நீங்களும் உருவாக்கலாம் உங்களுக்கென்று ஓர் Web தளம் (Blogspot)..

பிளாக் உருவாக்க ஜிமெயில் அக்கவுண்ட் தேவை. ஜிமெயில் அக்கவுண்ட் இல்லாதவர்கள் முதலில் ஜிமெயில் அக்கவுண்டை துவக்கவும் (உருவாக்கவும்)

சரி, இப்போது ஜிமெயில் அக்கவுண்ட் துவக்கிவிட்டீர்கள்
இனி என்ன செய்வது?

http://www.blogger.com  இந்த லிங்கை கிளிக் செய்வும்.  இப்போது கீழே உள்ளது போன்ற பக்கம் தோன்றும்.அதில்
1 ல் User Name டைப் செய்யவும்

2 ல் Password டைப் செய்யவும்

3  singin  கிளிக் செய்யவும்

singin  கிளிக் செய்யதபிறகு கீழ் வரும் பக்கம் தோன்றும்அதில் Create your blog now (4) ஐ கிளிக் செய்யவும்.இப்போது கீழ்கண்ட பக்கம் தோன்றும்


5ல் உங்கள் துவக்கப்போகும் பிளாக்கின் தலைப்பை டைப் செய்யவும்

(இதில் ஆங்கிலத்தில் மட்டுமே தரமுடியும். தமிழில் தலைப்பு தேவையெனி்ல் வேறு இடத்தில் டைப் செய்து காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்யலாம்.
தமிழில் டைப் செய்ய http://tamileditor.org இந்த தளத்தை பயன்படுத்தலாம்)

6ல் (Blog address URL) பிளாக்கின் பெயர் டைப்செய்யவும்.
பின்னர் அதற்கு கீழே உள்ள Check Availability ஐ கிளிக் செய்யவும்
நீங்கள் கொடுத்த பெயரில் ஏற்கனவே பிளாக் இருந்தால் வேறு பெயரை தேர்ந்தெடுக்கச் சொல்லும். அதற்கு ஏற்றவாறு பெயரை தேர்வு செய்து Continue (7) ஐ கிளிக் செய்யவும்

அடுத்து மேலே உள்ள பக்கம் தோன்றும். அதில் 8 template உள்ளது. இதில் உங்களுக்கு எந்த டிசைன் பிடித்திருக்கிறதோ அதை தேர்வு செய்து, பின்னர் Continue பட்டன் (8)ஐ கிளிக் செய்யவும். 

இந்த டிசைன் இல்லாமல் வேறு டிசைனையும் (template) நாம் தேர்வு செய்யலாம். இது குறித்து பின்னர் விரிவாக பார்க்கலாம்.

அடுத்து கீழே உள்ள பக்கம் தோன்றும் அதில் ஒன்றும் செய்ய தேவையில்லை. Start blogging (9)ஐ கிளிக் செய்யுங்கள் போதும்


மேலே உள்ள பாக்ஸில் தான் நீங்கள் உங்கள் பிளாக்கில் இடம் பெற வேண்டிய செய்திகளை டைப் செய்ய வேண்டும். இப்போது அது வேண்டாம். நீங்கள் உருவாக்கியுள்ள பிளாகின் தோற்றம் எப்படி இருக்கிறது என்பதை அறிய நீங்கள் ஆவலாக இருப்பீர்கள். எனவே View Blog  (10)ஐ கிளிக் செய்து நீங்கள் உருவாக்கியுள்ள பிளாக்கை பார்த்து மகிழுங்கள்..

0 comments:

எனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011