இன்றைய மருத்துவ குறிப்பு : கறிவேப்பிலை

குழம்பு, பொரியல், ரசம் என்று எதுவாயிருந்தாலும் தாளிக்கும் போது கறிவேப்பிலையை சேர்த்து சமைப்பது வழக்கம். இது ஏதோ வாசனைக்காகச் சேர்க்கப்படுகிறது என்பதைப் போல பெரும்பாலானோர் சாப்பிடும் போது கறிவேப்பிலையை எடுத்து வைத்துவிட்டுச் சாப்பிடுவார்கள். ஆனால், அதன் மருத்துவ குணமும் நன்மையும் தெரிந்தால் இப்படி அதை ஒதுக்கமாட்டோம் என்பதே உண்மை. சளி காரணமாக காய்ச்சல் ஏற்பட்டால் அந்தக் காய்ச்சலை கறிவேப்பிலை இறக்கிவிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கறிவேப்பிலையுடன் சிறிதளவு சீரகம், மிளகு, இஞ்சி சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு உருட்டி சாப்பிட்டு பின் வெண்ணீர் குடித்தால் போதும் விரைவிலேயே காய்ச்சல் குறைந்துவிடும். இதுமட்டுமா? சீதபேதியையும் கறிவேப்பிலை நிறுத்தும். கறிவேப்பிலையை நன்கு சுத்தம் அரைத்து எலுமிச்சம் அளவு எடுத்து எருமைத் தயிரில் கரைத்து காலையில் மட்டும் வெறும் வயிற்றில் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் போதும் எப்படிப்பட்ட சீதபேதியும் நின்று விடும். மேலும், குடல் இறுக்கம், மூலக்கடுப்பு போன்ற பிரச்சனைகளையும் இது சரிசெய்யும். இதுதவிர, கறிவேப்பிலையுடன் சீரகம், புளி, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து துவையலாக சாப்பிட்டால், நாக்கு ருசியற்ற தன்மையிலிருந்து மாறி இயல்பான நிலைக்குத் திரும்பும். அகத்திக்கீரைக்கு அடுத்து கறிவேப்பிலையில்தான் அதிக சுண்ணாம்புச் சத்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கறிவேப்பிலையை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு தலை முடி நரைப்பதில்லை. ஏனென்றால் முடி கருமையாக இருக்கவும், நரையைத் தடுக்கும் தன்மையும் கறிவேப்பிலைக்கு உண்டு

0 comments:

எனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011