VLC Player ஐப் பயன்படுத்தி Video ஒன்றின் தேவையான பகுதியை சேமிக்க...

VLC Player ஐப் பயன்படுத்தி Video ஒன்றின் தேவையான பகுதி ஒன்றை எவ்வாறு வெட்டி எடுக்கலாம் என்று காண்போம்.
VLC Player இல் Video ஒன்றை திறந்து கொள்ளுங்கள். பின் View->Advanced Controls என்பதை தெரிவு செய்யுங்கள்.
நீங்கள் தெரிவு செய்தவுடன் சில Buttons தோன்றும். இப்போது Video ன் தேவையான இடத்தில் Record Button னை  அழுத்துங்கள்.
பின் வெட்ட வேண்டிய பகுதியின் இறுதிப் பகுதி வந்ததும் மறுபடியும் Record Button னை 
அழுத்துங்கள்.
இப்போது காணொளியின் வெட்டப்பட்ட பகுதி உங்கள் கணணியில் சேமிக்கப்பட்டுவிடும்.
இயங்கு தளம் Windows 7 எனில், My Videos இல் இந்த வீடியோ பகுதி சேமிக்கப்பட்டு விடும். இந்த முறையைப் பயன்படுத்தி Mp3 களில் இருந்தும் தேவையான பகுதியை வெட்டி எடுக்கமுடியும்.

அனைத்து மென்பொருள்களுக்குமான Serial, Keygen and Patch இணையத்தில் இலகுவாக பெற வேண்டுமா...??

இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும்பாலும் மென்பொருட்கள் பாவனை எங்கும் பரவி கிடக்கின்றது. சட்டரீதியாக மென்பொருட்களை எவரும் பணம் கொடுத்து வாங்குவது கிடையாது. காரணம் இணையத்தில் பரவிகிடக்கின்ற திருட்டுகள். இலகுவாக எந்த மென்பொருளுக்கும் உரிய Activation Key இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்த செயற்பாடு சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளபடாதவை, இருந்தும் இதை தடுக்க எந்தவொரு வழியும் தற்சமயம் கிடையாது. என்ன செய்வது நானும் இந்த முறையைத்தான் பின்பற்றி ஒரு திருட்டு வழி முறையை கற்றுத்தர போகிறேன். எவ்வாறு எல்லா வகையான மென்பொருள்களுக்கும் இலகுவாக serial, keygen and patch இணையத்தில் பெறுவது. அதற்கு நாங்கள் செய்ய வேண்டியது கிழே உள்ள படிமுறைகளை பின்பற்றினால் போதும். 

 1. முதலாவதாக கூகிள் இணையதளத்திற்கு செல்லுங்கள் - Google.com 
 2. பின்னர் கூகிள் தேடலில் “94fbr” இடைவெளிவிட்டு மென்பொருள் பெயரை எழுதுங்கள். உதாரணமாக 94fbr MSoffice 2010.
 3. அதன் பிறகு கூகிள் keygen’s உரிய பட்டியலை காட்டும்.

 அதில் எது வேண்டுமோ, தெரிவு செய்து உங்கள் மென்பொருளை அக்டிவ் பண்ணுவதற்கு பயன்படுத்தி கொள்ளுங்கள்.

உங்களுக்கு தெரியுமா..?? Microsoft Office இல் Teb வசதி...!!

தற்போது உள்ள Browser களில் tab வசதியானது மிகச் சிறந்த ஒரு வசதியாக கருதப்படுகிறது. இதற்குக் காரணம் ஒரு browser இல் பல tab களைத் திறப்பதன் மூலம் Browsing இலகுவாகின்றது அத்துடன் எமது நேரமும் சேமிக்கப்படுகின்றது.
இதே போன்ற Tab வசதியை Microsoft office இல் கொண்டுவந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும் Microsoft Word, Microsoft Excel, Microsoft PowerPoint இல் தனித் தனி Window இல் திறந்து வைத்து ஒவ்வொரு Window ஆக மாற்றி மாற்றி வேலை செய்வதற்குப் பதில் ஒரே Window இல் வெவ்வேறு Tab இல் திறந்து வைத்து வேலை செய்வதனால் இலகுவாக எமது வேலைகளை செய்து முடிக்கக் கூடியதாக இருக்கும். அத்துடன் அதிகளவு நேரத்தையும் மிச்சப்படுத்திக் கொள்ள கூடியதாக இருக்கும்.

