Total Uninstall utility - புரோகிராமை முழுமையாக நீக்க.!


பெர்சனல் கம்ப்யூட்டரில் பதியப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம் இனி தேவைப்படாது என நாம் உணரும் பட்சத்தில், அதனை அன் இன்ஸ்டால் செய்வதே நல்லது.

இவ்வாறு அன் இன்ஸ்டால் செய்திடுகையில், அதனுடன் இணைந்த பல சிறிய பைல்கள் நம் கம்ப்யூட்டரிலேயே ஒட்டிக் கொண்டு ஹார்ட் டிஸ்க்கின் இடத்தை எடுத்துக் கொள்கின்றன. நாளடைவில் இவையே குறிப்பிட்ட அளவில் நம் டிஸ்க் இடத்தை அடைத்துக் கொள்கின்றன.

இடம் எடுத்துக் கொள்வது மட்டுமின்றி, சில வேளைகளில், இவை மற்ற புரோகிராம்களின் செயல்பாட்டில் குறுக்கிடுகின்றன. இவை குறுக்கிடுவது நமக்குத் தெரிய வராததால், நாம் குழப்பம் அடைகிறோம். நம் பணி நேரம் வீணாகிறது.

பெரும்பாலான புரோகிராம் நீக்கங்களில் இது ஏற்படுகிறது. இந்தத் தொல்லையின்றி, முழுமையாக புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்திட நமக்கு இலவசமாக ஒரு புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. டோட்டல் இன்ஸ்டால் என்னும் இந்த புரோகிராம், முழுமையான முறையில் மிகச் சிறப்பான தொழில் நுட்பத்துடன் செயல்படுவதனைக் காண முடிகிறது.

டோட்டால் அன் இன்ஸ்டால் புரோகிராம், இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்களைத் துல்லிதமாக முதலில் ஆய்வு செய்கிறது. இதன் மூலம் இன்ஸ்டலேஷன் டேக் ஒன்றைத் தயார் செய்கிறது. பின்னர், இதனைப் பயன்படுத்தி, முழுமையாக புரோகிராமினை அன் இன்ஸ்டால் செய்கிறது.
ஒரு அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்திடும் முன், டோட்டல் அன் இன்ஸ்டால் புரோகிராம், சிஸ்டம் முழுவதையும் ஒரு ஸ்நாப்ஷாட் எடுத்துக் கொள்கிறது. அதே போல, புரோகிராம் இன்ஸ்டால் ஆனவுடன், மீண்டும் ஒரு ஸ்நாப் ஷாட் எடுக்கிறது. பின்னர், இரண்டு ஸ்நாப் ஷாட்களையும் ஒப்பிட்டுப் பார்த்து, சிஸ்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஒரு கிராபிகல் காட்சியாகக் காட்டுகிறது. இதில் ரெஜிஸ்ட்ரி மாற்றங்கள்,

 இணைக்கப்பட்ட, மாற்றப்பட்ட, நீக்கப்பட்ட பைல்கள் காட்டப்படுகின்றன. இந்த மாற்றங்களை டோட்டல் அன் இன்ஸ்டால் சேவ் செய்து வைத்துக் கொள்கிறது. நீங்கள் குறிப்பிட்ட அப்ளிகேஷன் புரோகிராமினை அன் இன்ஸ்டால் செய்திடக் கட்டளை கொடுத்தவுடன், அந்த புரோகிராம் இன்ஸ்டால் செய்வதற்கு முன் இருந்த நிலைக்குக் கம்ப்யூட்டர் சிஸ்டத்தினை அமைக்கிறது.
இதன் சிறப்பம்சங்களாகச் சிலவற்றை இங்கு குறிப்பிடலாம்.

1. இன்ஸ்டால் செய்திடுகையில் ரெஜிஸ்ட்ரி மற்றும் பைல் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்தல்.

2. கண்காணிப்புக்குள்ளான புரோகிராம்கள் அன் இன்ஸ்டால் செய்யப்படுகையில், முழுமையான அன் இன்ஸ்டால் பணி மேற்கொள்ளப்படுகிறது.

3. கண்டறியப்பட்ட மாற்றங்களில், குறிப்பிட்ட சிலவற்றைத் தேடி அறிந்து பதிவு செய்கிறது.

