உங்களுடைய Driver CD தொலைந்து விட்டதா...??

விண்டோஸ் இயங்குதளம் நிறுவவேண்டிய தேவையேற்படும்போது Driver Cd இல்லாதுவிட்டால் இதற்கு  எமது கணனியில் நிறுவப்பட்டிருக்கும் அனைத்து Driver களையும்  அப்படியே எவ்வாறு BACK UP எடுத்து மீண்டும் நிறுவிக்கொள்வது என்பது பற்றி பார்ப்போம். நீங்கள் முதலில் கீழ் உள்ள இணைப்பை சொடுக்கி மென்பொருள் ஒன்றினை தரவிறக்கி கணனியில் நிறுவிக்கொள்ளவும்

 
 
 

பின்னர் அதனைத் திறந்துகொள்ளவும். இப்போ கீழ் உள்ளவாறு விண்டோ காணப்படும்.

 
இதில் Scan Current System ” என்ற Button ஐ கிளிக் செய்யவும். இப்போ அதில் நம் கணினியில் நிறுவியிருக்கும் அனைத்து  Driver மென்பொருள்களும் நமக்கு தென்படும். இதில் எதெல்லாம் நமக்கு தேவையோ அத்தனையையும் தேர்வுசெய்து Backup now “ என்ற Button அழுத்தி நீங்கள் விரும்பும் பகுதியில் BACK UP செய்த Driver மென்பொருள்களை சேமித்துக்கொள்ளவும். அதில் எல்லா Driver களுக்குமாக ஒரே ஒரு setup file மட்டுமே காணப்பபடும். பின்னர் அதனை விண்டோஸ் இயங்குதள நிறுவுகையின் பின்னர் நிறுவிக்கொள்ள வேண்டியதுதான்.

தினமும் ஒரு கட்டண மென்பொருளை இலவசமாக பெற.......

இணையத்தில் கட்டண மென்பொருளுக்கு இணையாக வேலை செய்யும் அளவிற்கு இலவச மென்பொருட்கள் இருந்தாலும் அனைவரும் கட்டண மென்பொருளையே விரும்புவார்கள். ஏனென்றால் கட்டண மென்பொருளில் வைரஸ் தாக்கும் அபாயம் இருக்காது மற்றும் நம்முடைய ஈமெயில் கொடுத்து டவுன்லோட் செய்தால் அந்த ஈமெயில்களை பல spam கம்பனிகளுக்கு விற்று விடுவதால் நமக்கு தேவையில்லாத ஈமெயில்கள் வந்து தொந்தரவு செய்யும் அபாயங்கள் இருப்பதோடு கட்டண மென்பொருளில் ஒரே மென்பொருளில் பல வேலைகள் செய்யும் வசதி இருக்கும் ஆனால் பெரும்பாலான இலவச மென்பொருட்களில் இருக்காது ஆகவே அனைவரும் கட்டண மென்பொருட்களை விரும்புகின்றனர்.

அதெல்லாம் சரிப்பா நாங்களே சும்மா பொழுது போக்குக்கு கணினிய உபயோகிக்கிறோம் அதுக்கு நாங்க மென்பொருளை காசு கொடுத்து ஏன் வாங்க வேண்டும் யாராவது அந்த மென்பொருட்களை சுமா கொடுத்தா சொல்லுப்பா நாங்க டவுன்லோட் பண்ணிக்கிறோம் என நீங்கள் கூறினால் உங்களை போன்றவர்களுக்கு ஒரு உபயோகமான தளம் உள்ளது. இந்த தளம் மென்பொருட்களை உங்கள் மெயிலுக்கே அனுப்பி வைப்பார்கள். இது மிகவும் பிரபலமான தளம் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் தெரியாதவர்களுக்காக.

 • இந்த தளத்தில் தினமும் ஒரு கட்டண மென்பொருளை இலவசமாக அறிமுக படுத்துவார்கள்.
 • அந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய 24 மணி நேரம் கால அவகாசம் கொடுப்பார்கள் அதற்குள் அந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.
 • 24 மணி நேரம் கழித்து டவுன்லோட் செய்தால் அந்த மென்பொருளை இலவசமாக பெற முடியாது காசுகொடுத்து தான் வாங்க வேண்டும் ஆக முந்தி கொள்வதே நல்லது.
 • இந்த தளத்தில் நாம் உறுப்பினர் நம் ஈமெயிலை கொடுத்து பதிந்து விட்டால் அந்த நாளுக்கான இலவச மென்பொருளை பற்றி நமது ஈமெயிலுக்கே அனுப்பி விடுவார்கள் அந்த லிங்கில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இன்றைய இலவச மென்பொருள் 
 • டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ததும் கொடுக்கப்படும் ஆக்டிவேசன் கீயை மறக்காமல் காப்பி செய்து மென்பொருளை register செய்து கொண்டால் தான் காலம் முழுவதும் இலவசமாக மென்பொருளை உபயோகிக்க முடியும்.
 • ஆனால் இந்த முறையில் உள்ள ஒரு குறை நாம் மென்பொருளை இன்ஸ்டால் செய்யும் அந்த பதிப்பில் இருந்து புதிய பதிப்பை அப்டேட் செய்ய முடியாது. அப்டேட் செய்ய வேண்டுமென்றால் காசு கொடுத்து ஆகவேண்டும்.
இந்த பயனுள்ள தளத்திற்கு செல்ல - www.giveawayoftheday.com

இதை பற்றி உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள் அவர்களும் பயனடையட்டும்.

வேலைத்தளத்தில் Facebook கை "Excel" வடிவில் பயன்படுத்துவது எப்படி...?