இவ் வசதியை உங்கள் கணணியில் உள்ள Microsoft office இல் செயற்படுத்துவதற்க்கு கீழ் உள்ள சுட்டியில் இருந்து OfficeTab என்ற சிறிய Microsoft Office plug-in ஐ தரவிறக்கி உங்கள் கணணியில் Install பண்ணிக் கொள்ளவும்.


இதை Install பண்ணியதும் வரும் OfficeTab Setting இல் உங்களுக்கு விருப்பமான Tab Style, மற்றும் Tab இன் நிறம் போன்றவற்றை மாற்றிக் கொள்ள முடியும்.

மென்பொருளைத் தரவிறக்க : Click Here...

Google இன் Magic உங்களுக்கு தெரியுமா...??

தேடுதலுக்கு அனைவரும் பயன்படுத்தும் கூகுள் தளத்தில் தேடுதலை சுவாரஸ்யமாக மாற்ற சில மேஜிக் வார்த்தைகள் உள்ளன.
இந்த வார்த்தைகளை கொடுத்தால் கூகுள் தளம் சில சுவாரஸ்யமான வடிவங்களில் மாறும்.

Let it Snow 
இந்த வார்த்தையை கூகுள் தேடியந்திரத்தில் கொடுத்து தேடினால் உங்களின் கூகுள் விண்டோவில் பனி மழை பொழியும். கிறிஸ்துமஸ் அன்பளிப்பாக இதனை உருவாக்கியுள்ளது.

Tilt 
இந்த வார்த்தையை கூகுள் தேடியந்திரத்தில் கொடுத்து தேடினால் உங்களின் கூகுள் விண்டோ ஒரு பக்கம் சாய்வாக காட்சி அளிக்கும்.

Do a Barrel Roll 
இந்த வார்த்தையை கொடுத்தால் கூகுள் விண்டோ ஒரு சுற்று சுற்றிவிட்டு பழைய நிலைமைக்கு வரும்.

Hanukkah 
இந்த வார்த்தையை கூகுளில் கொடுத்து தேடினால் கூகுள் பாருக்கு கீழே நட்சத்திரத்தினால் ஆன ஒரு வரி காணப்படும்.

உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க..???

நாம் windows இல் New folder ஐக் Create பண்ணி அதற்கு பெயர் எதுவும் கொடுக்காவிட்டால் Windows ஆனது New Folder எனும் பெயரயே default ஆக எடுத்துக் கொள்ளும்.
பெயர் ஏதும் வழங்காமல் வெறுமையாக விட்டுப் பாருங்கள். ஒரு போதும் பெயரில்லாமல் ஒரு போல்டரை உருவாக்க விண்டோஸ் அனுமதிக்காது.


Spacebar அல்லது Delete key போன்றவற்றை திரும்பத் திரும்ப அழுத்தினாலும் New Folder எனனும் பெயரையே windows எடுத்துக் கொள்ளும். அதற்காகத் தான் இந்த முறை  இனி எவ்வவாறு பெயரில்லாமல் ஒரு Folder ஐ உருவாக்குவது என்று பார்ப்போம்


முதலில்ஒரு போல்டரை வழமையான முறையில் உருவாக்கிக் கொள்ளுங்கள் அதை Rename செய்து Alt + 255 டைப் செயுங்கள்.
 ( இதில் இலக்கத்தை டைப் செய்ய Keyboard இல் Numeric keypad ஐப் பயன் படுத்த வேண்டும்)
அப்போது நீங்கள் உருவாகிய Folder ஆனது பெயரில்லாமல் இருப்பதை அவதானிக்கலாம் .

இனியும் My Computer இல் Floppy Drive இன் Icon தேவையா..?

தற்போது Floppy Drive இன் பாவனை இல்லை என்று சொல்லுமளவுக்கு Floppy Drive இன் பாவனை இல்லாமல் போய் விட்டது என்றாலும் விண்டோஸ் இன் My Computer இல் Floppy Drive இன் Icon ஒரு தேவையில்லாத ஒரு Icon ஆக இருக்கின்றது.

இந்த Floppy Drive இன் Icon னை எவ்வாறு My Computer இல் இருந்து தற்காலிகமாக நீக்குவது என்று பாப்போம்

முதலில் Run க்கு சென்று devmgmt.msc என Type செய்து Ok பண்ணவும். அல்லது My Computer இன் Icon இல் Right click செய்து Device Manager என்பதை தெரிவு செய்யவும்.