4.ரெஜிஸ்ட்ரி மாற்றங்களை இன்ஸ்டால் மற்றும் அன் இன்ஸ்டால் செய்திடப் பயன்படுத்துகிறது.

6. கண்டறியப்பட்ட மாற்றங்கள் குறித்த புள்ளி விபரங்களைக் காட்டுகிறது.

7. கண்டறியப்பட்ட மாற்றங்களை, பயனாளர் விரும்பும் மாற்றங்களை வைத்துக் கொள்கிறது.

8. பயனாளர்களே விரும்பும் வகையில், மாற்றங்களை அமைக்க உதவுகிறது.


உங்கள் மூளையின் சுறுசுறுப்பை அறிய உதவும் App...!!!


உங்கள் மூளை எப்போது சுறுசுறுப்பாக செயல்படுகிறது என்பது உங்களுக்கே தெரியாத ரகசியமாக இருக்கலாம். ஆனால் அதை கண்டுபிடித்து சொல்ல ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது தெரியுமா?

பிரிட்டனை சேர்ந்த உளவியல் வல்லுனர்கள் உருவாக்கியுள்ள மூ-கியூ ( ஐகியூ போல இது மனநிலைக்கானது) எனும் இந்த செயலியை பயன்படுத்தினால், உங்கள் மூளை எப்போது சுறுசுறுப்பாக செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதற்காக, இந்த செயலியை டவுண்லோடு செய்து , அது கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து, அதன் பின்னர் வைக்கப்படும் சோதனையில் பங்கேற்க வேண்டும்.

கேள்விகள் உங்கள் மனநிலையை அறிந்து கொள்ளும் வகையில் அமைந்திருக்கும். அதாவது உற்சாக மனநிலையில் இருக்கிறீர்களா? அல்லது வாடிப்போன மலர்களாக இருக்கிறீர்களா என இந்த செயலி அனுமானித்துக்கொண்டு, அதன் பிறகு உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும் கேள்விகளை கேட்டு சோதனை வைக்கும்.

மொத்தம் ஐந்து முறை இந்த சோதனையில் பங்கேற்றால் போதும். அதனடிப்படையில் உங்கள் செயல்பாட்டை புரிந்து கொண்டு , அறிக்கையை அளிக்கும். அந்த அறிக்கை, உங்கள் மூளையின் செயல்பாடு எந்த நேரத்தில் சிறந்ததாக இருக்கிறது என்பதை உணர்த்தும். அழகாக வரைபட விவரங்களுடன், ஒரு நாளின் குறிப்பிட்ட நேரங்களில் உங்கள் செயல்பாடு எப்படி அமைந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

எந்த நேரத்தில் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது என இந்த செயலி சுட்டிக்காட்டுகிறதோ , அந்த நேரத்தில் உங்களது முக்கியமான பணிகளை வைத்துக்கொள்ளலாம்.

பொதுவாக மனநிலைக்கும், மூளையின் செயல்பாட்டுக்கும் தொடர்பு இருப்பதாக உளவியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். இது குறித்த ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த செயலியின் பின்னே உள்ள ஹங்க்ரி மைண்ட்ஸ் லேப் குழுவினர், இது தொடர்பான ஆய்வை நடத்தி மூ-கியூ செயலியை உருவாக்கி உள்ளனர். உங்கள் மூளையின் ஆற்றல் பற்றி இந்த செயலி தகவல் தருவதோடு, மூளைக்கான பயிற்சியையும் பரிந்துரைக்கிறது. ஆம் மூளைக்கும் பயிற்சி அவசியம் என்கின்றனர்.

இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலம், உங்கள் மூளை உற்சாகமாக இருக்கும் நேரத்தை தெரிந்து கொள்வதோடு, இந்த ஆய்விலும் பங்கேற்ற பெருமையை நீங்கள் பெறலாம்.

சுவாரஸ்யமான செயலிதான். ஆனால் இப்போதைக்கு ஐபோனுக்காகதான் அறிமுகமாகி இருக்கிறது. ஆண்ட்ராய்டு வடிவம் இன்னும் வரவில்லை.

செயலி பற்றிய விவரங்களுக்கு:

Facebook ன் புதிய Moments App வெளியிடு...!!