பல நிறுவனங்கள் பேஸ்புக்கை தடை செய்துள்ளன .ஆனாலும் வேலைத்தளத்தில் இருப்பவர்கள் சமூக இணையத்தளங்களை பார்ப்பது அதிகம் .

இதனை நிவர்த்தி செய்யவே இந்த அப்பிளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது .

இந்த hardlywork.in என்ற அப்ப்ளிகேஷன் பேஸ்புக் தகவல்களை அப்படியே Excel sheet க்கு மாற்றி உங்களுக்கு வழங்குகிறது .

"வேலை தளத்தில் பேஸ்புக் பார்ப்பது ஒரு வித தயக்கத்தை உண்டாக்கினால் அல்லது யாராவது பார்த்துவிடுவார்கள் என்று எண்ணினால் அதனை எக்செல் வடிவில் வேலை செய்வது போல பயன்படுத்தலாம் .

முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கினுள் நுழைந்துகொண்டு harldywork.in  கிளிக் செய்தவுடன் இப்படியொரு முகப்பு கிடைக்கப்பெறும் .இதில் Gimmedem spreadsheets ஐ அழுத்தவும் .
அதனை எப்படி பயன்படுத்துவது என்று ஒரு சிறிய அறிமுகம் கிடைக்கும் .


Excelsheet இல் எழுத்துவடிவில் மாற்றும் பகுதியில் உங்கள் நண்பர்களை தேடி அவர்களின் ப்ரோபாயிலை பார்க்கலாம். Search friends பகுதி
எப்படியும் உங்கள் முகாமையாளர் கண்டுபிடித்துவிடுவார் என்றால் இதில் Spacebar ஐ மட்டும் அழுத்தினால் போதும் முழுவதும் இலக்கங்களால் ஆன  கணக்கு போல மாறிவிடும் . 


இதனை உருவாக்கிய யாலே பல்கலைகழகத்தை சேர்ந்த பி குறோஸ் ஐ கேட்ட போது தன்னிடம் தனது நண்பி பேஸ்புக்கை  வேலைத்தளத்தில் பார்க்கமுடியவில்லை என்று முறையிட்ட பின்பே இதனை உருவாகக் வேண்டுமென்று தனக்கு தோன்றியதாக கூறினார் .

Facebook "Subscribe button" என்றால் என்ன???


நீங்கள் ஒருவருடைய நண்பராகாமலேயே அவர் பொதுவாக பகிரும் விடயங்களை பெற்றுக்கொள்வதற்காக பேஸ்புக் Subscribe Button ஐ அறிமுகப்படுத்தி இருக்கிறது .இந்த Subscribe பொத்தானை இன்றிலிருந்து நீங்கள் உங்கள் கணக்கில் Message ,poke பொத்தானுக்கு அருகில் பார்க்கலாம் . இதன்படி நீங்கள் ஒருவரின் நண்பராகமலேயே அவர் பகிரும் பொதுவான விடயங்களை நீங்கள் பார்க்க முடியும். உதாரணமாக டுவிட்டர் இயங்குவதை போன்று .
நீங்கள் உங்களுக்கு தெரிந்த நண்பர் அல்லாதவர் ஒருவரின் கணக்குக்கு சென்று அவரை பின்பற்றலாம் . அதில் நீங்கள் உங்களுக்கு தேவையான விடயத்தை மட்டும் பின்பற்றிக்கொள்ளலாம்(உதாரணமாக :தேவையில்லை எனில் அவர் இடும் படங்களை தவிர்த்து அவரின் ஸ்டேடஸ் ஐ மட்டும் பெற்றுக்கொள்ளலாம் ). 
Subscribe முறையை நீங்கள் விருப்ப பட்டால் செயற்படுத்தி கொள்ளலாம் . விருப்பமில்லையெனில் அதனை நிறுத்தி விடலாம் .நீங்கள் செயற்படுத்தினால் மட்டுமே உங்களை மற்றயவர்கள் பின்பற்றமுடியும் . இதனை செயற்படுத்த https://www.facebook.com/about/subscribe
உங்களுக்கு பிடித்த பிரபலங்களை நீங்கள் பின்பற்றிக் கொள்ளலாம். சாதாரணமாக ஒருவர் 5000 நண்பர்களையே கொண்டிருக்க முடியும் என்பதால் உங்கள் பிரபலங்களின்  பேஸ்புக் பக்கங்களை பார்க்க நீங்கள் ஆர்வமாக இருந்தாலும் அவர்கள் உங்களை இணைத்திருக்க மாட்டார்கள் .

Windows 7 பாவிக்க 512 RAM ஒரு தடையல்ல...

உங்கள் கணனிகள் சில வருட காலங்களுக்கு முன் கொள்வனவு செய்யப்பட்ட சிறப்பியல்புகள் குறைவான கணனிகளாக இருக்கலாம் அல்லது RAM இன் அளவானது 512MB யை விட குறைவாக காணப்படலாம். இவ்வாறான நிலையில்  Windows பதிப்புகளில் Windows XP போன்ற இயங்குத்தளத்தையே உங்களில் பெரும்பாலானோர் பயன்படுத்துவீர்கள். 
சிலருக்கு Windows 7 இயங்குத்தளத்தை நிறுவி பயன்படுத்த ஆசையாக இருப்பீர்கள், இதற்கு RAM ஒரு தடையாக அமைந்துள்ளதா? கவலையை விடுங்கள்... இங்கு அவ்வாறான 512MBயை விடவும் குறைவான கணனிகளில் Windows 7 பதிப்பை நிறுவுவதற்கான இலகுவான வழியை பகிர்கின்றேன். 
முக்கியாக இச்செயற்பாடினை மேற்கொள்ள Windows 7 இன்  32bit பதிப்பை மட்டுமே பயன்படுத்தலாம்  64bit இயங்குத்தளத்தை 512MB RAMயை விட குறைவான கணனிகளில் இயக்குவது சிரமமானதே.