அப்போது Device Manager ஆனது Open ஆகும்.

அதில் Floppy Disk Drive என்பதன் முன்னால் இருக்கும் + குறியீட்டைக் Click செய்யவும். பின் அதில் வரும் Floppy Disk Drive என்பதன் மேல் Right Click செய்து Disable என்பதை Click செய்யவும்.

அப்போது வரும் "disabling this device will cause it to stop functioning. Do you really want to disable it?" என்ற Meassage box இல் yes என்பதை தெரிவு செய்யவும்.

இப்பொழுது உங்கள் My computer இல் இருந்து Floppy Drive இன் icon மறைந்திருக்கும்.

எதாவது சந்தர்ப்பத்தில் உங்களுக்கு Floppy Drive தேவைப்பட்டால் மேற்கூறிய முறையில் Device Manager க்கு சென்று Floppy Disk Drive ஐ Enable பண்ணிக் கொள்ள முடியும்.

Software களை Install செய்யும் default Path ஐ நிரந்தரமாக மாற்ற .....

பொதுவாக நமது கணணியின் Windows ஆனது C drive இல் install பண்ணப்பட்டிருக்கும். நாம் வேறு மென்பொருட்களை install பண்ணும் போது அது default ஆக C:\Program Files யையே தெரிவு செய்யும். இதனால் C drive இல் Free Space குறையும் இதனால் கணணியின் வேகம் குறைவடையும் . அடிக்கடி Low disk Space எனும் Message தோன்றும். இதில் இருந்து விடுபட நம்மில் சிலர் install பண்ணும் போது C தவிர்ந்த வேறு drive இல் install பண்ணுவார்கள் இதற்காக ஒவ்வொரு முறை install பண்ணும் போதும் மற்றைய drive ஐ தெரிவுசெய்து install பண்ணுவார்கள்
இந்த தொல்லையில் இருந்து விடுபட registry இக்குள் சென்று ஒருதரம் சிறிய மாற்றம் செய்தால் போதும் அதன் பிறகு ஒவ்வொரு முறையும் program install பண்ணும் போதும் அது நாங்கள் மாற்றிய drive யையே default ஆக எடுக்கும்.
இதற்கு முதலில் Start சென்று regedit என type செய்து enter பண்ணவும்.

பிறகு பின்வரும் ஒழுங்கு முறையில் செல்லவும்
HKEY_LOCAL_MACHINE----> SOFTWARE---> Microsoft---> Windows---> CurrentVersion

CurrentVersion என்ற Folder க்குள் இருக்கும் Value களில் ProgramFilesDir என்ற value இருக்கும் இது C:\Program Files என set செய்யப்படிருக்கும் அதில் Mouse வைத்து right click செய்து modify என்பதை click செய்து Value data என்பதில் உங்களுக்கு விருப்பமான drive இல் உள்ள Folder இன் path ஐ Select பண்ணிய பின் OK செய்து வெளியேறவும்.

உங்களுக்கு தெரியுமா..?? FB இல் "Other Messages"

பேஸ்புக்கில் தனிப்பட்ட தகவல்களை Messages மூலம் பரிமாறிக்கொள்ளலாம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

ஆனால் நண்பர்கள் இல்லாத வேறு நபர்களால் அனுப்பப்படும் தகவல்களை பேஸ்புக் மறைத்து விடுகின்றது என்பதை பலர் அறிந்திருக்க மாட்டீர்கள்.

நண்பர்களிடமிருந்து வருகின்ற புதிய தகவல்களுக்கு Messages Folder இல் எத்தனை Messages வந்திருக்கின்றன என்பதை காட்டுகின்றது பேஸ்புக்.

எனினும் வேறு நபர்களினால் அனுப்புகின்ற மெஸெஜ்களை அலெட் செய்யாமல் Other எனும் பால்டரில் அனுப்பி விடுகின்றது.

உடனே உங்கள் பேஸ்புக் கணக்கை லாகின் செய்து Messages பால்டரின் கீழ் இருக்கும் Other என்பதை அழுத்தி எத்தனை தகவல்களை படிக்காமல் தவற விட்டீர்கள் என்பதை பாருங்கள்.

Torrent என்றால்...???