பேஸ்புக்கின்மூமென்ட்ஸ்என்கிற அப், போனில் இருக்கும் கேமரா புகைப்பட தொகுப்பிலிருந்து நேரடியாக நூற்றுக்கணக்கான புகைப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவுகிறது. இந்த அப் இன்று இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய அப்ளிகேஷனில் முகத்தோற்றத்தை கண்டறியும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் போனில் இருக்கும் கேமரா புகைப்பட தொகுப்பிலிருக்கும் ஒரு படத்தை டேக் செய்யும்போது, இந்தஅப்புகைப்பட தொகுப்பில் உள்ள அதே முகம் உடைய நபரின் அனைத்து படத்தையும் ஸ்கேன் செய்து அவரின் குறிப்பிட்ட புகைப்படங்களை மட்டும் தேர்ந்தெடுக்க வழி செய்கிறது.

மூமென்ட்ஸ் அப்மூலம் தொகுக்கப்பட்ட படங்களை தனிப்பட்ட வகையில் நண்பர்களுக்கு அனுப்பலாம். மேலும் பலமூமென்ட்ஸ்தொகுப்பில் இருக்கும் ஒரு நண்பரை ஸ்கேன் செய்து புதிதாக மற்றொரு மூமென்ட்ஸையும் உருவாக்க முடியும். மேலும், பின்னணி இசையுடன் கூடிய வீடியோவையும் உருவாக்க முடியும்.

ஆண்ராய்டு மற்றும் ..எஸ். ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் இந்த அப்- கூகுள் ப்ளே மற்றும் அப் ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்துக்கொள்ள முடியும்.


Computer ல் Whatsapp பயன்படுத்துவது எப்படி?




இத்தனை நாட்களாக வாட்ஸ் அப் அப்ளிகேஷனை PC-ல் (பர்சனல் கம்ப்யூட்டர்) இருந்து பயன்படுத்த வேண்டும் என்றால், BlueStacks என்ற ஆண்ட்ராய்டு எமுலேட்டர் சாஃப்ட்வேரைத்தான் பயன்படுத்த வேண்டியிருந்தது. இந்த சுற்றுவழி பலருக்கு பிடிக்கவில்லை.

லட்சக்கணக்கான பயனீட்டாளர்கள் வாட்ஸ் அப்பிடம் கம்ப்யூட்டருக்கான சாஃப்ட்வேரை வெளியிடும்படி கோரிக்கை வைத்தார்கள். அதற்கு செவிசாய்த்து இப்போது இன்னும் எளிதாக கம்ப்யூட்டரில் இருந்து வாட்ஸ் அப் இயக்குவதற்கு வெப்-அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளது. இதனால், எந்த சாஃப்ட்வேரையும் நாம் பதிவிறக்கம் செய்ய தேவையில்லை. க்ரோம் பிரவுஸர் இருந்தால் மட்டும்போதும்!

1. ஆப்பிள் iOS ஃபோன்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் வாட்ஸ் அப் அப்ளிகேஷன்களை கம்ப்யூட்டரில் இருந்து இப்போதைக்கு இயக்க முடியாது என்று முதலிலேயே கைவிரித்துவிட்டது வாட்ஸ் அப் டீம். ஆண்ட்ராய்டு, விண்டோஸ், பிளாக்பெர்ரி ஃபோன்களுக்கு மட்டுமே இந்த வசதி!

2. முதலில், ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோரில் இருந்து, லேட்டஸ்ட் வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இன்ஸ்டால்/அப்டேட் செய்துகொள்ள வேண்டும். விண்டோஸ், பிளாக்பெர்ரி ஃபோன் பயன்படுத்துபவர்கள், அதற்கான அப்ளிகேஷன் ஸ்டோர்களில் அப்டேட் செய்து கொள்ளலாம்.

3. கம்ப்யூட்டரில் க்ரோம் பிரவுசர் திறந்து அதில் https://web.whatsapp.com/ என்ற வலைதளத்துக்கு சென்றால், QR கோடு காண்பிக்கப்படும்.

