அடுத்தவர் கண்ணில் இருந்து MyComputerல் உள்ள DRIVE ஐ மறைப்பது எப்படி ?

சாதாரணமாக கணினியில் ஒரு FOLDER  அல்லது FILE  ஐ மறைக்க அதை HIDDEN  ஆக மாற்றுவோம் .இப்போது கணினியிலுள்ள ஒரு குறிப்பிட்ட DRIVE  அல்லது அனைத்து டிரைவ்களையும் மறைப்பது எப்படி என்பதை காண்போம் . 


1 .RUN  ஐ திறந்து அதில் gpedit.msc என TYPE  செய்து OK  அழுத்துங்கள் .


2 .இப்போது Administrative Templates என்பதை விரிவு படுத்துங்கள் .3 .அடுத்து windows  components  என்பதை விரிவு படுத்துங்கள் 


4 .Windows Explorer என்பதை திறவுங்கள்
 

5 .இப்போது படத்தில் காட்டியுள்ளது போல Hide these specified drives in My computer என்பதை டபுள் கிளிக் செய்யுங்கள் .6 .இப்போது Settings  ல் Enabled  என்பதை தேர்வு  செய்து செய்து நீங்கள் மறைக்க விரும்பும் drive  ஐ தேர்வு செய்து ok  அழுத்துங்கள் .

7 .இப்போது கணினியில் My computer ஐ திறந்தால் குறிப்பிட்ட டிரைவ் மறைந்திருக்கும் .

அய்யையோ என்னோட D டிரைவை காணோம் என்று பயந்துவிடாதீர்கள் .மேற்கண்ட நடை முறைகளை திரும்பவும் பயன்படுத்தி உங்கள் டிரைவை திரும்ப கொண்டு வரலாம் .

Beauty Tips : வெயில்லிலும் ஜொலிக்க..........!!!

கொளுத்தும் வெயிலை எதிர்கொண்டு, தங்களின் மேனியை ஜொலிக்கச் செய்ய கூல் டிப்ஸ்...

* காலையில் நீராகாரம் நிறைய சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் எட்டு தம்ளர் நீர் பருக வேண்டும். இளநீர், பசுமோர், பழரசங்கள், மூலிகைப் பானங்கள் போன்றவைகளை அருந்தவும்.

* செம்பருத்திப்பூ, இலை, கறி வேப்பிலை, வெந்தயக்கீரை, கரிசலாங்கண்ணி இவை எல்லாம் குளிர்ச்சி தரும் பொருட்கள். இவைகளைக் கொண்டு மூலிகை எண்ணெய் தயாரித்து தலையில் பூசி வந்தால் உடம்பு சூடு குறையும். கண்ணுக்கும் குளிர்ச்சி தரும்.

* வெந்தயக்கீரை, கொத்தமல்லி இரண்டையும் மையாக அரைத்துத் தலையில் பூசி குளித்தால் கோடையில் தலைமுடி பட்டுப்போல் மின்னும். வெள்ளரிக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியிலிட்டு கூழாக்கவும். இந்தக் கூழை ஃப்ரிஜ்ஜில் வைத்து குளிர்வித்து அதன்பின் கண் இமை, முகம், கழுத்து, தோள் பகுதிகளில் பூசிக்கொள்ளுங்கள். இயற்கையான பொலிவு கிடைக்கும்.

* கோடையில் வெயிலில் அலைவதால் உஷ்ணக் கட்டி ஏற்படும். அதைப் போக்க ஒரு கிண்ணத்தில் மோர் ஊற்றி அதில் வேக வைத்த உருளைக் கிழங்கை மசித்துப் போட்டு கலக்கி கட்டி மீது பூசினால் கட்டி தானாகவே மறையும்.

* நன்றாக கடைந்தெடுத்த மோரில், அரை மூடி எலுமிச்சை சாறும், வெங்காயச் சாறும் கலந்து பெருங்காயம் சேர்த்து குடித்தால் கோடை வெப்பத்தில் உடல் சோர்ந்து போகாது; களைப்பும் தெரியாது.