Torrent எனப்படுவது ஒரு குறிப்பிட்ட File களை Web Server இல் இருந்து download பண்ணாமல் பலரது கணணிகளினுடாக விரும்பிய File ஐ பகிர்ந்து கொள்ளும் ஒரு தொழில்நுட்பமாகும்.


Torrent இனுடாக ஒரு File ஐ download பண்ணுவதற்கு நமது கணணியில் μTorrent அல்லது Bittorrent என்ற மென்பொருள் இருத்தல் அவசியம்.

Seeds, Leechers என்றால் என்ன ?
நீங்கள் download பண்ணும் File ஐ முழுமையாக வைத்திருப்பவர்களை இங்கு நாம் Seeds என அழைக்கின்றோம். நீங்கள் download பண்ணும் File ஐ உங்களைப் போல download பண்ணிக் கொண்டு இருப்பவரை Leechers என அழைக்கின்றோம்Torrent வழங்கும் சில இணையத்தளங்கள்
 1. Isohunt.com
 2. Mininova.com
 3. btjunkie.org
 4. ThePirateBay.org
 5. Torrentz.com


Torrent ஊடாக விரும்பிய File ஐ டவுன்லோட் பண்ணுவது எப்படி?
 • முதலில் μTorrent என்ற மென்பொருளை உங்கள் கணணியில் Install பண்ணிக் கொள்ளவும்.
 • பின் மேல் உள்ள Torrent ஐ வழங்கும் எதாவது இணையத்தளத்தில் இருந்து உங்களுக்கு விரும்பிய Torrent File ஐ download பண்ணிக் கொள்ளவும்
 • பின் μTorrent என்ற மென்பொருளை திறந்து அதனுள் இழுத்து விடவும்
 • அவ்வளவுதான் அந்த File ஐ download பண்ணி முடிந்ததும் அந்த File ஆனது My Documents இல் Downloads என்ற folder இல் save செய்யப்பட்டு இருக்கும்.
Torrent ஐ download பண்ணும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்


Torrent ஐ download பண்ணும் போது Seeds அதிகமாக உள்ள File ஐ தெரிவு செய்து download பண்ண வேண்டும் அப்பொழுதுதான் நீங்கள் விரும்பிய File ஐ முழுமையாக வேகமாக download பண்ணி முடிக்க முடியும்.


Seeds கூடிய File களைக் கண்டுபிடிப்பதற்கு நீங்கள் விரும்பிய பெயரைக் கொண்டு தேடினால் கீழ் உள்ள படத்தில் காட்டியவாறு விடை கிடைக்கும் இதில் உள்ள S என்பது Seeds ஐயும் L என்பது Leechers ஐயும் குறிக்கிறது நீங்கள் Seeds கூடியதைக் கண்டு பிடிப்பதற்கு S இன் மேல் Click பண்ணினால் Seeds கூடியது முதலாவதாகவும் Seeds குறைந்தது படிப்படியாக குறைந்து செல்லும் (Descending Order) ஒழுங்கில் அடுக்கப்படும். இதிலிருந்து Seeds கூடியயதைக் கண்டு பிடிக்கலாம்சில வேளைகளில் மென்பொருட்களை download பண்ணும் போது அந்த மென்பொருள் சில நேரங்களில் Virus களினால் பாதிப்படைத்திருக்கக் வாய்ப்புக்கள் உண்டு. அதனால் Torrent இல் மென்பொருள் download பண்ணும் போது அந்த Torrent இனுடன் இருக்கும் அதைப் முன்னதாகவே download பண்ணியவர்களின் Comments ஐ வாசித்தபின் download பண்ணுவது பாதுகாப்பானதாகும்.

XP ல் பொதுவாக ஏற்படும் 25 பிரச்சனைகளைத் தீர்க்க...!!


நமது கணணியை வைரஸ் தாக்கினால் Task manager, registry editor, run dialog box போன்றவற்றை Disable ஆக்கிவிடும். இதனால் நாம் பல சிரமங்களை எதிர் நோக்க வேண்டிவரும்.
இவ்வாறு வைரஸ் இனால் பாதிக்கப்பட்ட கணணியில் Task manager, registry editor போன்றவற்றை Open பண்ணும் போது Error Message மட்டுமே வரும் உதாரணமாக Task manager Open பண்ணினால் "Task Manager has been disabled by your administrator" என்ற Error Message வரும்.

