ஒரே Click இல் அனைத்து முக்கிய Software களை யும் நிறுவ....

இப்பொழுது கணினி என்பது இந்த உலகில் மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது நாம் எங்கு திரும்பினாலும் சரி நமக்கு முன் கணினி தான் நிற்கிறது. அந்த அளவுக்கு இந்த உலகம் கணினியை நேசிக்கின்றது. கணினி இயங்குவதற்கு மென்பொருள் மிகவும் அவசியமான ஒன்று . இப்பொழுது மென்பொருள்கள் ஏராளமாக உருவாக்க படுகின்றன. இணையத்தில் ஒரு குறிச்சொல் கொடுத்து தேடினால் ஏராளமான மென்பொருள்கள் குவிகின்றன ஒரே செயலுக்கு பல வகையான மென்பொருள்கள் வந்துவிட்டன.


நாம் நம் கணினிக்கு தேவையான ஒவ்வொரு மென்பொருளையும் இணையத்தில் தேடி தேடி நிறுவிக்கொண்டு இருக்கிறோம்.ஒவ்வொரு மென்பொருளையும் பதிவிறக்குவதர்க்கு ஒவ்வொரு வலை பக்கத்திற்கு செல்லுவோம் அதில் அதை பதிவிறக்கியும் கொள்ளுவோம்.

இதனால் நாம் அதிகமான நேரத்தை இணையத்தில் செலவிட வேண்டியுள்ளது.


அதற்கான் தீர்வை ஒரு இணயதளம் நமக்கு தருகிறது . ஒரே சொடுக்கில் நமக்கு தேவையான அனைத்து வகையான மென்பொருளையும் நிறுவுவதற்கு இந்த தளம் உதவுகிறது. இந்த தளம் கணினிக்கு தேவையான மென்பொருள்களை ஒரு பட்டியலே போட்டு வைத்திருக்கிறது.


இந்த தளத்தில் கணினிக்கு மிகவும் அவசியமான VLC , WINAMP  , JET AUDIO போன்ற வீடியோ மற்றும் ஆடியோ பிளேயர்களும் , FIREFOX,CHROME போன்ற பல உலாவிகளும் ,  GTALK , SKYPE போன்ற உரையாடல் மென்பொருள்களும்  மற்றும் இணையத்திற்கு தேவையான பிளாஷ் பிளேயர் , சில்வர் லைட் போன்ற மென்பொருள்களும் இந்த தளத்தில் இருக்கிறது. மேலும் இந்த தளத்தில் ஆவணகளுக்கு தேவையான மென்பொருள்களும் ஒளிபடங்களுக்கு தேவையான மென்பொருள்களும் நிறைய உள்ளது.இந்த தளத்திற்கு செல்ல : www.ninite.com


நீங்கள் செய்ய வேண்டியது :

1. மேலே உள்ள தளத்திற்கு செல்லவும்.

2. பின்னர் அதில் உங்களுக்கு தேவையான மென்பொருள்களை தேர்வு செய்யுங்கள் .

3. பிறகு கீழே உள்ள GET INSTALLER என்ற பொத்தானை அழுத்தவும்.

நீங்கள் அந்த பொத்தானை அழுத்திய உடன் அந்த தளம் ஒரு சாதாரண NINITE.EXE கோப்பை பதிவிறக்கம் செய்யும். அந்த கோப்பை பதிவிறக்கிக் கொண்டு அதை திறக்கவும். அவ்வளவு தான் நீங்கள் தேர்ந்தெடுத்த அனைத்து மென்பொருள்களும் ஒரே சொடுக்கில் நிறுவப் பட்டுவிடும் .

0 comments:

எனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011