Facebook Hakers க்கு அல்வா கொடுக்க......

அண்மைக்காலமாகவே ஹக்கிங் என்பது சந்தையில் மலிந்துவிட்ட ஒன்றாகிவிட்டது. யாருடனாவது மோதல் என்றால் அருவாளை தூக்குவது அந்தக்காலம். எக்கவுண்டை ஹக் பண்ணுவது இந்தக்காலம். ஃபேஸ்புக் மற்றும் கூகிள் வட்டாரத்தில் தற்போது ஹக்கிங் அதிகரித்துவிட்டதால், இவற்றில் கணக்கு வைத்திருப்பவர்கள் தற்போது அஞ்சத்தொடங்கிவிட்டார்கள். காரணம் யார் கணக்கும் எப்போது வேண்டுமானாலும் ஹக் பண்ணப்படலாம். 


கணக்கை ஆரம்பித்துவிட்டு கூகிள்காரனையும், ஃபேஸ்புக்காரனையும் நம்பிக்கொண்டிருந்தால் நம் பாடு அம்போதான். நாமாகவே சில பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற ஹக்கர்களிடம் இருந்து ஓரளவுக்கேனும் பாதுகாப்பு பெறமுடியும்.

ஏற்கனவே இது பற்றி சில பதிவுகள் எழுதியிருந்தேன். படிக்காதவர்கள் அதையும் ஒருதடவை படியுங்கள்

ஃபேஸ்புக் பாதுகாப்பு
அந்த வகையில் ஃபேஸ்புக் பாதுகாப்பை எப்படி பலப்படுத்துவது என்பது பற்றி பார்ப்போம்.

* SSL செட்டிங்ஸை Enable செய்யுங்கள் (https://)
ஆபத்தான குக்கீஸிடம் இருந்து பாதுகாப்பை பெறுவதற்காக SSL Settings ஐ Enable செய்யுங்கள். காரணம் இப்போது குக்கீஸ் மூலமும் ஹக்கிங் செய்வதற்கான வழிமுறைகள் உள்ளன. இதை செய்வதற்கு உங்கள் ஃபேஸ்புக் கணக்கில் Account - Account Setting என்ற வழியே செல்லுங்கள்
அங்கு Security என்ற ரப்பில் Secure Browsing என்பதை Enable செய்யவேண்டும். Enable செய்வதற்கு Secure Browsing என்பதற்கு அருகில் உள்ள Edit என்பதை கிளிக் செய்து Enable செய்துகொள்ளலாம்

இப்போது உங்கள் URL http://www.facebook.com என்பதற்கு பதிலாக https://www.facebook.com என்று இருக்கும்.


* உங்கள் கணக்கிற்கு Login Approvals ஐ ஏற்படுத்திக்கொள்ளுங்கள்
அடுத்த பலமான பாதுகாப்பு வழி, இந்த login Approvals ஆகும். login Approvals ஏற்படுத்திவிட்டால் உங்கள் கணக்கை ஹக் செய்வது மிக மிக கடினமாகிவிடும். அதாவது இதை Enable செய்து, உங்கள் மொபைல் இலக்கத்தையும் கொடுத்துவிட்டால், உங்கள் கணக்கை Login செய்யும்போது அவர்கள் உங்கள் கைத்தொலைபேசிக்கு ஓர் இரகசிய இலக்கம் அனுப்புவார்கள். அதை உள்ளிட்டால் மட்டுமே உங்கள் கணக்கினுள் நுழைய முடியும். ஹக் செய்பவர்கள் உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொற்களை எடுத்துவிட்டாலும் உங்கள் கைத்தொலைபேசி இல்லாமல் கணக்கில் நுழையமுடியாது.
இதை செயற்படுத்துவதற்கு Account - Account Settings - Security என்ற வழியே சென்று Login Approvals  என்பதனை தெரிவு செய்ய வேண்டும்.


அடுத்துவரும் விண்டோவில் Setup Now என்பதை கிளிக் செய்யவேண்டும்
அதற்கடுத்து வரும் விண்டோவில் உங்கள் கைத்தொலைபேசி இலக்கத்தை கொடுத்துவிட்டால் சரி.
ஆனால் ஒரு Browser இற்கு ஒருதடவை மாத்திரமே வெரிஃபிகேஷன் கோட் அனுப்பப்படும். அடுத்த தடவை அந்த கணனியில் இருந்து Login செய்தால் வெரிஃபிகேஷன் கோட் தேவைப்படாது. வெளி இடங்களில் பாவித்தால் Browser இன் History ஐ அழித்துவிடுங்கள்.
இங்கு உங்கள் கைத்தொலைபேசி முக்கியம். கைத்தொலைபேசி இல்லாவிட்டால் உங்கள் கணக்கினுள் நுழைய முடியாது. அவ்வாறு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் எப்படி கணக்கை மீட்பது என்பது பற்றி பின்னர் விரிவாக பதிவிடுகிறேன்.

* One Time Password
பொது இடங்களில் கணனியை பாவிக்கும்போது OneTime Password ஐ பயன்படுத்தினால் மிகவும் பாதுகாப்பானதாகவிருக்கும். OneTime Password என்பது ஃபேஸ்புக்கினால் உங்களுக்கு தற்காலிகமாக வழங்கப்படும் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்.இது ஒரு தடவை பயன்படுத்திய பின்னர் செயலிழந்துவிடும். பொது இடங்களில், உதாரணமாக இன்ரனெற் கஃபேக்களில் Keylogger மூலமாகவும் ஸ்பை கமராக்கள் மூலமாகவும் நீங்கள் ரைப் செய்யும் சொற்கள் கண்காணிக்கப்படும் அபாயம் உண்டு. எனவே OneTime Password ஐ பயன்படுத்துவதன் மூலம் இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம்.