இவ்வாறு வைரசால் Windows XP இல் உண்டாகும் 25 பிரச்சனைகளுக்கான தீர்வு தான் XP Quick Fix என்ற இந்த சிறிய மென்பொருள்

இந்த சிறிய மென்பொருள் மூலம் பின்வரும் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்

    * Enable Task Manager
    * Enable Registry Editor
    * Stop My Documents open at startup
    * Enable Folder Options
    * Restore missing Run dialog box
    * Enable Command Prompt
    * Restore My Computer (Computer) properties
    * Restore Device Manager
    * Fix delay in opening Explorer
    * Restore grayed Explorer and Taskbar toolbars
    * Restore My Documents properties
    * Remove OEM splash and wallpaper
    * Restore My Network Places to Desktop
    * Enable Recovery Console
    * Restore grayed file associations
    * Fix right-click error
    * Fix slow network file/shared/remote
    * Restore Network icon to system tray
    * Fix slow hotkeys
    * Fix CD/DVD drive is missing or not recognized
    * Fix CD autoplay
    * Restore "Send To" context menu item
    * Restore the native ZIP file integration
    * Fix error 1606 couldn’t access network location
    * Error when trying to access Add or Remove/ Program and Features program

மேலுள்ள பிரச்சனைகளில் எதாவது உங்களுடைய கணணிக்கு இருப்பின் அதற்குரிய button ஐக் Click செய்வதன் மூலம் அந்தப் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள முடியும்..

மென்பொருளைத் தரவிறக்க: Click Here...

ஒரு Sec ல் Computer ஐ Shutdown செய்ய...

பொதுவாக கணினியில் உள்ள ஷட்டவுன் வசதியை பயன்படுத்தி அணைக்கும் பொழுது "Saving your settings" , "Windows is Shutting down" போன்ற செய்திகள் வரும்.சில நிமிடங்களுக்கு பின்னர் தான் கணினி அணைக்கப்படும்.

இதெல்லாம் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்யும் கண்கவர் வித்தைகள் தான் . கணினியை அணைக்க சில வினாடியே போதுமானது . இந்த கண்கவர் வித்தைகளை பார்க்க விரும்பாதவர்கள் கீழ்க்கண்ட முறையை பயன்படுத்தி ஒரு சில வினாடியில் கணினியை அணைக்கலாம் .

நீங்கள் Windows Xp பயன்படுத்துபவராயின் உங்கள் கணினியின் Task Manager ரை திறந்து கொள்ளுங்கள். ( Ctrl + Alt + Delete விசைகளை சேர்த்து அழுத்தினால் Task Manager திரைக்கு வரும்).

இந்த Task Manager ல் உள்ள மெனுவில் Shut Down ல் உள்ள Turn Off என்பதை Ctrl கீயை அழுத்திக்கொண்டே கிளிக் செய்யுங்கள்.

ஒரு சில வினாடியில் கணினி அணைந்து விடும்.

Chrome Browser இல் Facebook விளம்பரங்களை தடை செய்ய...!!

சமூக இணையதளமான Facebook-ல் வலது பக்கம் தெரியும் விளம்பரங்கள் பல நேரங்களில் நமக்கு சலிப்பை ஏற்படுத்தும். இந்தப் பிரச்சினையை நீக்கி பேஸ்புக் விளம்பரங்கள் இல்லாமல் பார்ப்பதற்கு ஒரு வழி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் தனக்கென்று தனி இடத்துடன் வலம் வரும் பேஸ்புக் இணையதளத்தின் வலது பக்கம் இருக்கும் விளம்பரங்களை எளிதாக நீக்கலாம்.

நமக்கு உதவ ஒரு நீட்சி உள்ளது. குரோம் உலாவியில் குறிப்பிட்டிருக்கும் பக்கத்திற்கு சென்று Install என்ற பொத்தானை சொடுக்கி குரோம் உலாவியில் எளிதாக நிறுவலாம்.

இனி நாம் பேஸ்புக் இணையதளத்தை திறந்தால் வலது பக்கம் எந்த விளம்பரமும் நமக்கு தெரிவதில்லை. பேஸ்புக்கில் சில சமயங்களில் தேவையில்லாத விளம்பரங்கள் வந்து நம் கவனத்தை திருப்பும்.