* குளித்து முடித்ததும் நன்றாக துடைத்துவிட்டு, ஏதாவது பாடி டால்கம் பவுடர் அல்லது டியோடரண்ட் ஸ்பிரே உபயோகிக்கவும். இது கோடைக் காலத்தில் நாள் முழுக்க உங்களை நறுமணத்தோடும், புத்துணர்சியுடனும் வைக்கும்.

* சாத்துக்குடி, எலுமிச்சை, தர்பூசணி, நன்னாரி போன்ற சாறுகளில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் கோடையில் சருமம் வறண்டு போகாமல் இருக்கும்.

* அதிகமாக வேர்க்கும் கோடைக் காலத்தில் படை, வேர்க்குரு போன்றவை ஏற்பட்டு அரிப்பும், எரிச்சலுமாக அவதிப்படுவீர்கள். கான்டிட்டஸ்டிஸ் பவுடரை பூசிக் கொண்டால் இந்தத் தொல்லை இருக்காது.

* எண்ணெய், மசாலா, காரம் சேர்த்த உணவு வகைகளை கோடையில் தவிர்ப்பது நல்லது.

* இரவில் மோரில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெந்தயத்தை மென்று திங்க உடம்பு உஷ்ணம் குறையும்.

* நுங்கு சாற்றையும், வெள்ளரிச் சாற்றையும் உடல் முழுவதும் பூசி குளித்தால் கோடையில் வறண்ட சருமம் மிருதுவாகும்.

Password களை Hack பண்ணுவதில் இருந்து தடுக்க...

இணையத்தில் பல சேவைகளை நாம் உபயோகிக்க அதில் உறுப்பினர் ஆகி நமக்கென்று ஒரு கடவுச்சொல் உருவாக்கினால் தான் சில வசதிகளை  பயன்படுத்த முடியும். இப்படி நாம் உருவாக்கும் பாஸ்வேர்டை இன்னொருவர் கண்டறிந்து நம்முடைய தகவல்களை அழித்தோ, அல்லது நமது கணக்கை முடக்கவோ செய்துவிடுகின்றனர். இந்த செயலில் தவறு நம் மீதும் உள்ளது பாஸ்வேர்ட் உருவாக்கும் பொழுது பாஸ்வேர்டை கடினமாக உருவாக்க வேண்டும்.
எண்கள்,பெரிய எழுத்துக்கள்(capital Letters), சிறிய எழுத்துக்கள்(Small Letters), மற்றும் குறியீடுகள்(Special Characters) ஆகியவை கலந்து ஒரு பாஸ்வேர்டை உருவாக்கினால் உங்கள் பாஸ்வேர்ட் யாராலும் கண்டறிய முடியாது. மிகவும் பாதுகாப்பாக இருக்கும். இது போல பாஸ்வேர்டை எப்படி உருவாக்குவது என பார்க்கலாம். இது போல பாஸ்வேர்டை உருவாக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

இன்ஸ்டால் செய்யும் முறை:
 • டவுன்லோட் செய்த மென்பொருளை(.exe) இன்ஸ்டால் செய்ய டபுள் க்ளிக் செய்து வரும் விண்டோவில் Run கொடுக்கவும்.
 • அடுத்து வரும் விண்டோவில் Next கொடுக்கவும். அந்த விண்டோவில் டூல்பார் இன்ஸ்டால் ஆப்சன் இருக்கும் அதில் உள்ள டிக் மார்க்கை நீக்கி விடவும்.
 • அடுத்து வரும் கீழே இருப்பதை போல இரண்டு விண்டோ வரும் அதில் உள்ள SKIP பட்டணை அழுத்தவும்.

