ஆண்கள் பெண் குரலிலும், பெண்கள் ஆண் குரலிலும் பேசவேண்டுமா.... ??

ஒரு ஆண் பேசும் குரலை நேரடியாக ஒரு பெண் பேசும் குரல் போல் மாற்ற உதவும் இலவச மென்பொருளைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

ஆண்கள் பேசும் குரலும் பெண்கள் பேசும் குரலும் தனியாக தெரியும் ஆனால் மொபைல் போன்களில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே பெண்கள் பேசுவது போல் மாற்ற ஏற்கனவே பல மென்பொருட்கள் உள்ளன, ஆனால் கணினியில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே நேரடியாக பெண்கள் பேசுவது போல் மாற்ற ஒரு மென்பொருள் உள்ளது.
தறவிரக்க முகவரி : http://www.screamingbee.com/product/MorphVOXJunior.aspx
மேலே கொடுத்திருக்கும் முகவரியை click செய்வதன்மூலம் இந்த மென்பொருளை இலவசமாக தறவிரக்கி நம் கணினியில் நிறுவலாம். மென்பொருளை இயக்கி யாருடைய குரலில் கேட்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து நாம் பேசினால் போதும், உதாரணமாக ஒரு ஆண் பேசும் போது பெண் குரலை தேர்ந்தெடுத்துவிட்டு பேச ஆரம்பித்தால் அது பெண் பேசுவது போல் இருக்கும். Man , Tiny Folks , Woman என்ற மூன்று விதமான option இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் இதில் Tiny Folks என்பது கார்டூன் கேரக்டர் பேசுவது போல் இருக்கும். பல சமயங்களில் chattingல் பேசுவது பெண் தான் என்று நினைத்திருப்போம் உண்மையிலே அவர் இது  போன்று இருக்கும் மென்பொருளை பயன்படுத்தி தான் பேசிக்கொண்டிருப்பார். வேடிக்கைக்காக ஆண் குரலை பெண் குரலாகவும் பெண் குரலை ஆண் குரலாகவும் மாற்ற விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

0 comments:

எனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011