ஆனால் இனி எந்த விளம்பர தொந்தரவும் இல்லாமல் பேஸ்புக் இணையதளத்தை பயன்படுத்தலாம். முழுமையாக விளம்பரங்களை தடை செய்தால் பல நேரங்களில் சில இணையப்பக்கங்கள் தெரிவதில்லை. ஆனால் இப்போது நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் விளம்பரம் தடுப்பு பேஸ்புக் இணையதளத்திற்கு மட்டுமே பொருந்தும்.இணையதள முகவரி

ஒரே நேரத்தில் மூன்று Browser களை ஒரே இடத்தில் பயன்படுத்த வேண்டுமா??

இணையதளங்களை வலம் வருவதற்கு அனைவராலும் பயன்படுத்தப்படுவது உலவிகள் மட்டுமே ஆகும். இதற்கு மாற்றாக எதுவும் இல்லை.

எனினும் இணைய பயன்பாட்டு அப்ளிகேஷன்கள் ஒரு சில உண்டு. இவையும் உலவிகளில் வடிவிலேயே தான் இருக்கும்.

இவை இரண்டுக்கும் அதிக வித்தியாசம் ஒன்றும் பெரிதாக இல்லாவிட்டாலும் ஒருசில வசதிகள் இதுபோன்ற அப்ளிகேஷன்களில் உண்டு.

அந்த வகையில் Multibrowser என்னும் மென்பொருள் வாயிலாக ஒரே நேரத்தில் மூன்று உலவிகளில் பணியாற்ற முடியும். அவை இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.0, 8.0, 9.0, நெருப்புநரி உலவி மற்றும் கூகுள் குரோம் உலவி போன்றவை ஆகும்.

இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.

இதில் இருக்கும் அட்ரஸ்பாரில் இணையதள முகவரியினை உள்ளிடவும். பின் என்டர் கீயினை அழுத்தவும். தற்போது நீங்கள் குறிப்பிட்ட வலைத்தளத்தினை காணமுடியும்.

பின் நீங்கள் உலவிகளை தேர்வு செய்து அதற்கிடையேயுள்ள மாற்றத்தினை காண முடியும். மேலும் மூன்று உலவிகளிலும் நீங்கள் குறிப்பிட்ட வலைப்பக்கத்தினை ஒரே இடத்தில் காண முடியும்.ஒரே Click இல் Google,Yahoo, Ask, Wiki, Answers, Youtube, Amazone, bing போன்ற தளங்களில் Search செய்திட..

 
இணையத்தில் தேட நாம் முதலில் நாடுவது கூகுள் ஆகும்.

இதனை விடவும் ஒரு விடயத்தினை ஆழமாகத்தேட ஒரு தளம் உள்ளது.

இந்தத்தளமானது கூகிள், யாஹூ, ஆஸ்க், விக்கிபீடியா, ஆன்சர்ஸ், யூடியூப், அமேசன் போன்ற அனைத்திலும் ஒரே இடத்தில் உடனடியாக தேட வழி செய்கின்றது.

இத்தளத்திற்கு சென்று தேடுதல் கட்டத்திற்குள் என்ன தேடவேண்டுமோ அதற்கான வார்த்தையைக் கொடுத்ததும் தானாகவே ஒவ்வொரு தேடு பொறியிலும் எந்த வார்த்தை அதிகமாக தேடப்பட்டிருக்கிறதோ அந்த வார்த்தைக்கான Suggestion Keyword கொடுக்கப்பட்டிருக்கும் இதிலிருந்து நாம் எந்தத் தளத்தில் தேடவேண்டுமோ அந்தத் தளத்தை சொடுக்கி நாம் தேடியவற்றை விரிவாக பார்க்கலாம்.

மிகவும் இலகுவானதும், விரிவாகவும் தேட இத்தளம் மிகச் சிறந்ததொரு தெரிவாகும்.
அத்தளம் http://www.soovle.com/
 

China Phone ஐ பயன்படுத்தி Computerக்கு எப்படி இணைய இணைப்பை பெறுவது எப்படி...??

இன்று நாம் சைனா மொபைலை பயன்படுத்தி நம்முடைய கம்பியூட்டருக்கு எப்படி இணைய இணைப்பை பெறுவது என்று பார்ப்போம். அதற்கு முதல் சில அடிப்படை அம்சங்கள் உங்கள் போனில் பூர்த்தி செய்ய பட்டு இருக்க வேண்டும்.

GPRS வசதி மற்றும் அதற்கான செட்டிங்ஸ்  உங்கள் போனில் இருக்க வேண்டும்.

ஒரு சில வினாடிகளில் GPRS Settings ஐ பெற்றுக்கொள்ள.....