மேலும் இதற்கு Windows 7 Ultimate பதிப்பை பயன்படுத்த முடியும், ஆனாலும் Home Premium, Home Basicஅல்லது Starter பதிப்புகள் மிகச்சிறந்தது.
கவனிக்க
இதற்கு தேவைப்படுவது
1) Windows 7 32bit ISO பதிப்பு.
2) HEX editor ஒன்று Free Hex Editor Neo(மிகச்சிறந்தது).
3) UltraISO அல்லது powerISO.
இப்போது  படிமுறைகளை பார்ப்போம்.
 1. முதலில் UltraISO அல்லது powerISO வினை உங்கள் கணனியில் நிறுவுங்கள்.
 2. Windows 7 32bit ISO வினை mount செய்து  "winsetup.dll" கோப்பை  sources folder இலிருந்து copy செய்து உங்கள் கணனியில் உள்ள் எதாவது ஒரு local drive வில் Paste செய்து கொள்ளுங்கள்.
 3.  இப்பொழுது Paste செய்து கொண்ட "winsetup.dll" இனை Free Hex Editor Neo இன் உதவியுடன் open செய்து கொள்ளுங்கள் .
  Ctrl + Click on the image to View Full Image
 4.  அதில் 77 07 3D 78 01 சரக்கோவையை (string) தேடிக் கண்டுப்பிடியுங்கள். 
 5. அதனை  E9 04 00 00 00 சரக்கோவையை  கொண்டு படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு Replace செய்து save செய்து கொள்ளுங்கள்.
  Ctrl + Click on the image to View Full Image
 6. பின்னர் UltraISO அல்லது powerISO வின் உதவியுடன் Windows 7 32bit ISO வினை open செய்து கொள்ளுங்கள்.  sources folder யை Open செய்து அதிலுள்ள "winsetup.dll"ஐ நீங்கள் திறுத்தியமைத்த "winsetup.dll" இனை கொண்டு replace செய்யுங்கள். பின்  ei.cfg கோப்பை delete செய்வதன் மூலம்  அனைத்து windows 7 SKU களையும் unlock செய்து கொள்ளுங்கள் .பின் அதனை ISO வாக save செய்யுங்கள்.
 7. அதனை Burn செய்து Install செய்யுங்கள்.
நீங்களும்  Windows 7 இயங்குத்தளத்தை நிறுவி அதன் புதிய வசதிகளை அனுபவியுங்கள். 

USB ஐ பாதுகாக்க USB Disk Security.....

நாம் இன்று தகவல் பரிமாற்றத்திற்கு அதிக அளவில் Pendriveவினை பயன்படுத்தி வறுகிரோம். நம் அலுவலகத்தில் இருந்து அல்லது நண்பரின் கணினியில் இருந்து சில தகவல்களை Copy செய்து கொண்டு வந்து நாம் நமது கணினியில் வைத்து பயன்படுத்தி வருகிறோம்.
இப்படி தகவல்கள் பரி மாற்றம் நடக்கு பொழுது நாம் எதிர் நோக்கும் மிக பெரிய சவால் "வைரஸ்". இவை ஒரு கணியில் இருந்து இன்னொரு கணினிக்கு சுலபமாக வந்து விடுகிறது. இந்த வைரஸ்களை கட்டுப்படுத்த நாம் பல மென்பொருள்களை நமது கணினியில் நிறுவி பயன்படுத்தி வந்தாலும் சில சமயங்களில் அவை சரியாய் வேலை செய்வது இல்லை.
இப்படிப்பட்ட தருணத்தில் தான் இந்த USB Disk Security மென்பொருள் நமக்கு அதிக பாதுகாப்பு வசதியா தருகிறது.இந்த மென்பொருள் USB வழியாக வரும் "வைரஸ்களை" கட்டுப்படுத்துவதில் No.1 இடத்தில உள்ளது. 

      
இந்த மென்பொருள் Original Version தான்.ஆகையால் நீங்கள் இதை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவி USB வழியாக பரவும் "வைரஸ்களை" கட்டுப்படுத்துங்கள்.


Beauty Tips :கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் இருப்பது சாத்தியமா?

கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் இருப்பது சாத்தியமா?! கூந்தல் நீளமா... அடர்த்தியா... கருமையா வளர தவம் கிடக்கும் பெண்களுக்காக இந்த குட்டிக் குட்டி டிப்ஸ்...

* வைட்டமின் 'பி' காம்ப்ளெக்ஸ் குறைபாட்டினால் விரைவில் தலைமுடி வெளுக்க ஆரம்பிக்கும். ஊட்டமிக்க உணவு இந்த குறைபாட்டை நீக்கும்.

* நெல்லிக் காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலையில் தடவி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப் போக்கும்.

* முடி எல்லோருக்கும் அடர்த்தியாக வளரும் என்று சொல்லமுடியாது. இது பரம்பரையாக வருகின்ற சொத்து என்பதுதான் உண்மை. அதேபோல்தான் வழுக்கை விழுவதும், அதைப் புரிந்து கொண்டால் கவலைப்படுவதனால் முடி கொட்டுவதை தவிர்க்கலாம்.