இதை செயற்படுத்துவதற்கு உங்கள் கணக்கிற்கு சென்று Profile - Edit Profile - Contact information என்ற வழியே சென்று உங்கள் கைத்தொலைபேசி இலக்கத்தை கொடுத்துவிடுங்கள்

அதன் பின்னர் உங்களுக்கு தற்காலிக பயனர் பெயர், கடவுச்சொல் தேவைப்படும் நேரங்களில் “otp" (without quotes) என ரைப் செய்து 32665 என்ற இலக்கத்துக்கு அனுப்புங்கள். உடனடியாகவே தற்காலிக பயனர் பெயர், கடவுச்சொல் உங்கள் கைத்தொலைபேசிக்கு அனுப்பிவைக்கப்படும்

* Remote Log out  ஐ உபயோகப்படுத்துங்கள்
வெளி இடங்களில் கணனியை உபயோகப்படுத்திவிட்டு ஞாபக மறதியால் log out செய்யாமல் வந்துவிட்டால் Remote Log out வசதியை பயன்படுத்தி உடனடியாகவே கணக்கை Log out செய்துவிடுங்கள்.
இதற்கு Account - Account Settings - Security என்ற வழியே சென்றால் அங்கு Active Sessions என்ற ஒரு Option காணப்படும். அதில் நீங்கள் இறுதியாக ஃபேஸ்புக் பாவித்த இடம் காட்டப்படும். அங்கு End Session என்பதை கிளிக் செய்து log out செய்து கொள்ளலாம்

* ஃபேஸ்புக் அப்ளிகேஷன்களை நீக்கிவிடுங்கள்

ஃபேஸ்புக்கில் ஏராளமான அப்ளிகேஷன்கள் உலா வருகின்றன. இவற்றில் சில பிரயோசனமான அப்ளிகேஷன்கள் இருந்தாலும் பெரும்பாலானவை Spam வகையை சேர்ந்தவையாகவே உள்ளன. 

Love Test, Profile viewer போன்ற கவர்ச்சிகரமான பெயர்களுடன் இவை காணப்படுகின்றன. இவற்றை நாம் செயற்படுத்தும்போது, எமது தகவல்களை பயன்படுத்துவதற்கான அனுமதியை பெற்றுக்கொள்கின்றன. இவ்வாறு பெறப்படும் தகவல்கள் பலவேளைகளில் எமக்கு தெரியாமலேயே பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே இவ்வாறான அப்ளிகேஷன்களை நிராகரிப்பது நல்லது. ஏனெனில் அவற்றால் எமக்கு எந்த பிரயோசனமும் இல்லை. மாறாக தீமை மட்டுமே. 

ஏற்கணவே இவ்வாறான அப்ளிகேஷன்களை செயற்படுத்தியிருந்தால் அவற்றை நீக்கிவிடுங்கள். நீக்குவதற்கு உங்களுடைய ஃபேஸ்புக் கணக்கில் Account - Account Setting - Applications என்ற வழியே சென்று நீக்கிக்கொள்ளுங்கள்.

* பிறந்த திகதியை மறைத்துவிடுங்கள்

ஹக்கிங்கின் போது உங்கள் தனிப்பட்ட அடையாளப்படுத்தலில் உங்கள் பிறந்த திகதி மிகவும் முக்கியமானது. எனவே உங்கள் பிறந்த திகதியை மறைப்பதன் மூலமாகவோ, அல்லது குறிப்பட்ட சிலவற்றை மறைப்பதன் மூலமாகவோ (ஆண்டு/ மாதம்) பாதுகாத்துக்கொள்ளுங்கள்

Login notification ஐ Enable செய்யுங்கள்

Account - Account Settings - Security என்ற வழியே சென்று Login notification ஐ தெரிவு செய்துவிடுங்கள். இதை செயற்படுத்தினால் ஒவ்வொரு தடவையும் நீங்கள் login செய்யும்போதும் உங்களது மின்னஞ்சலுக்கும் கைத்தொலைபேசி இலக்கம் கொடுத்திருந்தால் கைத்தொலைபேசிக்கும் தகவல் அனுப்பப்படும். ஹக்கிங் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அதை தடுப்பதற்கு உதவியாக இருக்கும்.

இதை விட இன்னமும் பல வழிகள் உள்ளன. பதிவின் நீளம் கருதி அவற்றை பிறிதொரு பதிவில் தரலாம் என உள்ளேன்.

அடுத்தடுத்த பதிவுகளில் ஜிமெயில் போன்றவற்றை எப்படி பாதுகாப்பது என்பது பற்றி எழுதவுள்ளேன். தொடர்ந்து இணைந்திருங்கள்

பின்குறிப்பு : இப்பதிவு உங்களுக்கு பிரயோசனமாக இருந்தால் தயவு செய்து உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள். அவர்களுக்கும் பயனுடையதாய் இருக்கும்..

நீங்கள் கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் என்னை உற்சாகப்படுத்துங்கள்..

0 comments:

எனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011