அடுத்து உங்கள் போனை கணினியில் cable மூலமாக இணைக்கும் போது 3 ஒப்சன் வரும் அதில் COM PORT என்பதை தெரிவு செய்யுங்கள்.
போன் மொடம் ரைவர் கேட்கும் போது , நீங்கள் டவுன்லோட் செய்த போல்டரினுல் USB_Modem_Driver என்ற போல்டர் இருக்கும் அதை கொடுத்து பதிந்து கொள்ளுங்கள்.
அடுத்து நீங்கள் டவுன்லோட் செய்த போல்டரினுல் PhoneSuite என்பதை ஓபன் செய்து கொள்ளுங்கள் பிறகு,
Settings >> Create connection

Operators : China_MOBILEAPN : வாடிக்கையாளர் சேவை முகவருக்கு அழைப்பை மேற்கொண்டு தெரிந்து கொள்ளுங்கள்.
Dialog = ppwap
Mobitel = mobitel3g
Airtel = Airtellive

 

மற்றைய Phone களுடன் (Nokia, Sony Ericson) ஒப்பிடும் போது வேகம் குறைவுதான் காரணம் அவை 3G இது 2G..

ஒரு சில வினாடிகளில் GPRS Settings ஐ பெற்றுக்கொள்ள.....

ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு குறைந்த கட்டனத்தில் Data  சலுகைகளை நமக்கு வழங்கி வருகிறது. நாமும் பல வலையமைப்புக்கு (Mobitel, Airtel, Dialog, Hutch, Etisalat) அடிக்கடி மாறி மாறி வருகிறோம். இருந்தாலும் கையடக்க தொலைபேசியில் அந்த நிறுவனத்துடைய GPRS Settings இருந்தால் மாத்திரமே நாம் இணையத்தை பயன்படுத்த கூடியதாக இருக்கும். இந்த GPRS Settings ஐ எப்படி இலகுவாக பெற்றுக்கொள்வது எப்படி என்பதுதான் இன்றைய பதிவு.


 GPRS Settings நமக்கு புதிதாக ஒரு Mobile வாங்கினால் / ஒரு வலையமைப்பில் இருந்து இன்னும் ஓர் வலையமைப்புக்கு மாறும் போது (Airtel இல் இருந்து Mobitel இற்கு மாறும் போது  Mobitel  உடைய GPRS Settings தேவைப்படலாம்) / தவறுதலாக GPRS Settings அழிக்கப்பட்டால் , போன்ற  சந்தர்ப்பங்களில் நமக்கு GPRS Settings  தேவைப்படுகிறது.


இதனை பெறுவதற்கு வாடிக்கையாளர் சேவைக்கு அழைப்பை மேற்கொண்டால்  குறைந்த பட்சம் 10 நிமிடங்கள் போகும் அவர்கள் நமது அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு அதற்கு பிறகு பெயர் , தொலைபேசி இலக்கம் , மொடல் நம்பர் சொல்லி எப்படியும் செட்டிங்ஸ் வருவதற்கு 15 நிமிடம் எடுக்கும்.இனிஇதையெல்லாம் விட்டுப்போட்டு கீழ் உள்ள முறையை பின்பற்றுங்க 3 செக்கனில் GPRS Settings கிடைத்துவிடும்.

Mobitel
Type #222#

Dialog
Type "GPRS" and send to 678 / Type #107#

Airtel 
Type "ALL" and send to 2222

மேலே சொன்ன முறையில் GPRS Settings  கிடைக்காவிட்டால்  கீழ் உள்ள முறையை பின்பற்றுங்கள்.

Dialog , Mobitel, Etisalat , Airtel, Hutch போன்ற வலையமைப்புக்களுக்கு  Manual settings ஐ பெறுவதற்கு http://settings.gprs.gishan.net

Aircel, Airtel, BSNL, DOCOMO, Reliance, Uninor, Vodafone போன்ற வலையமைப்புக்களுக்கு  Manual settings ஐ பெறுவதற்கு http://nxwiki.blogspot.com

Zip Bag இல் உள்ள பூட்டை திறக்காமலே Bag ஐ திறக்க முடியும்...!! எச்சரிக்கை...!!!

வெளியூர், வெளிநாடு பயணங்களுக்கு Zip Bag ஐ பயன்படுத்துபவரா நீங்கள்?? அப்படியானால் இந்த எச்சரிக்கை உங்களுக்குத்தான் . 

