YouTube வீடியோவை எளிதாக பதிவிறக்க Firefox Add-ons ! !

இணையத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் தெரிந்த ஒரு வீடியோ பகிரும் தளம் யூடியுப். இந்த தளத்தில் அனைத்து வகையான வீடியோக்களையும் நாம் பார்க்கலாம் அதுமட்டுமல்ல நாமும் நம் வீடியோவை நம் நண்பர்களிடம் பகிர்ந்ததுகொள்ளலாம். இந்த தளத்தில் இருந்து வீடியோவை பதிவிறக்க பல வகையான மென்பொருள்கள் உள்ளது அது மட்டுமல்ல பல வகையான இணையதளங்கள் மூலமாகவும் நாம் இந்த தளத்தில் இருந்து பதிவிறக்கி கொள்ளலாம்.

இதில் நீங்கள் வீடியோவை HD வடிவிலும் பதிவிறக்கலாம் இது அனைவரும் அறிந்தது தான். ஆனால் நாம் எந்த வகையான மென்பொருளையும் நிறுவாமல் எந்த தளத்திற்கும் செல்லாமல் நாம் யூடியுபில் இருந்தவாரே வீடியோவை பதிவிறக்கி கொள்ளமுடியம் அது பற்றி பார்ப்போம்.



வீடியோவை பதிவிறக்க பல வகையான நீட்சிகளை பயர்பாக்ஸ் நமக்கு தருகிறது. ஆனால் இந்த நீட்சி சற்றே வித்தியாசமானது இதன் மூலம் நாம் வீடியோவை MP4 வடிவில் கூட பதிவிறக்கி கொள்ளலாம் அதற்க்கு இந்த நீட்சி நமக்கு உதவுகிறது. இது மிகவும் சிறிய அளவிலான நீட்சி மேலும் இதை நாம் மிகவும் எளிதாக நிறுவிக்கொள்ளலாம்.






இதை நிறுவுவதற்கு : 




முதலில் உங்கள் பயர்பாக்சை திறந்துக் கொள்ளுங்கள் பின்னர் கீழே உள்ள சுட்டியை அழுத்தி அந்த நீட்சியை நிறுவிக் கொள்ளுங்கள். பின்னர் உங்கள் உலாவியை மறுதொடக்கம் செய்து கொள்ளுங்கள்.








பதிவிறக்க : EASY YOUTUBE DOWNLOADER



அவ்வளவு தான் பின்னர் நீங்கள் யூடியுப் தளத்தை திறந்து கொள்ளுங்கள் உங்களுக்கு பிடித்த வீடியோவை திறந்து கொள்ளுங்கள் அதன் கீழே DOWNLOAD என்ற பொத்தானை அழுத்துங்கள் அதில் நீங்கள் உங்களுக்கு தேவையான வடிவத்தை தேர்வு செய்து வீடியோவை பதிவிறக்கி கொள்ளுங்கள்.




இதில் நீங்கள் வீடியோவை HD வடிவமாக கூட பதிவிறக்கி கொள்ளலாம் இதற்கும் இந்த நீட்சி நமக்கு உதவுகிறது.


1 comments:

Nithal சொன்னது…

பின்குறிப்பு : இப்பதிவு உங்களுக்கு பிரயோசனமாக இருந்தால் தயவு செய்து உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள். அவர்களுக்கும் பயனுடையதாய் இருக்கும்..

நீங்கள் கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் என்னை உற்சாகப்படுத்துங்கள்..

எனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011