* அழுகின தேங்காயைத் தூக்கி எறியாமல் சிறிது சுடு நீருடன் அரைத்துத் தலையில் தடவி ஊறவைக்கவும். பிறகு நன்றாக 'மசாஜ்' செய்யவும். மயிர்க்கால்கள் வலுப்பெற சரியான வழி இது.

* இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலைமாவைக் குழைத்துக் கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதை நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசி விடவும். பொடுகுத் தொல்லை போயே போச்சு.

* நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பூவுடன் சில துளிகள் கிளிசரின் சேர்த்துக் கொண்டால் முடி அறுந்து போகாது.

* சீப்பு உங்களுக்கென்று தனியாக வைத்துக்கொள்ளவும். வாரத்தில் மூன்று தடவை அதைக் கழுவ வேண்டும். உலோகத்தால் ஆன சீப்புகளைத் தவிர்க்கவும்.

* தேங்காயைத் தண்ணீ­ர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.

* நல்ல மரச் சீப்பினால் அழுந்த வாரினால் மயிர்க் கால்களில் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு முடி வளர்வதும் தூண்டப்படுகிறது.

* விளக்கெண்ணையைப் போல் குளிர்ச்சி தருவது வேறு எதுவுமே இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன். தேங்காய் எண்ணைய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து இலேசாகச் சுடவைத்து மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவி விடவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்தச் சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்க முத்தான வழி இது.

* கூந்தல் வறண்டு இருந்தால ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.

* அங்கங்கே தலையில் சிறு பொட்டல் இருந்தால் சிறிய வெங்காயமும், மிளகுப் பொடியும் சேர்த்துத் தடவி ஊற வைத்தால் மீண்டும் முடி வளரும்.

* தலை முடிக்குப் போஷாக்குத் தரும் ஷாம்பூ பவுடரை வீட்டிலேயே தயாரிக்கலாம். ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சைப்பயறு அரைப்பங்கு, புங்கங்காய் கைப் பிடி எடுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். ரசாயனப் பொருள்கள் இல்லாத பொடி, எந்த விதத் தீங்கும் ஏற்படுத்தாது. முடியும் வளரும்.

* நேரமில்லை என்பவர்கள் சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயப் பொடி, பயத்த மாவு கலந்து ஊற வைத்து தேய்த்துக்கொள்ளலாம்.

* பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்துப் பொடி செய்து பசும் பாலில் குழைத்துத் தலையில் தடவி ஊறிய பின் குளித்தால் விரைவில் குணம் தெரியும்.

* தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளும் வழக்கம் இருப்பவர்கள், அந்தத் தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களையும் பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தினால் முடி கறுப்பாக வளரும்.

* ஓடி ஆடி வெயிலில் அலைந்து திரிந்து வாழ்க்கையை ஓட்டுகின்ற காலத்தில் நாம் இருக்கிறோம். தினமும் உச்சந்தலையில் ஒரு விரல் சுத்தமானவிளக்கெண்ணெயைத் தடவி வந்தால் கண்ணுக்குக் குளிர்ச்சி, முடியும் உதிராது.

* தலைக்கு சீயக்காய்த்தூள் தேய்த்துக்கொள்ளும் போது, சீயக்காய்த் தூளுடன் தண்ணீ­ருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். சீயக்காயும் குறைந்த அளவே போதும்.

இதோ, முடி பளபளப்பாக காய்கறி வைத்தியம்:

* வெங்காயத்தையும், முட்டைக் கோசையும் பொடிப் பொடியாக நறுக்கி (ஒரு கப்) அதை இரவு முழுவதும் ஒரு செப்புப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும். காலையில் சிறிது யூடிகோலன் சேர்த்தால் வெங்காய வாசனை போய்விடும். இந்தச் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து மயிர்க் கால்களில் படும்படி நன்றாக மசாஜ் செய்யவும். சீயக்காய்ப் பொடி போட்டுக் குளித்தால் முடி பளபளப்பாக மென்மையாக மாறும்.

Facebook நிறுவனத்தில் வேலை வேண்டுமா...???

இன்று என்ன தான் படித்தாலும் வேலை கிடைப்பது என்பது பெரிய விஷயமாக உள்ளது. பெருகி வரும் மக்கள் தொகையாலும், கல்வி வளர்ச்சியாலும் சிறந்த வேலையை பெற மிகப்பெரிய போராட்டமே நிலவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான என்ஜினியர்களும், மருத்துவர்களும் உருவாகிக்கொண்டு உள்ளனர். குறிப்பாக கம்யூட்டர் என்ஜீனியர்கள் அதிக அளவில் உருவாகி கொண்டு உள்ளனர். பிரபல சமூக இணைய தளமான பேஸ்புக் தளத்தை பற்றி அனைவரும் அறிந்து இருப்பீர்கள். அந்த தளத்தில் நூற்றுகணக்கான வேலை காலி இடங்கள் உள்ளது. தகுதி வாய்ந்த திறமை ,அனுபவம் மிக்க பணியாளர்களை தேடி கொண்டுள்ளது பேஸ்புக் தளம் அந்த தளத்தில் எப்படி பதிவு செய்வது என பார்ப்போம்.

