இணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்


 

இணைய தளங்களுக்கான முகவரியில் துணைப் பெயராக மேலும் பல புதிய வகை பெயர்களை அமைக்க இதற்கான பன்னாட்டு அமைப்பு அனுமதி கொடுத்துள்ளது. இந்த பெயர்களை generic toplevel domains என அழைக்கின்றனர்.
தொடக்கத்தில் .com, .org, and .net போன்ற பொதுவான பெயர்களே தளப்பெயர்களின் துணைப் பெயர்களாக இருந்து வந்தன. பின்னர் நாடுகளின் அடையாளம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று, .uk and .in என நாடுகளின் பெயர்களும் அனுமதிக்கப்பட்டன.
தொழில் வகைப் பெயர்களாக .biz போன்றவையும் வரத் தொடங்கின. இவ்வகையில் இதுவரை மொத்தம் 22 வகை துணைப் பெயர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது.
அண்மையில் கூடிய இத்தகைய பெயர்களை அனுமதித்து கண்காணித்து வரும் ஐகான்(ICANN –Internet Corporation for Assigned Names and Numbers) அமைப்பு கூடுதலாகச் சில வகைப் பெயர்களை அமைக்க அனுமதி தந்துள்ளது.
இதன் மூலம் ஆங்கிலம் அல்லாத வேறு மொழிகளிலும் புதிய வகைகளிலும் இந்த பெயர்களை அமைக்கலாம். இதன்படி ஒரு நிறுவனம் தன் நிறுவனத்தை அடையாளம் காட்டும் வகையில் பெயரை அமைத்துக் கொள்ளலாம். நிறுவனப் பெயர் மட்டுமின்றி குறிப்பிட்ட தன் தயாரிப்பு ஒன்றின் பெயரைக் காட்டும் அடையாளப் பெயர்களையும் வைத்துக் கொள்ளலாம்.

நன்றி  - lankasritechnology

0 comments:

எனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011