 

Zip Bag இல் பூட்டை திறக்காமலே ஜிப்பை திறந்து அதிலுள்ள விலை மதிப்பு மிக்க பொருட்களை  களவாடவோ அல்லது தேவையற்ற பொருட்களை உள்ளே வைத்து விட்டு திறந்த சுவடே தெரியாமல் மூடிவிட  முடியும் .


அதன் மூலம் மதிப்பு மிக்க பொருட்களையோ  ,பணத்தையோ நீங்கள் இழக்கவோ அல்லது செய்யாத குற்றத்திற்காக நீங்கள் தண்டிக்கப்படவோ  வாய்ப்புள்ளது .கீழ் காணும் வீடியோவை பாருங்கள் விளக்கமாகப்புரியும் .

எனவே எக்காரணம் கொண்டும் விலையுயர்ந்த பொருட்களையோ அல்லது பணத்தையோ Zip Bag இல் வைக்காதீர்கள் .சாதாரணமான துணிகள் போன்றவற்றை வைக்க பயன்படுத்தினாலும் ஜிப்பை நகர்த்தமுடியாத படிக்கு ஏதாவது ஒரு சாதனத்தால்  லாக் செய்யுங்கள் .
இது  உங்களுக்கான ஒரு எச்சரிக்கை பதிவு...
இதை யாரும் தவறான முறையில் பயன்படுத்த வேண்டாம்...

எல்லாவகையான China Phone களுக்குமான PC SUITE...

தற்போது மிகக்குறைந்த விலையில் அதிக வசதிகளுடன் China Phone கள் கிடைக்க கூடியதாய் உள்ளது.. ஆனால் China Phone களை Computer இல் இணைக்கும் PC SUITE கள் அதனோடு வருவதில்லை.. கீழே உள்ள தரப்பட்டுள்ள  China Mobile PC Suite நிறையபேருக்கு உதவும் என நம்புகின்றேன்... இது எல்லாவகையான China Phone களுக்கும் Support செய்யக்கூடியது....
இதன்  மூலம் 

Sms & Contacts களை  Computer இல் சேமிக்கலாம்...
Computer இல் இருந்தவாறே Sms அனுப்பலாம் & வாசிக்கலாம்...
Computer இல் இருந்து Mobile க்கும், Mobile இல் இருந்து Computer க்கும் File களை பரிமாரிக்கொள்ளமுடியும்...
மேலும் பல வசதிகளுடன்.... 

இவ்வார கவிதை: கவிஞனின் மனஎழுச்சி....


இனிமை தரும் கவிதை ஒன்றை
மணி மொழியாய் வடித்திட
நினைத்தேன்....

எண்ணங்கள் கடல் அலையாய்
முட்டி மோதுகின்றன......
வளம் கொழிக்கும் வையகத்தினில்
வார்த்தைக்கு தான் பஞ்சம் உண்டோ..
அன்றேல்........
பழம் போற்றும் தமிழ் மொழிக்கு தான்
பற்றாக்குறையோ.......

இனிமையூட்டும் இயற்கையின்
இன்ப சுவை பற்றி வடிப்பேனோ...
அன்றேல்........
அருட் கொடைதனை அளித்த
அகிலத்தின் அரசனான இறைவனின்
அருட் சிறப்பை பாடுவேனோ.....

வியப்பில் ஆழ்த்தும் விஞ்ஞானத்தின்
வியூகங்களை வரைந்திடுவேனோ....
அன்றேல்.........
அறியாமை என்னும் இருளில்
அடிமைகளாய் வாழ்ந்திடும்
அற்ப மானிடரை கூறிடுவேனோ.......

மனித மனங்களின் இயல்புகளை
மணிகளாய் கோர்த்திட்டு
வார்த்தைகளாய் வார்த்திடுவேனோ...
அன்றேல்......
இதயங்கள் வீணை மீட்ட
இணைந்த கான ஓசையினில்
முத்தாய் துளிர்த்த நட்புறவின்
சிறப்பினை சிற்பமாய் செதுக்கிடுவேனோ.....

கவிதை ஒன்றை வடித்திட
முனைந்தேன்
அடடா என்ன புதுமை......
கரம் கொண்ட என் பேனா
மை துளிர்த்திட....
வெள்ளை கடதாசியும்
வண்ண ஓவியம்
படைத்திட்டதுவே......
                              

எனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011