 • பேஸ்புக் தளம் இதற்க்காக ஒரு தனி பக்கத்தை உருவாக்கி உள்ளது. 
 • முதலில் இந்த https://www.facebook.com/careers இந்த பக்கத்திற்கு செல்லுங்கள் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 
 • இதில் பேஸ்புக் நிறுவனத்தில் தேவைப்படும் பல்வேறு நாடுகளுக்கும் தேவையான அனைத்து காலி பணியிடங்கள் காட்டும். இவற்றை நாடுகளின் படி அறிய மேலே நான் குறிப்பிட்டு காட்டியுள்ள by location என்பதில் டிக் செய்தால் நாடுகளின் வரிசைப்படி பணியிடங்களை பார்த்து கொள்ளலாம். 
 • உங்கள் தகுதிக்கு ஏற்ற வேலையை தேர்வு செய்தவுடன் அந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 • நீங்கள் ஒரு பிரிவை கிளிக் செய்தவுடன் இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன என்ற லிங்க் இருக்கும் அதில் உங்கள் தகுதிக்கு ஏற்றதை கிளிக் செய்யுங்கள். உடனே உங்களுக்கு அந்த வேலைக்கான தகுதிகள் காட்டப்படும் அதை முழுவதும் படித்து நீங்கள் அந்த பணியிடத்திற்கு தகுதியை பெற்று இருந்தால் அதில் உள்ள Apply for this Position என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
 • உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் 

 • இதில் உங்களின் விவரங்களை கொடுத்து கீழே உள்ள Choose File என்பதை அழுத்தி உங்களுடைய Resume அப்லோட் செய்து கொள்ளுங்கள். முடிவில் கீழே உள்ள Submit Application என்ற பட்டனை அழுத்துங்கள்.
அவ்வளவு தான் உங்களுடைய விண்ணப்பம் பேஸ்புக் நிர்வாகத்தினருக்கு சென்று விட்டது. நீங்கள் அனுப்பிய தகவல்கள் தகுதி வாய்ந்ததாக இருந்தால் உங்களை தொடர்பு கொள்வார்கள்.
வேலைக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம்!!!
ஜாதி மொழி இனம் மதம் நிறம் எவற்றையும் கருத்தில் கொள்ளாமல் தகுதி ஒன்றை மட்டுமே அடிப்படையாக வைத்து தகுதியான நபர்களுக்கு வேலை வழங்கும் பேஸ்புக் நிறுவனத்திற்கு என் மனமார்ந்த நன்றியுடன் பாராட்டுக்களும்.

WIFI சிக்னலின் அளவினை இலகுவாக அதிகரிக்க....!!

வெற்று Coca-cola டின்னை பயன்படுத்தி உங்கள் இல்லங்களில் உள்ள WIFI சாதனத்தின் சிக்னலின் அளவினை அதிகரித்து கொள்ள முடியும் என நம்பப்படுகிறது. இதன் மூலம் WIFI சிக்னலின் அளவினை 2 முதல் 4 புள்ளிகள் வரை உயர்த்தமுடியும்.
வெற்று Coca-cola டின்னை எவ்வாறு பயன்படுத்துவது ?


தேவையான பொருட்கள்
ஒரு வெற்று Coca-cola டின்
கத்தரிக்கோல்
கத்தி
Blu tack gum or any thing..முதலில் வெற்று Coca-cola டின்னை நன்றாக கழுவியபின் டின்னின் முடியை அகற்ற வேண்டும் 

பின்னர் கீழே படத்தில் காட்டியவாறு வெட்டுக 


இந்த கீழே உள்ள படத்தில் காட்டியவாறு வெள்ளை புள்ளி கோட்டு பகுதியை வெட்டுதல் ஆகாது.
இப்போது நீங்கள் வெட்டிய Coca-cola டின்னை கீழே படத்தில் காட்டியவாறு பொருத்துக . உங்கள் WIFI சிக்னலின் அளவு அதிகரிக்கும் . 


Trial மென்பொருட்களை நீண்ட காலத்திற்கு நிரந்தரமாக உபயோகிக்க...

ஒரு தற்காலிக மென்பொருள் என்பது அனேகமாக  முப்பது நாட்களுக்குள் முடிவடைந்துவிடும். இது நமக்கு அறிந்த ஒன்றே. அது நமது கணிணியில் உள்ள நேரம் திகதியை வைத்தே அதனை தீா்மானித்துக் கொள்கிறது. அனேகமானவா்கள் தமது கணிணியின் நேரம் திகதி என்பவற்றை மாற்றி இதனை நீண்ட காலம் பயன்படுத்திக் கொள்வார்கள்

                                            இதை தவிர்க்க இந்த மென்பொருள் மிகவும் உதவுகின்றது. இந்த மென்பொருளை வைத்து நீங்கள் நிறுவிய (install)  மென்பொருளின் நேரத்தை உறைய வைக்கலாம் அதனால் கணிணியின் நேரத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லை. தயவு செய்து இந்த மென்பொருளை காலவதியாகிய (expire) மென்பொருளின் மீது பயன்படுத்தாதீர்கள். இப்பொழுது இதனை எப்படி பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவவும்.

                                                    இப்பொழுது தற்காலிக மென்பொருளின் .exe கோப்பை (file) கண்டு பிடிக்கவும். அதற்கு ஒரு தனி நேரத்தை குறிப்பிட்டு முகப்பில் (desktop) ஒரு குறுக்கு வழி குறும்படத்தை (shortcut icon) உருவாக்கவும். இப்பொழுது நீங்கள் எளிதாக அந்த மென்பொருளை நீண்ட காலம் வரை பயன்படுத்தலாம்.
தரவிறக்க : DOWNLOAD

கருத்துக்களை பதிவிட மறக்காதீா்கள்.

gmail மூலம் இலவசமாக உங்களுடைய நண்பருடைய தொலைபேசியை தொடர்பு கொள்ள வேண்டுமா...???

