நீங்கள் உபயோகிக்கும் இணையத்தளங்களின் ‘Password’ கள் திருடப்படலாம்! – எச்சரிக்கை...!!!


நீங்கள் பொதுமக்களுக்கென வசதி செய்து கொடுத்திருக்கும் கணனிகளில் அதிகமாக இணையம் உபயோகிப்பவரா? எச்சரிக்கையாக இருங்கள்! இது உங்களுக்கான பதிவு! கீழே உள்ள படத்தில் உள்ள சிறிய மின் உலோகத்துண்டு, நீங்கள் உபயோகிக்கும் கணணியின் CPU இன் பின்னால், பொருத்தப்பட்டிருக்கிறதா என அவதானியுங்கள். அப்படி பொருத்தப்பட்டிருந்தால் அக்கணனியில் இணையத்தினை உபயோகிக்காதீர்கள்! அவ்வாறு உபயோகித்தீர்களானாலும், உங்கள் தனிப்பட்ட, இணையத்தளங்களுக்கு செல்வதை தவிர்த்து விடுங்கள்
தற்போது சந்தைக்கு வந்திருக்கும் புதிய சேமிப்பு களஞ்சிய உபகரணமே (New Storing Device) இது. விசைப்பலைகையில் (Key Board)  இருந்து CPU க்கு செல்லும் கேபிளுடன் பொருத்தப்பட்டிருக்கும், இவ் உபகரணம் நீங்கள் தட்டச்சு (Typing) செய்யும் அனைத்து எழுத்துக்களையும் சேகரித்துக்கொள்ளும். பொதுவாக Internet cafe, Banks, Exhibitons, Hotels போன்ற இடங்களில் உள்ள கணணிகளில் இவ்வகை உபகரணம் பொருத்தப்பட்டிருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
இக்கணணிகளில் இணையத்தினை உபயோகிக்கும் போது,  தனிப்பட்ட இணையத்தளங்களை (வங்கி இணையத்தளங்கள், mails services, personal websites) இனை பார்வையிட, உள் நுழைய உபயோகிக்கும் Passwords (கடவுச்சொற்கள்) ஐயும் சேர்த்து, நீங்கள் தட்டச்சு செய்த அனைத்து எழுத்துக்களையும் சேமிக்க தொடங்குகிறது இவ் உபகரணம்!
நீங்கள் கணணிகளை உபயோகித்து முடித்து விட்டு சென்றவுடன், இவ் உபகரணத்தில் அச்சிடப்பட்டுள்ள சொற்களை கொண்டு, உங்கள் இணையத்தளங்களுக்குரிய கடவுச்சொற்கள் (passwords) கண்டு பிடிக்கப்படுகிறது.
எனவே பொதுவான கணணிகளை இனிமேல் உபயோகிக்கும் போது, ஒரு முறை CPU இன் பின்னால் பார்த்து விடுங்கள். தேவையற்ற எவ்வகை உபகரணமும் பொருத்தப்பட்டிருப்பது போல் சந்தேகம் ஏற்பட்டால் தெளிவு படுத்திக்கொள்ளுங்கள்.

0 comments:

எனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011