இலவசமாக தறவிறக்க சுட்டி 

சைனா மொபைல் Gameகளை Install  செய்யும் முறை:
 • சைனா மொபைல் Games வலைத்தளங்களில் .zip Format-ல் கிடைக்கின்றன.அதை Extract செய்யுங்கள் 
 • உங்கள் மொபைல் போனில் உள்ள Memory Cardக்கு செல்லுங்கள்
 • Memory Card-ல் உள்ள Games” Folderக்கு செல்லுங்கள்
 • Games Folder இல்லையென்றால் Games என்று ஒரு Folder ஐ உருவாக்கிக் கொள்ளுங்கள்
 • ”Extract” செய்யப்பட்ட Game-களை Games” Folderக்குள் Copy பன்னுங்கள்.
 • போனை Restart செய்யுங்கள்
 • உங்கள் போனில் உள்ள Fun And Gamesக்கு சென்று விளையாடுங்கள்
குறிப்பு: இந்த Gameகள் எல்லா போன்களுக்கும் பொருந்தாது

இலகுவாக Firefox இல் Bookmark செய்ய.. (Speed Dial Add-one)Mozilla Firefox உலாவியை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு Desktop எனும் Add-one அடிக்கடி விசிட் அடிக்கும் இணையத்தளங்களை சிறிய படங்களாக (Thumbnails )சேமித்து வைக்க உதவுகிறது.

இவற்றை அழுத்தினால் புதிய Tab விண்டோவில் திறக்கும் படி செய்து கொள்ளலாம். Thumbnails களின் அளவை மாற்றம் செய்யவும் Options உண்டு.

 
 
டவுண்லோட் செய்வதற்கு - https://addons.mozilla.org/en-US/firefox/addon/desktop/

எந்த விதமான Software துணையும் இல்லாமல் Video களை Download செய்ய வேண்டுமா...???

நாம் அனைவரும் youtube மற்றும் மற்ற பல தளங்களில் வீடியோக்களை பார்ப்போம் அவற்றை தரவிறக்க நினைக்கும்போது ஏதேனும் ஒரு மென்பொருளை நாடுவோம் அல்லது ஏதேனும் ஒரு வலைத்தளத்தை நாடுவோம்.

இந்த மென்பொருட்கள் சரியாக தரவிறக்கம் செய்வதில்லை பாதியில் தரவிறக்கம் நின்றுவிடும் அல்லது மென்பொருள் ஹாங் ஆகிவிடும், சரி இந்த வலைத்தளங்களை உபயோகிக்கலாம் என்றால் அதில் பல தளங்கள் தரவிறக்க சுட்டியே கிடைக்காது சில மட்டுமே சரியாக வேலை செய்யும்.. அதிலும் நீங்கள் அந்த வீடியோ முழுவதையும் பார்த்துவிட்டு அதன்பிறகு தரவிறக்கினால் அந்த வீடியோ உங்களால் இரண்டு முறை தரவிறக்கப்படுகிறது இதனால் தேவையற்ற இழப்பு ஏற்படுகிறது..

இதனை தவிர்க்க நீங்கள் வீடியோ முழுவதும் பார்த்தவுடனே எந்த தரவிறக்கமும் செய்யாமல் அதனை ஒரு கோப்பாக உங்கள் கணினியில் சேமித்தால் எப்படி இருக்கும்? அதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.(கொஞ்சம் நீளமான பதிவு.)

1)முதலில் நீங்கள் எப்போதும் போல வீடியோவை பாருங்கள், முழுதும் பார்த்து முடிந்தவுடனோ அல்லது முழுதும் ஸ்டிரீமிங் முடிந்தவுடனோ உங்கள் உலவியை மூடிவிடாமல் மினிமைஸ் செய்துவிட்டு அடுத்த வரியில் குறிப்பிடப்பட்டுள்ள ஃபோல்டருக்கு செல்லுங்கள்.

2)இந்த போல்டரானது நீங்கள் பயன்படுத்தும் இயங்குதளம் மற்றும் உலவி இவற்றை பொறுத்து மாறுபடும் உங்களின் உலவி மற்றும் இயங்குதளத்திற்கு நேரே உள்ள ஃபோல்டரை தேர்ந்தெடுக்கவும்.
இயங்குதளம்உலவி ஃபோல்டர்
விண்டோஸ் 7
நெருப்புநரிC:\Users\[USERNAME*]\AppData\Local\Mozilla
\Firefox\Profiles\zdo1e2i8.default\Cache
விண்டோஸ் 7 குரோம் C:\Users\[USERNAME*]\AppData\Local\
Google\Chrome\User Data\Default\Cacheவிண்டோஸ் xp
நெருப்புநரி C:\Documents and Settings\[USERNAME*]\Application Data\Mozilla\Firefox\Profiles\Default\Cache
விண்டோஸ் xp குரோம் C:\Documents and Settings\[USERNAME*]\Local Settings\Application Data\Google\Chrome\

*இதில் சிவப்பு நிறத்தில் உள்ள USERNAME என்பதற்கு பதிலாக உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்தும் பயனர் பெயரை கொடுக்க வேண்டும்.இதில் போல்டர் என்று குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் உள்ள போல்டர்களை நீங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திறக்க வேண்டும்.

இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயனர்கள் உங்கள் Cache ஃபோல்டருக்கு செல்ல பின்வருமாறு செய்யவும், உங்கள் உலவியில் Tools-->Internet Options என்பதை தேர்ந்தெடுக்கவும்..
அதில் General என்ற டாபிற்கு கீழே உள்ள Settings என்பதை க்ளிக் செய்யவும்.