Google நிறுவனத்துடைய மின்னஞ்சல் சேவையான Gmail ஐ பயன்படுத்தாதவர் குறைவு என்று தான் கூறமுடியும்.அந்த அளவிற்கு தினம் தினம் புது புது வசதிகளை தந்து கொண்டு இருக்கிறது.அதன் தொடர்ச்சியாக இன்றும் ஒரு சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறது  " SMS Chat in Gmail " 

நீங்கள் Gmail இல் இருந்து , உங்கள் நண்பர் SMS மூலம் , இருவரும் Chat செய்து கொள்ள முடியும். இது இலவசம் என்றாலும் எல்லா நாட்டுக்கும் பொறுந்தாது...கீழ் உள்ள நாடுகளில் ஒரு சில வலையமைப்புக்கு மட்டும் பொறுந்தும்.

Afghanistan
Afghan Wireless Communication Company

Algeria
Nedjma

Angola
Unitel

Bahrain
Zain

Cameroon
MTN

Ghana
Airtel
Tigo

Indonesia
Indosat
Telkomsel
Tri

Iraq
Zain

Israel
orange
Pelephone

Jordan
Zain

Kazakhstan
Kcell

Kenya
Airtel
orange
Safaricom

Kuwait
Wataniya
Zain

Liberia
Cellcom

Malawi
Airtel
TNM

Maldives
Wataniya

Mozambique
Vodacom

Nigeria
Glo
Starcomms

Palestinian Territories
Jawwal
Wataniya Mobile

Philippines
Globe
SMART
Sun Cellular

Saudi Arabia
Mobily
STC
Zain

Senegal
orange
Tigo

Sri Lanka
Dialog
Mobitel

Tanzania
Vodacom
Tigo

Tunisia
Tunisiana

Uganda
Orange
MTN
Uganda Telecom

United States
All operators

Zambia
Airtel
MTN
Zamtel
இலங்கையில் Dialog , Mobitel மட்டுமே இலவசம், பயன்படுத்துவது எப்படி?

gmail இல் உள்நுழைந்து விட்டு


SMS (Text messaging)  enableசெய்துவிட்டு Save செய்து கொள்ளுங்கள்.

 Chat செய்து கொள்வதற்கு
 Phone Number ஐ கொடுத்து Save செய்து கொள்ளுங்கள்


ஒரு சின்ன விஷயம் சொல்ல மறந்துவிட்டேன்...Gmail இல் இருந்து SMS அனுப்புவதுதான் இலவசம். அதற்கு உங்கள் நண்பர் பதில் அனுப்ப வேண்டும் என்றால் சாதாரண SMS கட்டணம் அறவிடப்படும்..

இன்றைய மருத்துவ குறிப்பு : முட்டை

imagesநமது உடலுக்குத் தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் முட்டையில் உள்ளது. முட்டையில் தேவையான அளவு கொழுப்பு மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது.
முட்டையின் வெள்ளைக்கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது. நாம் சமைக்கும் முட்டையை பொருத்து கலோரிகளின் அளவு கூடும் அல்லது குறையும்.  முட்டையில் தைராய்டு ஹார்மோன் சுரப்பதற்குத் தேவையான அயோடின் உள்ளது.
பற்கள் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான பாஸ்பரஸ் உள்ளது. காயங்களை குணமாக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான துத்தநாகம் அதிகம் காணப்படுகிறது.
முட்டையில் கெட்ட கொலாஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன. எனவே, கெட்ட கொலஸ்ட்ரால் இரத்தத்தில் சேராது.
இத்துடன் இதயத்திற்குப் பாதுகாப்பான ஃபோலிக் அமிலம் மற்றும் பி குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையில் உள்ளன
தினம் ஒரு முட்டை
தினமும் குழந்தைகளுக்கு ஒருமுட்டை கொடுப்பதன் மூலம் அவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கிறது. காலை உணவுடன் முட்டை வழங்குவதால் கவனிக்கும் தன்மை அதிகரிப்பதாகவும், வாசிப்புத் திறன் கூடும் என்றும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
குழந்தைகளின் எடையை சீராக வைத்திருக்கும். எடைக்குறைவான குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுப்பதன் மூலம் சத்துக்கள் கூடுவதோடு உடல் எடை அதிகரிக்கும்.
மூளை வளர்ச்சி அதிகரிக்கும்
வளரும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிகவும் அவசியம். தினம் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள ஆண்டி ஆக்சிடென்டல் கண்பார்வையை தெளிவாக்கும்.
குழந்தை பருவத்தில் இருந்தே தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் வயதான பின்பு ஏற்படக்கூடிய கார்ட்க்ராக்ட் பிரச்சினையில் இருந்து தப்பலாம். முட்டையில் உள்ள வைட்டமின் டி உயிர்ச் சத்து எலும்புவளர்ச்சிக்கு உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இதயக்கோளாறு மற்றும் பக்கவாத நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது. தலைமுடி வளர்ச்சி மற்றும் தோல் பளபளப்பிற்கு முட்டை சிறந்த பங்காற்றுகிறது.
வாரத்திற்கு ஆறு முட்டை உட்கொள்ளும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது 44 சதவிகிதம் குறைவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
இதயநோய் பாதிப்பு குறையும்
அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற்றி ஆராய்ந்தன. 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள். இவர்கள் உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது.
சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதய நோயைக் குணப்படுத்துகிறது. அதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால், முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை. எனவே, இதயநோய் அபாயமும் இல்லை.
முட்டையில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை. ஆனால் அதை அளவுடன் சாப்பிட்டால், இதயத்திற்கு எந்தவிதமான கெடுதலையும் செய்யாது என்கிறது ஹார்வார்டு பள்ளி. சரிவிகித உணவு சத்துணவுத் திட்டம் தயாரித்து அதன்படி சாப்பிடுகிறவர்கள் தினமும் முட்டையை ஒதுக்க வேண்டாம்.
1976ஆம் ஆண்டு முதல் பதினோரு அமெரிக்க மாநிலங்களில் தினமும் முட்டை சாப்பிட்டு வந்த நர்சுகளின் உடல்நிலை கவனிக்கப்பட்டு குறிப்புகள் சேர்க்கப்பட்டன. இது 2 வருட ஆய்வு.
இதைத் தவிர, 1986 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க பல் மருத்துவர்கள், கண் மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள் ஆகியோர் தினமும் முட்டை சாப்பிட்டனர். அவர்களிடம் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை கேள்வி கேட்கப்பட்டது.
அந்த மருத்துவர்களின் கொலஸ்ட்ரால் அளவு, கடந்த 12 ஆண்டுகளில் அதிகரிக்கவில்லை. ஸ்டிரோக் அபாயமும் ஏற்படவில்லை.
80 ஆயிரம் நர்சுகளின் உடல் நலம் பற்றிய 14 ஆண்டு கால மருத்துவக் குறிப்பேடுகள், 37 ஆயிரம் ஆண்களின் உடல் நலக்கோளாறு பற்றிய எட்டு வருட மருத்துவக் குறிப்பேடுகள் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். அதுவும் பயமில்லாமல் சாப்பிடலாம் என்று உறுதியாகத் தெரிவித்தது.
சாதாரண அவித்த முட்டையில்தான் இவ்வளவு நன்மைகள். ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் அளவுதான் கொலஸ்ட்ரால் நம் உணவில் சேரலாம். ஒரு முட்டையில் 213 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் இருக்கிறது.
இதுவே இதயத்துக்கு நலம் பயக்கும். நீரழிவு நோயாளிகள் தினமும் முட்டை சாப்பிடக்கூடாது. இது அவர்களுக்கு கெடுதல் உண்டாக்கும். மருத்துவர்களின் ஆலோசனையின்படி வாரம் ஒரிரு முட்டை சாப்பிடலாம்.

