
நீங்கள் ஒருவருடைய நண்பராகாமலேயே அவர் பொதுவாக பகிரும் விடயங்களை பெற்றுக்கொள்வதற்காக பேஸ்புக் Subscribe Button ஐ அறிமுகப்படுத்தி இருக்கிறது .
இந்த Subscribe பொத்தானை இன்றிலிருந்து நீங்கள் உங்கள் கணக்கில் Message
,poke பொத்தானுக்கு அருகில் பார்க்கலாம் . இதன்படி நீங்கள் ஒருவரின்
நண்பராகமலேயே அவர் பகிரும் பொதுவான விடயங்களை நீங்கள் பார்க்க முடியும்.
உதாரணமாக டுவிட்டர் இயங்குவதை போன்று .
நீங்கள் உங்களுக்கு தெரிந்த நண்பர் அல்லாதவர் ஒருவரின் கணக்குக்கு சென்று
அவரை பின்பற்றலாம் . அதில் நீங்கள் உங்களுக்கு தேவையான விடயத்தை மட்டும்
பின்பற்றிக்கொள்ளலாம்(உதாரணமாக :தேவையில்லை எனில் அவர் இடும் படங்களை
தவிர்த்து அவரின் ஸ்டேடஸ் ஐ மட்டும் பெற்றுக்கொள்ளலாம் ).
Subscribe முறையை நீங்கள் விருப்ப பட்டால் செயற்படுத்தி கொள்ளலாம் .
விருப்பமில்லையெனில் அதனை நிறுத்தி விடலாம் .நீங்கள் செயற்படுத்தினால்
மட்டுமே உங்களை மற்றயவர்கள் பின்பற்றமுடியும் . இதனை செயற்படுத்த https://www.facebook.com/about/subscribe

0 comments:
கருத்துரையிடுக