4. உங்கள் ஃபோனில் வாட்ஸ் அப் அப்ளிகேஷன் திறந்து, அதில் Whatsapp Web ஆப்ஷனை(இந்த ஆப்ஷன் எங்கே இருக்கும் என்பதை, https://web.whatsapp.com/ தளத்தின் ஹோம்பேஜிலேயே பார்க்கலாம்) செலெக்ட் செய்தால், QR கோடு ஸ்கேனர் திறக்கும்.

5. இந்த ஸ்கேனர் மூலம், க்ரோம் பிரவுஸரில் காட்டப்பட்டிருக்கும் QR கோடை ஸ்கேன் செய்யுங்கள். அவ்வளவுதான்!

6. அடுத்த சில நொடிகளில் உங்கள் க்ரோம் பிரவுஸரிலேயே, உங்கள் ஃபோனில் இருந்ததுபோல வாட்ஸ் அப் பிரதிபலிக்கும். ஃபோனில் இருக்கும் அனைத்து ஆப்ஷன்கள், வசதிகளும் இந்த வெப் அப்ளிகேஷனில் உள்ளன.

7. வெப் அப்ளிகேஷன் சீராக இயங்குவதற்கு உங்கள் ஃபோன் தொடர்ந்து இன்டர்நெட் இணைப்பில் இருக்கவேண்டும்.

8. டெஸ்க்டாப் நோட்டிஃபிகேஷன் வசதியும் உள்ளது.

9. ஃபோனில் இருப்பதுபோல கான்டாக்ட்ஸ், ஆடியோ, லொகேஷன் போன்றவற்றை ஷேர் செய்யும் ஆப்ஷன்கள் இல்லை. இமேஜ், வெப் கேமரா ஆப்ஷன்கள் மட்டுமே இருக்கின்றன.

10. வாட்ஸ் அப் வெப் அப்ளிகேஷனின் மிகப்பெரிய பிளஸ் என்னவென்றால், நாம் இணையத்தில் பார்க்கும்போது ஷேர் செய்யத்தோன்றும் விஷயங்கள் இத்தனை நாட்கள் வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொள்வது மகா சிரமமாக இருந்தது. இனிமேல், இணையத்தில் பார்ப்பதை எல்லாம் மிக மிக எளிதாக வாட்ஸ் அப்பில் பகிரலாம்.

WhatsApp புது வசதி...! இதில் அப்படி என்ன இருக்கு..!


வாட்ஸ்அப் வெர்ஷன் 2.12.5 நிறைய புது வசதிகளை கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சி என்றாலும் இது நிறைய பிரச்சினைகளை கொண்டு வரும் என்பது மாற்றுக்கருத்தல்ல. இது எப்படி என்றால் இந்த வகை வெர்ஷன் உங்களின் அனைத்து வீடியோக்களையும் பத்திரமாக கிளவுட்டில் சேமித்து வைக்கும். இதில் நீங்கள் வீடியோவை பார்த்து அழித்து விட்டாலும் ஆட்டோ பேக்கப் ஆப்ஷனில் இந்த வீடியோ அப்படியே இருக்கும்.

நாளை வேறு யார் கையில் இந்த ஃபோன் மாட்டினாலும்  அல்லது உங்கள் மொபைல் நம்பர் மாறினாலும் இந்த வீடியோ பத்திரமாக இருக்கும் அபாயம் மற்றும் உபயம் இரண்டும் உண்டு. இது போக தாங்கள் தற்போது இருக்கும் இடத்தை லொகேஷன் ஷேரிங் வசதியை அப்படியே அப்பிள் மேப்ஸில் இருந்து உலகின் எந்த ஒரு மூலையின் இருந்து உங்கள் நண்பர்கள் தெரிந்து கொள்லலாம். இப்ப எங்க இருக்கேன்னு தெரியலை இரு அட்ரஸ் கேட்டு அனுப்புறேன்னு சொல்ல வேண்டியது இல்லை


ஜஸ்ட் லொகேஷன் ஷேர் செய்தால் போதுமானது அவர்களை ஜிபிஎஸ் மூலம் நீங்கள் இருக்குமிடத்துக்கு அழைத்து கொண்டு வந்து விடும் அற்புதமான ஒன்று ஆனாலும் இதுவும் ஆபத்தான ஒன்று தப்பான ஆட்களுக்கு என்பது உண்மை.

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011