ஒரே சமயத்தில் ஒன்றுக்குமேற்பட்ட Gmail Account களை use பன்ன வேண்டுமா...??

நாம் பொதுவாக ஒரு Browser இல் ஒருசமயத்தில் ஒரு கூகிள் கணக்கினையே கையாள்வதுண்டு. இன்னொரு கணக்கை கையாள்வதென்றால் அதனை Sign out செய்தபின்பே மற்றைய கணக்கை திறப்பதுண்டு. அல்லது வேறொரு Browser ஐத் திறந்து அதனைப் பயன்படுத்துவதுண்டு.

ஆனால் இவ்வாறு இல்லாமல் ஒரு Browser இலேயே ஒரே சமயத்தில் எவ்வாறு பல கூகிள் கணக்குகளை கையாள்வது என்பது பற்றிப் பார்ப்போம். பலருக்கு இதுபற்றித் தெரிந்திருந்தாலும் தெரியாதவர்களுக்காய் இப்பதிவு இடப்படுகின்றது.

அதாவது இதனை இரண்டு வழிகளில் மேற்கொள்ளலாம்.

நீங்கள் ஒரு கணக்கை பயன்படுத்திக்கொண்டு இருக்கும் சந்தர்ப்பத்தில் இன்னொரு கணக்கையும் கையாள வேண்டியேற்படின் அதற்காக " Shft + Ctrl + N " என்பதைக் கொடுங்கள். இப்போ Browser இன் புதிய விண்டோ ஒன்று திறக்கும். இதிலே நீங்கள் பயன்படுத்த இருக்கும் மற்றைய கணக்கை திறந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.
அல்லது,

உங்கள் ஜிமெயில் கணக்கின் Sign out செய்யும் பகுதிக்குச் செல்லுங்கள்.இங்கே "Switch Account" என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போ தோன்றும் பகுதியில் " Sign in to Another Account " என்று காணப்படும்.


இதனை கிளிக் செய்யுங்கள். இப்போ தோன்றும் புதிய Tap இல் உங்கள் மற்றைய கணக்கினைத் திறந்து பயன்படுத்திக் கொள்ளவேண்டியதுதான்.

இதில் Browser இன் ஒரு விண்டோவிலேயே பல Tap களில் வெவ்வேறு கூகிள் கணக்குகளை ஒரேநேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பயன்படுத்திப் பாருங்களேன்...

Beauty Tips : என்றும் அழகுடன் திகழ.....

அழகு குறிப்புகள் எவ்வளவோ சொன்னாலும் கேட்டுக் கொண்டேயிருப்பது நம் பெண்களின் குணம். ஆனால் செயல்முறைப் படுத்துவது ஒரு சிலரே. அதற்கு பல காரணங்கள் உண்டு. குடும்பம், சூழ்நிலை, பொருளாதாரம், நேரமின்மை.... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். எளிய முறையில், சிக்கனமாக(நேரத்திலும்தான்) செய்ய கூடிய டிப்ஸஸ்தான் கீழே கொடுக்கப்பட்டவை. செய்து பாருங்கள்.. மற்றவர் உங்களைப் பார்க்கச் செய்யுங்கள்!

* தினந்தோறும் குறைந்தது 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை தண்­ணீர் பருகுங்கள்.

* பீட்ரூட் சாறினை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து தண்ணீ­ரால் கழுவுங்கள். முகம் பொலிவு பெறும்.

* பன்னீரும், சந்தனத் தூளும் கலந்த கலவையில் 5 துளி பால் சேர்த்து முகத்திலும் உடம்பிலும் தேய்த்துகொள்ளுங்கள். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான வெந்நீரில் குளிக்க, முகமும் தேகமும் பளபளப்பாகும்.