இப்பொழுது தோன்றும் புதிய விண்டோவில் View Files என்பதை க்ளிக் செய்தால் உங்கள் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் Cache ஃபோல்டர் திறந்திருக்கும். அதில் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்.3)இப்பொழுது நீங்கள் உங்கள் கணினியின் Cache ஃபோல்டருக்குள் இருப்பீர்கள் அதில் நாம் தற்பொழுது ப்ளே செய்த வீடியோ தற்காலிக Cache ஆக சேமிக்கப்பட்டிருக்கும், நாம் செய்ய வேண்டியது அதனை கண்டுபிடித்து நிரந்தரமாக சேமித்து கொள்ள வேண்டியதுதான்.

4)அந்த ஃபோல்டருக்குள் ரைட் க்ளிக் செய்து Sort-->By Size என்பதை தேர்ந்தெடுங்கள்.

5)அதில் மெமரியில் பெரிய அளவில் உள்ள கோப்புக்களை VLC Media Player கொண்டு ப்ளே செய்து பாருங்கள்..(வீடியோக்கள் அதிக மெமரி அளவைத்தான் கொண்டிருக்கும்.) இதனை நீங்கள் உங்கள் வீடியோவினை கண்டுபிடிக்கும் வரையில் ஒவ்வொரு கோப்பையும் ப்ளே செய்து பார்க்கவேண்டும்.
அங்கே data_1,data_2,.... போன்ற வரிசை எண்ணில் கோப்புகள் இருக்கும் இந்த data_X வரிசை கோப்பை ப்ளே செய்ய தேவையில்லை இவையல்லாத மற்ற கோப்புகளை ப்ளே செய்யுங்கள்.


6) VLC Media Playerல் Play செய்து உங்களுக்கு வேண்டிய வீடியோவினை கண்டுபிடித்த பிறகு அதனை ரைட் க்ளிக் செய்து Copy செய்து உங்களுக்கு தேவையான இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள்.

7)Paste செய்து அதில் ரைட் க்ளிக் செய்து Rename என்பதை செலக்ட் செய்து பெயரை மாற்றும் போது அதன் இறுதியில் .mp4 or .flv கோப்பாக சேமிக்கவும்.
இப்பொழுது உங்கள் வீடியோ சேமிக்கப்பட்டுவிட்டது ..

Secret files அடங்கிய போல்டர்களை CMD மூலம் இலகுவாக மறைக்க...

after hidden folderhidden folder beforeஎந்த ஒரு சாப்ட்வேர்(software) இல்லாமலேயே உங்கள் ரகசிய கோப்புகள்(secret folders) அடங்கிய போல்டர்களை மறைக்க சுலபமான வழியை நான் உங்களுக்கு சொல்லித்தருகிறேன்.

இனி நீங்கள் எந்த ஒரு மென்பொருள்(software) துணையுமின்றி உங்களுடைய ரகசிய கோப்புகள் அடங்கிய போல்டர்களை மறைக்கலாம்.

இதோ அதற்கான சுலப வழி ஒன்றை சொல்லப்போகிறேன்.

முதல் வழி: Start==>RUN==>cmdஅதாவது start button அழுத்தி அதில் ரன் என்பதை தேர்ந்தெடுக்கவும்.. தோன்றும் ரன் விண்டோவில் cmd என்று தட்டச்சிடுங்கள்.

Command Prompt விண்டோ ஓப்பன் ஆகும்.. அதில்  D: என தட்டச்சிடுங்கள்.  மறைக்க வேண்டிய போல்டர் உள்ள டிரைவின்(D,E,F) பெயரை உள்ளிடவும். E டிரைவில் வைத்திருந்தால் E: என உள்ளிட்டு என்டர் தட்டுங்கள். D என்றால் D: என தட்டச்சிட்டு என்டர் பட்டன் தட்டுங்கள். இப்போது


D:/> இவ்வாறு தோன்றும். அதனருகில் இடைவெளி இல்லாமல்

attrib +h +s foldername

அதாவது இப்படி இருக்க வேண்டும்  

D:/>attrib +h +s foldername
(இங்கு folder name என்பதற்கு பதில் நீங்கள் மறைக்க விரும்பும் போல்டரின் பெயரைக் கொடுக்கவும். உதாரணத்திற்கு போல்டரின் பெயர்  songs என இருந்தால் songs என டைப் செய்யுங்கள்.)

இவ்வாறு இருக்க வேண்டும்.

D:/>attrib +h +s songs இவ்வாறு உள்ளிட்டு என்டர் தட்டுங்கள். இப்போது நீங்கள் மறைக்க விரும்பும் போல்டர் காணாமல் போய் இருக்கும். தெளிவாக பார்க்க படத்தை கிளிக் செய்யவும்.


hidden folder command prompt image
மீண்டும் பெற விரும்பினால் முன்னது போலவே செய்து + குறிக்கு பதில் - குறி இட்டால் போதும்.

அதாவது இப்படத்தில் உள்ளவாறு,

D:/>attrib -h -s songs என்பதை டைப் செய்து என்டர் தட்டினால் மறைந்திருந்த போல்டர் உடனே கண்ணுக்குத் தெரியும்.


தெளிவாகப் பார்க்க படத்தை கிளிக் செய்யவும்.
முக்கிய குறிப்பு: இதில் முக்கியமாக நாம் நினைவில் நிறுத்த வேண்டியது.. எந்த போல்டரை மறைக்கிறோமோ அந்த போல்டர் உள்ள டிரைவின் பெயர் மற்றும் போல்டரின் பெயர் ஆகியவற்றை நிச்சயமாக நாம் நினைவில் நிறுத்தியிருக்க வேண்டும்.

எனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011