 • அடுத்து கடைசியாக Finish என்ற பட்டணை அழுத்தினால் இந்த மென்பொருள் உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகி மென்பொருள் ஓபன் ஆகும். 
உபயோகிக்கும் முறை:
 • முதலில் ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்களுக்கான பாஸ்வேர்டை தேர்வு செய்யுங்கள். இந்த மென்பொருளை உபயோகிக்க இந்த பாஸ்வேர்டை கொடுத்தால் தான் உள்ளே நுழைய முடியும்.
 • அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
 • இதில் Password Length என்ற இடத்தில் உங்கள் பாஸ்வேர்ட் அளவை தேர்வு செய்து (குறைந்தது 10 தேர்வு செய்யவும்) அடுத்து கடைசியாக உள்ள Quantity என்ற இடத்தில் உங்கள் எதனை பாஸ்வேர்ட் வேண்டுமோ அதி தேர்வு செய்து கீழே உள்ள Create Password(s) என்ற பட்டணை அழுத்தவும். 
 • அடுத்து உங்களுக்கான பாஸ்வேர்ட்கள் லிஸ்ட் வரும். 
 • இதில் பச்சை நிறத்திலும், வெளிர் நீல நிறத்திலும் உள்ள paaswerdkal சிறந்த பாஸ்வேர்ட்கள். சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் ஏதேனும் பாஸ்வேர்ட் வந்தால் அவைகளை உபயோகிக்க வேண்டாம்.
 • இந்த மென்பொருளில் ஒரு முறை வந்த பாஸ்வேர்ட் திரும்பவும் வாராது ஆகையால் நம்முடைய பாஸ்வேர்ட் மற்றவர்க்கும் தெரியலாம் என்ற அபாயம் இல்லை.
 • இந்த மென்பொருளில் கூடுதல் வசதியாக நம்முடைய பாஸ்வேர்டை சேமித்து வைக்க Password Manager என்ற வசதியும் உள்ளது. இதானால் நாம் பாஸ்வேர்டை மறந்துவிடுவோம் என்ற பயமும் இல்லை.
 • இது போன்று நமது பாஸ்வேர்டை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்கவும்.

எந்த வலையமைப்புக்குமான GPRS Settings ஐ பெற்றுக்கொள்ள..

ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு குறைந்த கட்டனத்தில் Data  சலுகைகளை நமக்கு வழங்கி வருகிறது. நாமும் பல வலையமைப்புக்கு (Mobitel, Airtel, Dialog, Hutch, Etisalat) அடிக்கடி மாறி மாறி வருகிறோம். இருந்தாலும் கையடக்க தொலைபேசியில் அந்த நிறுவனத்துடைய GPRS Settings இருந்தால் மாத்திரமே நாம் இணையத்தை பயன்படுத்த கூடியதாக இருக்கும். இந்த GPRS Settings ஐ எப்படி இலகுவாக பெற்றுக்கொள்வது எப்படி என்பதுதான் இன்றைய பதிவு.


GPRS Settings நமக்கு புதிதாக ஒரு Mobile வாங்கினால் / ஒரு வலையமைப்பில் இருந்து இன்னும் ஓர் வலையமைப்புக்கு மாறும் போது (Airtel இல் இருந்து Mobitel இற்கு மாறும் போது  Mobitel  உடைய GPRS Settings தேவைப்படலாம்) / தவறுதலாக GPRS Settings அழிக்கப்பட்டால் , போன்ற  சந்தர்ப்பங்களில் நமக்கு GPRS Settings  தேவைப்படுகிறது.


இதனை பெறுவதற்கு வாடிக்கையாளர் சேவைக்கு அழைப்பை மேற்கொண்டால்  குறைந்த பட்சம் 10 நிமிடங்கள் போகும் அவர்கள் நமது அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு அதற்கு பிறகு பெயர் , தொலைபேசி இலக்கம் , மொடல் நம்பர் சொல்லி எப்படியும் செட்டிங்ஸ் வருவதற்கு 15 நிமிடம் எடுக்கும்.இனிஇதையெல்லாம் விட்டுப்போட்டு கீழ் உள்ள முறையை பின்பற்றுங்க 3 செக்கனில் GPRS Settings கிடைத்துவிடும்.

Mobitel
Type #222#

Dialog
Type "GPRS" and send to 678 / Type #107#

Airtel 

Type "ALL" and send to 2222

மேலே சொன்ன முறையில் GPRS Settings  கிடைக்காவிட்டால்  கீழ் உள்ள முறையை பின்பற்றுங்கள்.

Dialog , Mobitel, Etisalat , Airtel, Hutch போன்ற வலையமைப்புக்களுக்கு  Manual settings ஐ பெறுவதற்கு http://settings.gprs.gishan.net

எனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011