* எலுமிச்சை சாறுடன் சிறிது சூடான தேன் கலந்து முகத்தில் தடவி அது உலர்ந்தபின் முகம் கழுவுங்கள். முகம் வனப்பு பெறும்.

* உடம்பு பளபளப்பும், புதுப்பொலிவும் பெற தினமும் காலையில் தண்ணீ­ரில் தேன் கலந்து குடியுங்கள்.

* மஞ்சள்தூளும், சந்தனத்தூளும் ஆலிவ் எண்ணையில் கலந்து உடம்பில் தேய்த்து 10 நிமிடம் கழித்து குளிக்க, முகமும், தேகமும் மினுமினுக்கும்.

* உங்கள் சருமம் உலராமல் பளபளப்புடன் திகழ, தினமும் சிறிதளவு பசும்பாலை உடல் முழுக்க தேய்த்து விட்டு பின்பு குளியுங்கள்.

* பணிபுரியும் இடம் குளிர்சாதன வசதியுடன் இருந்தால் சருமத்திற்கு நல்லது.

* வெந்நீரைவிட சாதாரண தண்ணீ­ரில் குளிப்பது நல்லது. குளித்தபின் துணியால் அழுத்தித் துடைக்காமல் மென்மையாக ஒற்றி துடைப்பது சருமத்திற்கு பாதுபாப்பு.

* தோல் பளபளப்பாக இருக்க வைட்டமின் 'ஏ' மற்றும் வைட்டமின் 'சி' நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ளுங்கள்.

* கொதிக்க வைத்த கேரட் சாறினை முகத்திலும், உடம்பிலும் தேய்த்துக்
குளிக்க, முகமும், தேகமும் பளபளப்பாகும்.

* பாலில் எலுமிச்சை சாறு கலந்து உடம்பில் தேய்த்துக் குளிக்க, முகமும் தேகமும் பளிச்சிடும்.

* மஞ்சள்தூள் மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பொலிவுடன் பிரகாசிக்கும்.

* பச்சைப் பயிறு மாவு மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பளபளப்பாகும்.

* ரோஜா இதழ்களை கூழாக அரைத்து அத்துடன் பாலாடை சேர்த்து அந்தக் கலவையை கண், இமை, உதடு தவிர்த்து மற்ற இடங்களில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து குளிக்க உடம்பு புதுப்பொலிவு பெறும்.

* தயிரும், கோதுமை மாவும் சேர்ந்த கலவையை உடம்பில் தேய்த்து 5 நிமிடம் கழித்து குளிக்க தேகம் புத்துணர்ச்சி பெறும்.

* வெயிலில் நடப்பது மேனி அழகைக் கெடுக்கும். இதைத் தடுக்க வெள்ளரிச்சாறும், தக்காளிச்சாறும் சமஅளவில் கலந்து உடம்பில் தேய்த்துக் குளித்தால் தோல் நிறம் மங்காமல் மின்னிப் பிரகாசிக்கும்.

* கடுகு எண்ணையை உடம்பில் தேய்த்து 5 நிமிடம் கழித்து பச்சைப் பயிறு மாவு உடம்பில் தேய்த்துக் குளித்தால் உடல் பளபளப்பாகும்.

* புளோரின் சத்து நிறைந்த ஆட்டுப்பால், பாலாடைக்கட்டி, கேரட், வெள்ளரி, முட்டைக்கோஸ் போன்ற பச்சை காய்கறிகளைச் சாப்பிடுவதால் சருமம்
வனப்புடன் திகழும்.

* சோடியம் சத்துக் குறைந்தால் தோலில் சுருக்கம் ஏற்படும். வெயில்காலத்தில் சோடியம் சத்து மிகுந்த வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் தோல் சுருக்கம் விழாமல் பாதுகாக்கலாம். இது உடல் சூட்டையும் தணித்து குளுமையும் தரும்.

* சிலிகான் சத்து குறையும்போது உடலில் வேனற்கட்டி, வெடிப்பு, சிரங்கு போன்ற பாதிப்புகள் தோன்றும். இதைத் தவிர்க்க முளை கட்டிய தானியங்கள், தக்காளி, பார்லி மற்றும் ஸ்ட்ராபெர்ரி, அத்திப்பழ வகைகளைச் சாப்பிட்டுவர வேண்டும்.

* பச்சையம் சத்து நிறைந்த கோதுமைக் கஞ்சி, பச்சைக்கீரை, காய்கறி வகைகளைச் சாப்பிட்டு வர, தோல் வெடிப்புகள் ஏற்படாது. சருமம் நிறம் மங்காமல் செழுமையுடன் இருக்கும்.

அற்புதமான 3D Road Arts....

அனேகமாக பார்க்கும் சித்திரங்கள் இருபரிமாணங்களைக் கொண்டவையாகவே இருக்கிறது. ஆனால் இப்பொழுது முப்பரிமாண சித்திரங்கள் பிரபல்யம் அடையத் தொடங்கி விட்டன. சித்திரம் வரைபவர்கள் இப்பொழுது முப்பரிமாணச் சித்திரங்களில் அதிக அக்கறை காட்டுகிறார்கள். அனேகமாக வீதிகளில் வரையப்படும் இத் தத்ரூபமான சித்திரங்கள் மக்களிடையேயும் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியிருக்கின்றன. உதாரணமாக சில சித்திரங்களை இங்கே தந்துள்ளேன். யான் பெற்றஇன்பம் பெறுக இவ்வையகம்.  எனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011